சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாலியல் பெண் புரோக்கருடன்.. நடு ரோட்டில் வாய்ச் சண்டை.. நகையைப் பறித்துச் சென்ற ஆயுதப் படை போலீஸ்!

பாலியல் தொழில் செய்யும் புரோக்கரிடம் ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த ஆயுதப்படை காவலர்கள் இருவர், பெண்ணை மிரட்டி நகைகள் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: எல்லாமே ஆன்லைன் என்றாகி விட்ட நிலையில் பாலியல் தொழிலும் இப்போது ஆன்லைனில் கொடி கட்டிப்பறக்கிறது. பூந்தமல்லியில் ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் நடத்தி வந்த பெண்ணிடம் பணம் கட்டி ஏமாந்த ஆயுதப் படை போலீசார் அந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்றதாக எழுந்த புகாரை அடுத்து கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லியைச் சேர்ந்தவர் நிஷா 28, இவர் பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது அவரை மூன்று பேர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் வாக்குவாதம் முற்றியதால் கைகலப்பாக மாறியது. இதையடுத்து நிஷா அங்கிருந்தவர்களுடன் உதவியுடன் 3 பேரையும் பிடித்து வைத்துக் கொண்டு பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

Armed policemen clash with woman broker in bus stand

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் சார்லஸ் வேளாங்கண்ணி 30, மோகன் 28, ஆகிய இருவரும் ஆயுதப்படை பிரிவில் காவலர்களாக பணியாற்றி வருவதும் இவர்களுடன் வந்தவரின் பெயர் ராஜசேகரன் 28 என்பதும் தெரியவந்தது.

நண்பர்களான மூன்று பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் தொழில் செய்யும் புரோக்கரான நிஷாவை தொடர்புகொண்டு பெண் வேண்டும் என கேட்டுள்ளனர் அதற்கு முன் பணமாக 20,000 ரூபாயை வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பினார். அதன் பிறகு நிஷாவின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது.

இரண்டு மாதங்கள் கழித்து செல்போன் ஆன் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து செல்போன் நம்பரை வைத்து முகவரியை கண்டுபிடித்து கடந்த வாரம் நிஷாவின் வீட்டிற்கு சென்றனர். தங்களை விபசார தடுப்புப் பிரிவு போலீசார் எனக் கூறி மிரட்டி, அந்த தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் இருந்து 14 சவரன் நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு தப்பிவிட்டனர்.

மநீம என்ற பெயரே சரியில்லை... கட்சியை கலைத்து விடுங்கள் கமல்... செல்லூர் ராஜு சொல்கிறார் மநீம என்ற பெயரே சரியில்லை... கட்சியை கலைத்து விடுங்கள் கமல்... செல்லூர் ராஜு சொல்கிறார்

சில தினங்களுக்கு முன்பு 3 பேரையும் பூந்தமல்லியில் பார்த்த நிஷா நடுரோட்டில் சண்டை போட்டு பொதுமக்கள் உதவியுடன் அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
Armed policemen clash with woman broker Nisha in Poonamalli bus stand near Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X