விஜய் ஜாதகத்தில் சுக்கிர திசை! 2034 வரை அசைக்க முடியாது! அண்ணாமலைக்கும் யோகம்! ஷெல்வி கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ஜாதகத்தில் 2034 வரை சுக்கிர திசை இருப்பதால் அரசியலில் அவர் நீண்ட காலத்திற்கு அசைக்க முடியாத சக்தியாக இருப்பார் என பிரபல ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார். அது போல் அண்ணாமலை விரைவில் மத்திய அமைச்சராகும் யோகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாபிக், நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் தேர்தல் செயல்பாடுகளும் அதன் எதிர்காலமும் தான். பல அரசியல் விமர்சகர்கள் விவாதித்து வரும் நிலையில், பிரபல எதார்த்த ஜோதிடர் ஷெல்வி, ஆதன் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Astrologer Shelvi Predicts Vijay

அதில் விஜய், உதயநிதி மற்றும் அண்ணாமலை ஆகியோரின் ஜாதகங்களை அலசி, தமிழக அரசியலின் எதிர்காலம் குறித்து அதிரடியான பல கணிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்துப் பேசிய ஜோதிடர் ஷெல்வி, அவரது ஜாதகத்தில் பலமான 'நீச்சபங்க ராஜயோகம்' இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் அவருக்கு ராகு புத்தி நடந்ததால், யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அண்டர் கரண்ட் (Undercurrent) வேலை செய்ததாகக் கூறுகிறார்.

"பலரும் விஜய்க்கு 100 இடங்கள் கூட கிடைக்காது என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்த வேளையில், தவெக 108 இடங்களைக் கைப்பற்றி சாதித்ததே ஒரு சூறாவளி வெற்றி தான்" என்று அவர் பாராட்டியுள்ளார்.

இருப்பினும், தவெக ஆட்சி அமைந்தாலும் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறை விஜய் சில சவால்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும் என்றும், கூட்டணி தர்மத்தை அவர் சரியாகக் கையாண்டால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது என்றும் அவர் கணித்துள்ளார்.

விஜய்யின் நிர்வாகத் திறமை பற்றிக் கணித்த ஷெல்வி, அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் போல மிகவும் கண்டிப்பான (Terror) ஒரு தலைவராக உருவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சட்டம் ஒழுங்கு விவகாரம், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற மிக முக்கியமான விஷயங்களில் விஜய் எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டார்.

தேவைப்பட்டால் குற்றவாளிகளுக்கு எதிராக 'என்கவுன்ட்டர்' போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவும் அவர் தயங்க மாட்டார்.

அவரது ஜாதகப்படி 2034-ஆம் ஆண்டு வரை சுக்கிர தசை மற்றும் சூரிய தசை பலமாக இருப்பதால், அரசியலில் அவர் நீண்ட காலத்திற்கு அசைக்க முடியாத சக்தியாக நிலைத்திருப்பார்.

தமிழக அரசியலின் எதிர்காலம் இனி விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை ஆகிய மூன்று இளந்தலைவர்களைச் சுற்றியே சுழலும் என்று செல்வி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

விஜய், கடக ராசி, ஏழரை சனியின் தாக்கத்தால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கட்சிக்காரர்களால் தேவையற்ற சங்கடங்களும் கெட்ட பெயரும் வரலாம்; எச்சரிக்கை அவசியம்.

உதயநிதி ஸ்டாலின், ரிஷப ராசி, தசாபுத்தி மாற்றங்களால் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அண்ணாமலை கடக ராசி 'விபரீத ராஜயோகம்' உள்ளது. எதிர்காலத்தில் மத்திய அமைச்சராகவோ அல்லது அதற்கு இணையான பெரிய பதவிகளையோ அடைவார்.

எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்-க்கு தற்போது நடக்கும் புதன் தசை காரணமாக சில அவமானங்களையும், அரசியல் ரீதியான சிக்கல்களையும் அவர் எதிர்கொள்ள நேரிடும்.

சீமான்: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்காத வரை தமிழக அரசியலில் அவரால் பெரிய அளவிலான மாற்றத்தை அல்லது தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், தமிழக அரசியல் களம் இனி கடக ராசிக்காரர்களான விஜய் - அண்ணாமலை மற்றும் ரிஷப ராசிக்காரரான உதயநிதி ஸ்டாலின் ஆகிய மூவருக்கும் இடையேயான அனல் பறக்கும் போர்க்களமாக மாறப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+