"பூனைக்கு மணி".. வண்டிய சைஸா திருப்பும் பாமக.. கிட்ட கிட்ட அங்கே நெருங்கி போகுதே.. அப்ப திருமாவளவன்?
திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க வாய்ப்பு குறைவு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்
சென்னை: பாமக யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்பது மிகப்பெரிய சஸ்பென்ஸாகவே நீடித்து கொண்டிருக்கிறது.. இப்பேர்பட்ட சூழலில் சில தகவல்கள் அதுபற்றி கசிந்து வருகின்றன.
கடந்த சில தினங்களாகவே, திமுக கூட்டணியில் பாமகவின் பெயரும் அடிபட்டு வருகிறது.. பாமகவை பொறுத்தவரை, திமுகவுடன் கூட்டணி வைக்க நிறைய ஆர்வம் காட்டுவதாகவே தெரிகிறது...
அதேபோல, திமுகவும் இதுவரை பாமகவுடன் கூட்டணி வேண்டாம் என்று சொல்லவில்லை.. 4 சதவீதம் வாக்கு வங்கியை ஸ்ட்ராங்காகவே பாமக இப்போதும் வைத்துள்ளது.. வேல்முருகன் உட்பட பலர் துணையாக இருந்தாலும், பாமகவை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ளவே திமுகவும் விரும்பும் என்றே தெரிகிறது..

டைரக்ட் அட்டாக்
அதற்கேற்றபடி, அதிமுக, பாஜகவையும் பாமக அட்டாக் செய்து வருவதால், யாருடன்தான் திமுக கூட்டணி வைக்க போகிறது என்ற குழப்பமும் நிலவி கொண்டிருக்கிறது. ஆனால், எப்படி பார்த்தாலும் அதிமுகவுடன்தான் பாமக கூட்டணி வைக்கும் என்கிறார்கள்.. காரணம், கடந்த முறை டயர் நக்கி என்றெல்லாம் கடுமையாக அதிமுகவை விமர்சித்தது பாமகதான்.. ஆளுநரிடம் அதிமுக மீதான ஊழல்புகார்களை தந்ததும் பாமகதான்.. அப்படி இருந்தும் கடைசியில், அதிமுகவுடன்தான் பாமக கூட்டணி வைத்தது.. அதனால் இந்த முறையும் அதிமுகவுடனேயே கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாகவும், அதனாலேயே மத்திய அரசை பாமக இதுவரை வெளிப்படையாக எதிர்க்கவில்லை, விமர்சிக்கவும் இல்லை என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மக்கள் நலக்கூட்டணி
அதுமட்டுமல்ல, எப்படி பார்த்தாலும், கொங்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் வன்னியர் ஓட்டுக்களும் தேவையாக இருக்கின்றன.. தற்சமயம் பிளவுபட்ட அதிமுகவால் எந்த அரசியல் லாபமும் இல்லை என்று பாமக நினைத்தாலும், பிளவுபட்ட அதிமுக என்று அன்புமணி விமர்சிக்க 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன.. முதலாவதாக, சிவி சண்முகம் போன்றோர் வளர்ச்சியை பாமக ஏற்கவில்லையாம்.. அடுத்ததாக, "அதிமுகவுடன் தங்களுக்கு கூட்டணி இல்லை" என்பதை திமுகவுக்கு பகிரங்கப்படுத்தவே அதிமுகவை விமர்சித்தார் அன்புமணி என்கிறார்கள். இப்படி எத்தனையோ யூகங்கள் வட்டமடித்து வரும் நிலையில், இன்னொரு முக்கிய தகவல் கசிந்து வருகிறது.

ஸ்கெட்ச்
திமுகவுடன் கூட்டணி வைக்கவே பாமக விரும்புகிறதாம்.. இதற்கு அமைச்சர் துரைமுருகன் மூலம் காய்நகர்த்தல்கள் நடந்து வருகிறதாம்.. கடந்த முறை தேர்தலின்போதும், பாமக - திமுக கூட்டணிக்கு துரைமுருகன் பெரும் முயற்சி எடுத்ததாக சொல்லப்பட்டது.. வன்னிய சமுதாய வாக்குகளை துரைமுருகன் ஓரளவு பெற்றுவிடுவார் என்றாலும், வடமாநில பெல்ட்டை மொத்தமாக வளைக்க பாமக தங்களுடன் இருப்பதுதான் சரியென்றும், மெஜாரிட்டியை நிரூபிக்க அது வசதியாக இருக்கும் என்றும் அப்போது ஸ்கெட்ச் போடப்பட்டது.. இப்போதும் ஒரே சமுதாய உணர்வின் அடிப்படையில் துரைமுருகனை எப்போதுமே பாமகவுக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால், இந்த முறையும் அதற்கான முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள்.

கதம் கதம்
அதற்கேற்றவாறே, தற்போது பாமகவின் செயல்பாடுகளும் திமுகவை அனுசரித்தே நடந்து கொள்வதாக தெரிகிறது.. ஆளுநரைக் கண்டித்து அனைவரும் வெளிநடப்பு செய்ய, 'ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக' பாமகவும் ஒரு பஞ்ச் வைத்துவிட்டு போனதும், கவனமாக உற்றுநோக்கப்படுகிறது. இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. அநேகமாக பாமக சார்பில் மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் 'சித்திரை முழு நிலவு' விழாவுக்கும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. எனவே, நடப்பதையெல்லாம் வைத்து பார்த்தால், திமுகவுடன் பாமக நெருங்கி வருவதாகவே தெரிகிறது.

சிண்டு முடியுதே
ஒருவேளை, இந்த கூட்டணி சாத்தியமாகுமா? அப்படி சாத்தியமானால், விசிக என்ன செய்ய போகிறதோ? என்ற சந்தேகமும் வட்டமடிக்கின்றன.. அறிவாலயத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழாவில், திருமாவளவன் பங்கேற்காமல் இருந்ததையும், "சினிமா உலகம் கார்ப்பரேட்மயத்துக்கு இரையாகிவருகிறது, ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆவது?" என்று திருமாவளவன் பேசியிருந்ததையும், ஒரு தரப்பு முடிச்சு போட்டு கொண்டிருக்கிறது.. அதேசமயம், புதுக்கோட்டை தீண்டாமைச் சம்பவத்தில் அமைச்சர்கள் யாரும் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது வருத்தமாக இருக்கிறது என்று திருமாவளவன் ஓபனாகவே சொல்லி உள்ளதையும் சிலர் சுட்டிக்காட்டி சிண்டு முடிய துவங்கி உள்ளனர்.. என்ன நடக்க போகிறதோ? பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications