“நான் பேசியதாக பரப்பப்பட்ட ஆடியோ AI மூலம் பொய்யாக உருவாக்கப்பட்டது” - ஆ.ராசா விளக்கம்!
சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியதாக ஒரு ஆடியோவை குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில் அந்த ஆடியோ க்ளிப் பொய்யாகப் புனைந்து உருவாக்கப்பட்டது என்றும், "ச்சீ! ச்சீ!! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!" என்றும் குறிப்பிட்டு ஆ.ராசா பதிவிட்டுள்ளார்.
திமுக எம்.பி ஆ.ராசா வெளியிட்டுள்ள பதிவில், "நான் பேசியதாகச் சொல்லி பரப்பப்பட்ட ஆடியோ கிளிப் வெட்டப்பட்டு, ஒட்டப்பட்டு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, பொய்யாகப் புனைந்து உருவாக்கப்பட்டது என்று எனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.

அந்த ஆடியோவின் உண்மைத்தன்மையே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதையே அடிப்படையாக வைத்து மண்டியிட்டு, யாசித்து, பிச்சையாக பதவி பெற்ற - அரசியலுக்கும், பொதுவாழ்க்கைக்கும் அருகதையற்ற எடப்பாடி பழனிச்சாமி, தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றியும் மாண்புமிகு முதல்வர், கழகத் தலைவர் அவர்களைப் பற்றியும் தேர்தல் நேர அரசியல் ஆதாயத்திற்காக அவதூறாகப் பேசுவது அரசியல் அநாகரிகமானது மட்டுமல்ல அயோக்கியத்தனமானது. மகாகவி பாரதியின்' பாஞ்சாலி சபத' வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன, "ச்சீ! ச்சீ!! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!!" எனத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications