சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேட்டுச்சா.. 2 பேரும் ஒன்னா சேரபோறாங்களாம்.. நாளும் குறிச்சாச்சு.. தி.நகர் வீட்டில் ஒரே பரபரப்பு போல

சிகலாவும் ஓபிஎஸ்ஸும் விரைவில் சந்திக்க போவதாக செய்திகள் கசிந்துள்ளன

Google Oneindia Tamil News

சென்னை: பல நாள் காத்திருந்த சம்பவம் அதிமுகவில் நடக்க போகிறதாம்.. பிரிந்தவர்கள் ஒன்று சேர போகிறார்களாம்.. அதற்கான நாளும் குறிக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.. இது தொண்டர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறது.. என்னவாம்?
அதிமுகவில் பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை.. எப்படியும் எம்பி தேர்தல் வரை இந்த ஒற்றை தலைமை விவகாரம் ஓடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கூட்டணியில் உள்ள பாஜகவும் நேரடியாக தலையிட்டு இவர்களை சமாதானப்படுத்தவில்லை.. ஆனால், மறைமுக அழுத்தங்களை தர துவங்கி உள்ளது.

கிண்டல் பண்ணுவாங்கம்மா.. 'அவங்களே கப்சிப்.. இப்போ வேணாம்’.. சசிகலா திட்டத்தை 'புஸ்’ ஆக்கிய ஸ்டாலின்! கிண்டல் பண்ணுவாங்கம்மா.. 'அவங்களே கப்சிப்.. இப்போ வேணாம்’.. சசிகலா திட்டத்தை 'புஸ்’ ஆக்கிய ஸ்டாலின்!

 கறார் கறார்

கறார் கறார்

எடப்பாடியின் பிடிவாதம் குறையவே இல்லை.. பாஜக சொல்லியும் காதில் வாங்கவில்லை.. ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா 3 பேரையும் மட்டும் கட்சிக்குள் இணைத்து கொள்ளும்படி நிர்ப்பந்திக்க கூடாது என்றும், தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க, அறிவிக்க செய்யும்படியும் மேலிடத்தை கேட்டுக் கொண்டு வருவதாக தெரிகிறது.. பாஜகவை ஒரேடியாக எதிர்க்க முடியாத அளவுக்கு பலவித நெருக்கடிகள் கலந்த சூழல், எடப்பாடிக்கு இருந்தாலும்கூட, தன் முடிவில் உறுதியாக இருந்து வருகிறார்.

 மீட்டிங் எப்போது

மீட்டிங் எப்போது

மற்றொருபக்கம், ஓபிஎஸ், தினகரன், சசிகலா 3 பேருமே எப்போது வேண்டுமானாலும் ஒன்று சேரக்கூடிய நிலைமையில்தான் இருக்கிறார்கள்.. இருவருக்கும் இடையே அரசியல் புரிதல் இருந்து வரும் நிலையில், இவர்களின் சந்திப்பு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் இவர்களது ஆதரவாளர்களிடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.. இதில், கூட்டணி தொடர்பாக, கடந்த சில தினங்களாகவே, டிடிவி தினகரனை விரைவில் சந்திக்கக்கூடும் என்று ஓபிஎஸ் தரப்பில் இருந்தே செய்திகள் பரவிக் கொண்டுதான் இருக்கின்றன.. இவர்கள் 2 பேரும் நேருக்கு நேர் சந்தித்து பேசி வருடக்கணக்காகிறது என்பதால், இந்த சந்திப்பை இரு தரப்புமே ஆர்வத்துடன் எதிர்கொண்டு வருகிறது.

 வைத்தியலிங்கம்

வைத்தியலிங்கம்

அதேபோல, சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் சந்திக்க போவதாக, கடந்த ஒரு வருட காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது.. கடந்த தேவர் ஜெயந்தியின்போதே இருவரும் பசும்பொன்னில் சந்திக்க வாய்ப்பு என்றார்கள்.. இந்த வருடமும் இதையே சொன்னார்கள்.. ஆனால், இதுவரை சந்திப்பு நடக்கவில்லை.. ஒவ்வொரு முறை சுற்றுப்பயணங்களின்போதும், ஓபிஎஸ்ஸை ஏதாவது ஒரு ஊரில் சசிகலா சந்தித்து பேசுவார் என்றார்கள்.. அதுவும் நடக்கவில்லை.. 2 மாதங்களுக்குமுன்பு, ஒரு கல்யாணத்தில், வைத்திலிங்கம் திடீரென சசிகலாவை சந்தித்து பேசினார்..

