வீடுகளில் புதிய சோலார் மின் இணைப்பு வாங்க போறீங்களா.. அமைச்சர் நிர்மல் குமார் குட்நியூஸ்
சென்னை: வரும் நாட்களில் வீடுகளில் சோலார் பேனல் மானியம் விலையில் அமைப்பதில் தொடங்கி, அனைத்து வகை சோலார் மின்னு உற்பத்திக்கும் செயலி உருவாக்கப்பட உள்ளது. செயலிகள் மூலமாக புதிய சோலார் மின் இணைப்பை பெறுவதும் , உற்பத்தி செய்வதும், மின்வாரியத்திற்கு மின்சாரத்தை வழங்குவதும் ஊக்குவிக்கப்படும். இதற்காக விரிவான கொள்கை சோலார் மின் உற்பத்தி தொடர்பாக பசுமை எரிசக்தி துறையில் திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பேட்டியின் போது கூறினார்.
சென்னை கிண்டியில் ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள எரிசக்தி ஆய்வகம் மற்றும் ஆற்றல் சேமிப்பு அமைப்பை எரிசக்தி துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் ஐஐடி வல்லுனர்களோடு ஆய்வு நடத்தினார். ஆய்வகத்தின் செயல்பாடுகள் மற்றும் சேமிப்பு அமைப்பு தொடர்பாக பேராசிரியர்கள் விரிவாக விளக்கினர்...

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், "பசுமை எரிசக்தி துறையில் சோலார் மின்சாரம் அமைக்க கடந்த திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது. விதிகளை மீறி பல்வேறு குளறுபடிகள் பசுமை எரிசக்தி துறையில் அரங்கேறி இருந்தது. வரும் நாட்களில் சோலார் பேனல் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை பேட்டரி பேக்கப் மூலம் சேமித்து வைக்க திட்டமிட்டுள்ளோம்
இதற்காக ஐஐடியில் மின் சேமிப்பு கலங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது...
வரும் நாட்களில் வீடுகளில் சோலார் பேனல் மானியம் விலையில் அமைப்பதில் தொடங்கி, அனைத்து வகை சோலார் மின்னு உற்பத்திக்கும் செயலி உருவாக்கப்பட உள்ளது. செயலிகள் மூலமாக புதிய சோலார் மின் இணைப்பை பெறுவதும் , உற்பத்தி செய்வதும் , மின்வாரியத்திற்கு மின்சாரத்தை வழங்குவதும் ஊக்குவிக்கப்படும். இதற்காக விரிவான கொள்கை சோலார் மின் உற்பத்தி தொடர்பாக பசுமை எரிசக்தி துறையில் திட்டமிடப்பட்டுள்ளது...
மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கர்நாடகா அரசு தன்னிச்சையாக எந்தவித கட்டுமானத்தையும் மேற்கொள்ள அனுமதிக்கவில்லை..மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநிலம் கட்டுமானத்தை மேற்கொள்ள எந்த தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை என கூறும் கருத்து தவறானது.
எந்த மாதிரியான முயற்சிகள் மேற்கொண்டால் அணைகட்டும் நடவடிக்கையை தடுக்க முடியும் என முதல்வர் தொடர்ச்சியாக பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கர்நாடக முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்து மேகதாது விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார்.
தமிழகத்தைப் பொறுத்த மட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம் , தொடர்ந்து தமிழக அரசு இதற்கான அழுத்தத்தையும் வழங்கும். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்விவகாரத்தில் மக்கள் மாளிகை வழிகாட்டுதல் ஏற்புடையதல்ல. பாஜக ஆளும் மாநிலங்களில் அவரவர்களின் மாநில மொழி பாடலுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
