4800 கோடியாமே.. சீனில் வந்த எடப்பாடி மகன்.. திமுகவுடன் "திரைமறைவு உறவு".. ஓபனாக உடைத்த ஓபிஎஸ் டீம்
சென்னை: திமுகவும், எடப்பாடி பழனிசாமியும், சீக்ரெட் டீல் வைத்துள்ளதாக, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளனர்.. ஒன்றிணைவோம் வாருங்கள் என்று ஒரு பக்கம் ஓபிஎஸ் அழைப்பு விடுத்து வரும் நேரத்தில், எடப்பாடியை டேமேஜ் செய்யும் போக்கும் தொடர்ந்து நடந்து வருகிறது.
Recommended Video
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான பேச்சுக்கள் இந்த 2, 3, நாட்களாகவே அடிபட ஆரம்பித்துள்ளன.. ஒற்றை தலைமை என்ற பேச்சையே ஓபிஎஸ் எடுக்கவில்லை..
ஒன்றாக பயணிப்போம், சேர்ந்தே கட்சியை வழிநடத்துவோம், அன்புசகோதரர் என்றெல்லாம்தான் பாசமான வார்த்தைகளை உதிர்த்து வருகிறார்..
அதிமுக பொதுக்குழு வழக்கு...எடப்பாடி பழனிசாமி அப்பீல்..ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் கேவியட் மனு

கோபம்
தன்னுடைய இத்தனை நாள் கோபத்தையும், ஆதங்கத்தையும், அவர் வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை.. இதுதான் ஓபிஎஸ்ஸின் பக்குவப்பட்ட அரசியல்.. ஆனால், எடப்பாடி, தற்காலிக பொதுச்செயலாளர் என்ற போஸ்டிங்கில் உட்கார்ந்து கொண்டு, செல்லுமிடமெல்லாம் ஓபிஎஸ்ஸை எப்படி தரக்குறைவாக பேசினார்.. சாபம் விடாதக்குறையாக அவரை திட்டி திட்டி தீர்த்தார்.. இன்று கட்சி நலனுக்காக இருப்பவர் ஓபிஎஸ் மட்டுமே என்று அவரது ஆதரவாளர்கள் பேசி வருகிறார்கள்.

கண்டிஷன் + சீக்ரெட்
இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ், பிரபல சேனல் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொன்ன கருத்துக்களின் சுருக்கம் இதுதான்: "திமுகவை ஓபிஎஸ் கண்டிக்கவில்லை என்கிறார்களே, அது எப்படி சொல்லலாம்? எத்தனை கூட்டங்களில் திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகளை ஓபிஎஸ் கண்டித்துள்ளார் தெரியுமா? இன்றைக்கு இருக்கிற முன்னாள் அமைச்சர்களுக்கெல்லாம் ஓபிஎஸ்ஸை பிடிக்கவில்லை.. ஏன் பிடிக்கல.. ஏனென்றால், திமுக அட்டூழியத்தை எடப்பாடி ஆதரிக்கிறார்.. என்ன வேணாம்னாலும் செய்து கொள்ளுங்கள்.. எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளுங்கள்.. லாபம் எடுத்துக் கொள்ளுங்கள்.

அநியாயம்
இப்படிப்பட்ட சுதந்திரத்தை கடந்த அதிமுக காலத்தில் திமுகவுக்கு தந்ததே எடப்பாடி பழனிசாமிதான்.. ஆனால், இதற்கு ஓபிஎஸ் அப்போதே எதிர்ப்பை காட்டினார்.. கொஞ்சமாவது நியாயமா இருங்கப்பா, இப்படியெல்லாம் அநியாயத்துக்கு துணை போகாதீங்க என்று துணிந்து சொன்னவர்தான் ஓபிஎஸ்... அதேபோல மகன் விஷயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.. வெளிப்படையாக மக்களிடம் தன் மகனை கொண்டு வந்து, மக்கள் பிரதிநிதியாக அமர்த்தியவர் ஓபிஎஸ்.

வி.வி.ஐ.பி.
தன் மகனுக்காக ஒன்றும் நியமன பதவியை அவர் வாங்கி கொள்ளவில்லை... ஈவிகேஎஸ்ஸுக்கு எதிராக களத்தில் இறக்கிவிடப்பட்டு, 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் மகனை வெற்றி பெற வைத்துள்ளார்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி, மகனை அரசியலுக்கு கொண்டு வராமலேயே, பணத்தை கொட்டி அத்தனை அரசியலையும் செய்து வருகிறார்.. பிரசாந்த் கிஷோர் இங்கே திமுகவுக்கு வேலை செய்தாரே அந்த மாதிரி, எடப்பாடிக்கு வேலை செய்த விவிஐயுடன், துணையாக நின்றது யார்? இவர் மகன்தான்..

டைரக்ஷன்
நீங்களே எடப்பாடியிடம் போய் கேளுங்கள், அனைத்து நிர்வாக பொறுப்பும் யாரிடம் தந்துள்ளார் என்று கேட்டு பாருங்கள். ஓபிஎஸ் மகன் யூனிபார்ம் போட்டுட்டு ஸ்கூலுக்கு வருகிறார்.. ஆனால், அதிகாரப்பூர்வமாக இல்லாமல் திரைமறைவில் பின்னின்று மகனை வைத்து இயக்கி கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி... ஆனால், மக்களிடம் நேரடியாக சென்று களத்தில் நின்று போராடி வென்றவர் ஓபிஆர்..

+4800 கோடி
எடப்பாடிக்கு நிறைய பிரச்சனை இருக்கிறது.. ஒருபக்கம் கொடநாடு விவகாரம், இன்னொரு பக்கம் 4800 கோடி ரூபாய் சம்மந்திக்கு கொடுக்கப்பட்ட வழக்கு, என ஏகப்பட்ட பிரச்சனை அவருக்கு இருக்கு.. இந்த 4800 கோடி ரூபாய் கேஸ் சுப்ரீம்கோர்ட்டுக்கு போயாச்சு.. சிபிஐக்கு இந்த வழக்கு போய்விடுமோ என்று பயந்து கொண்டிருந்த நேரத்தில், அந்த வழக்கு திரும்பி தமிழக அரசிடமே வந்துள்ளது.. அதுவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்துவிட்டது.. இப்போது எடப்பபாடியின் வழக்கு முதல்வர் ஸ்டாலினின் கையில் உள்ளது.

அந்தரங்க உறவு
அதிமுகவை நான் பிளவுபடுத்தி வைத்திருக்கிறேன், என் மீதான வழக்கில் இருந்து என்னை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று திமுகவுடன் ஏதோ அந்தரங்க உறவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது என்பதே இன்று தொண்டர்களின் எண்ணமாக உள்ளது.. இதுதான் எனக்கும் சந்தேகமாக இருக்கிறது" என்றார்.. ஓபிஎஸ் - திமுக இடையே ரகசிய உறவு என்ற சலசலப்பு போய், எடப்பாடி - திமுக இடையே அந்தரங்க உறவு என்ற முணுமுணுப்பு அதிமுகவில் ஒலிக்க தொடங்கி உள்ளது.. இதில் நடுவில் மாட்டிக் கொண்டு விழிப்பது திமுகதான் போலும்..!