பரஸ்பரம்

பரஸ்பரம்

2 பேருமே பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.. அன்றைய தினம் வைத்திலிங்கத்திற்கு பிறந்தநாள் என்பதால், சசிகலாவுக்கு சாக்லெட் தந்தார்.. தன்னுடைய நீண்டகால விசுவாசியான வைத்திலிங்கத்தை சசிகலாவும் மனமார வாழ்த்தினார்.. இதனால், ஓபிஎஸ் + சசிகலா இருவரும் சந்திக்க வாய்ப்பிருப்பதாக அப்போதும் செய்திகள் பரவின.. ஆனால், அதுவும் நடக்கவில்லை.. தஞ்சாவூரில் இந்த தலைவர்களை சந்திக்க வைக்க ஏற்பாடு நடப்பதாக 4 நாட்களுக்கு முன்பும் செய்திகள் பரவின.. அதுவும் நடக்கவில்லை.

 T Nagar வீடு

T Nagar வீடு

சில மாதங்களுக்கு முன்பு, "தவறு செய்தவர்கள் மனம் திரும்பி வந்தால், அவர்களை ஏற்பதுதான் தலைமைக்கு அழகு" என்று எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் வைத்து கொண்டே ஓபிஎஸ் பேசியதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. இப்போது விஷயம் என்னவென்றால், ஓபிஎஸ்ஸூம் சசிகலாவும் விரைவில் சந்திக்க போவதாக இன்னொரு செய்தி கிளம்பி உள்ளது.. ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி, அமைதி பேரணி நிகழ்ச்சி சென்னையில் நடக்க உள்ளது.. இந்த நிகழ்ச்சியில் பன்னீர்செல்வத்துடன் இணைந்து பங்கேற்பது குறித்து, தன் ஆதரவாளர்களுடன் சசிகலா, நேற்று ஆலோசனை நடத்தினாராம்..

 ப்ளான் 1

ப்ளான் 1

மறைந்த ஜெயலலிதாவின் 6வது நினைவு தினம் டிசம்பர் 5ம் தேதி அனுசரிக்கப்படுகிறது... அன்றைய தினம், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, அவரது நினைவிடத்தில், கடந்த வருட நினைவு தினத்தன்று, எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் ஒன்றாக சேர்ந்து மரியாதை செலுத்தினர்.. ஆனால், இப்போது இவர்கள் பிரிந்துள்ளனர்.. தனித்தனி அணியாக செயல்பட்டு வருவதால், எம்ஜிஆர், ஜெயலலிதா சம்பந்தப்பட்ட நிகழ்வு என்றாலும்சரி, கட்சி நிகழ்வு என்றாலும்சரி, தனித்தனியாகத்தான் பங்கேற்று வருகிறார்கள்..

 ப்ளான் 2

ப்ளான் 2

அந்தவகையில், இந்த முறையும் ஜெயலலிதா நினைவு தினத்தன்றும் தனித்தனி அணியாக வந்து மரியாதை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது... ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், எப்படியும் ஓபிஎஸ் வரஉள்ள நிலையில், அவருடன் கைகோர்க்கலாம் என்று சசிகலா ஆதரவாளர்கள் சொல்லி வருகிறார்களாம்.. ஏற்கனவே இது குறித்து, ஆதரவாளர்கள் பலமுறை சொல்லிவரும் நிலையில், சென்னை தி.நகர் வீட்டில் ஆதரவாளர்களுடன் சசிகலா இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது. அப்போது, ஓபிஎஸ் சந்திப்பு குறித்து கருத்துக்களும் எழுந்துள்ளதாக சொல்கிறார்கள்..

 இணையும் கரங்கள்

இணையும் கரங்கள்

கடந்த வருடம், ஜெ.நினைவுநாளின்போது, சசிகலா மெரினாவுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வந்தது.. ஆனால், தொற்று உச்சத்தில் இருந்ததால், மெரினாவுக்கு அவர் வரவில்லை என்று கூறப்பட்டது.. இப்போது மீண்டும் அதே பேச்சு எழுந்துள்ளது.. ஓபிஎஸ்ஸுக்கும் சரி, சசிகலாவுக்கும் சரி, ஜெயலலிதா சமாதி என்பது மிக முக்கியமான இடமாகும்.. அந்தவகையில், இந்த இடத்தில் இரு தரப்பு அணியும் சந்திக்க நேரிடுவதாக சொல்வது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. "பிரிந்தவர்கள் எல்லாரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று ஓபிஎஸ் வலியுறுத்திக்கொண்டே இருக்க, அதே வார்த்தையை சசிகலாவும் கடந்த 2 வருடமாக சொல்லிக் கொண்டேயிருக்க, கடைசியில் இவர்கள் 2 பேரின் அணி மட்டும்தான் சேரப்போவதாக தெரிகிறது.. பார்ப்போம்..!!

English summary
Are VK Sasikala and OPS willing to meet and When will the meeting take place
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X