சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மோப்பம்".. பிடித்த "தலை".. சிக்கிய எடப்பாடி பழனிசாமி.. ஏற்கனவே "வீடியோ" ஆதாரம்.. இப்ப இந்த மேட்டர்

எடப்பாடி பழனிசாமி குறித்து முக்கிய விஷயம் ஒன்றை ஆதாரமாக்க ஓபிஎஸ் முயன்று வருகிறாராம்

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இப்போது எந்த பொறுப்பில் இருக்கிறார் என்ற குழப்பம், அதிமுகவினருக்கே ஏற்பட்டுள்ளதாம்.. காரணம், அவரது பொறுப்பு குறித்த நிலைப்பாடுகள், டக்கு டக்கென மாறி கொண்டே இருப்பதாக சொல்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி , கடந்த 23-ந்தேதி கூட்டிய பொதுக்குழுவில் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, இந்த பதவிகள் இனி இல்லை என்றும், எடப்பாடியிடம் தலைமை நிலைய செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே இருக்கிறது என்று பொதுவெளியில் பத்திரிகையாளரிடம் தெரிவித்தார் சி.வி.சண்முகம்.

செங்கோட்டையன் இடத்தை பறித்த எடப்பாடி.. பொதுக்குழு உறுப்பினர்கள் டெண்டர் - போட்டு தாக்கும் ஜெ. குரல்! செங்கோட்டையன் இடத்தை பறித்த எடப்பாடி.. பொதுக்குழு உறுப்பினர்கள் டெண்டர் - போட்டு தாக்கும் ஜெ. குரல்!

 சண்முகம் டமார்

சண்முகம் டமார்

மேலும் அதிமுக பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட அனைத்துத் தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம் என்று சிவி சண்முகமும், கேபி முனுசாமியும் சொன்னது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது... அப்போது முதல் இந்த நொடி வரை அதிமுகவில் பூசல்களும், குழப்பங்களும், அதிகரித்து கொண்டே வருகின்றன.. ஆனால், சிவி சண்முகம் இவ்வாறு அறிவித்ததற்க, எதிர்ப்பு தெரிவித்தும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நான் தான் என்று இன்றளவும் உரிமை கோரி வருகிறார் ஓபிஎஸ்..

 இணை ஒருங்கிணைப்பாளர்

இணை ஒருங்கிணைப்பாளர்

இதனிடையே, இணை ஒருங்கிணைப்பாளர் என்று அலுவலக ரீதியாக இருந்த அடையாளங்களை அதிரடியாக நீக்க துவங்கினார் எடப்பாடி பழனிசாமி.. அதாவது, சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தை நிலை நிறுத்தும் வகையில் எடப்பாடியின் அந்த ஆக்‌ஷன் இருந்தது. இதற்கு உதாரணமாக, உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு சின்னம் வழங்குவது தொடர்பாக ஓபிஎஸ் தனக்கு எழுதிய கடிதத்துக்கு பதிலளித்திருந்த எடப்பாடி பழனிசாமி.

ஒருங்கிணைப்பாளர்

ஒருங்கிணைப்பாளர்

"ஒருங்கிணைப்பாளர்" என்ற உணர்வில் தாங்கள் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல என்று தெரிவித்திருந்தார்.. அதே கடிதத்தில் தன்னை "தலைமை நிலையச் செயலாளர் " என்றே எடப்பாடி குறிப்பிட்டிருந்தார்.. இன்னொரு உதாரணமும் தற்போது நிகழ்ந்துள்ளது.. எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் சுய விவரத்தில்
"இணை ஒருங்கிணைப்பாளர்" என்ற பதவியை அகற்றி, தன்னை தலைமை நிலைய செயலாளர் என்றே மாற்றியிருக்கிறார்..

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதன் சாராம்சம் என்னவென்றால், தான், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றால், இனி ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரே அல்ல என்பதையே சொல்லாமல் சொல்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. எடப்பாடி தரப்பு இப்படி ஒரு உஷார் நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் அதற்கு மேல் உஷார்தன்மைக்கு தாவி உள்ளார்... அதாவது, 2 நாட்களுக்கு முன்பு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தன்னை கட்சியின் "இணை ஒருங்கிணைப்பாளராக" காட்டிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி...

Recommended Video

    எம்ஜிஆர் உயில் மட்டுமே ஒரே சான்ஸ்! பொது குழுவால் முடியாது.. ஒற்றை தலைமை பற்றி கு.பா.கிருஷ்ணன் பரபர
     வீடியோ

    வீடியோ

    இந்த மேட்டரைதான் மோப்பம் பிடித்துள்ளது ஓபிஎஸ் டீம்.. இந்த பிரமாணப்பத்திரத்தை ஓபிஎஸ் தரப்பு எடுத்து வைத்திருக்கிறதாம்.. இதை வைத்து என்ன மாதிரி பாயிண்டுகளை கோர்ட்டில் முன் வைக்கலாம் என ஆலோசித்துள்ளார் ஓபிஎஸ்.. ஏற்கனவே, கடந்த மாதம் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலானோர், எடப்பாடியின் சொந்தக்காரர்கள் என்றும், அந்த வீடியோவைதான் ஆதாரமாக சேகரித்து வருவதாகவும் ஓபிஎஸ் தரப்பில் சொல்லி வரும்போது, இப்போது அடுத்த சிக்கலில் வான்டட்டாகவே போய் சிக்கி கொண்டுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி..!

    English summary
    are OPS team preparing key resources about edapadi palanisamy and What is happening in the admk எடப்பாடி பழனிசாமி குறித்து முக்கிய விஷயம் ஒன்றை ஆதாரமாக்க ஓபிஎஸ் முயன்று வருகிறாராம்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X