சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவர்கிட்ட இருந்து கத்துக்கோங்க! சென்னை ஆட்டோ டிரைவரை பார்த்து வியந்த ஆனந்த் மஹிந்திரா -செம பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையை பற்றி மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து இருக்கும் ட்விட் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

சென்னையை சேர்ந்த பலருக்கு "ஆட்டோ அண்ணா" எனப்படும் அண்ணாதுரையை தெரிந்து இருக்கும். சில டிவி நிகழ்ச்சிகளில் கூட இவர் பேசியதை பலர் பார்த்து இருப்போம். சென்னையில் ஆட்டோ ஓட்டும் அண்ணாதுரை தனது ஆட்டோவில் கஸ்டமர்களுக்கு வழங்கும் வசதிகள்தான் அவர் இணையம் முழுக்க இப்போது வைரலாக காரணம்.

நாளிதழ் தொடங்கி ஐ பாட் வரை அனைத்து வசதிகளையும் கொண்ட இவரின் ஆட்டோதான் இன்று இணையம் முழுக்க டிரெண்ட். ஆனந்த் மஹிந்திராவே இவரின் ஆட்டோவை பார்த்து வியந்து போய் ட்விட் செய்து இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. சரி வாருங்கள்.. அண்ணாதுரை ஏன் டிரெண்ட் ஆகிறார் என்று ஒரு டூர் போகலாம். Credits; www.thebetterindia.com

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் 28 புதிய பூங்காங்கள்! புது பொலிவுபெறப் போகும் தலைநகரம்! சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் 28 புதிய பூங்காங்கள்! புது பொலிவுபெறப் போகும் தலைநகரம்!

வறுமையான பின்னணி

வறுமையான பின்னணி

தஞ்சாவூர் அருகே பேராவூரணியில் பிறந்த அண்ணாதுரை சிறு வயதிலேயே சென்னையில் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். வறுமையால் இவரின் அப்பாவும், அண்ணாவும் ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு சென்றுள்ளனர். ஆனால் இவருக்கோ பிஸ்னஸ் செய்ய ஆசை. இருப்பினும் வறுமையால் வேறு வழியின்றி அண்ணாதுரை ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்தார். ஆனாலும் பிஸ்னஸ் மேன் குணம் அண்ணாதுரையை விட்டுபோகவில்லை.. தனது கஸ்டமர்களுக்கு எந்த ஆட்டோ டிரைவரும் கொடுக்காத வசதிகளை கொடுக்க வேண்டும் என்று இவர் எடுத்த முடிவுதான்.. அண்ணாதுரையை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

ஓஎம்ஆரில் ஓட்டி வருகிறார்

ஓஎம்ஆரில் ஓட்டி வருகிறார்

சென்னை ஐடி பணியாளர்கள் அதிகம் பயணிக்கும் ஓஎம்ஆர் பகுதியில் இவர் ஆட்டோ ஓட்டுகிறார். இவர் ஆட்டோவில் இல்லாத பொருட்களே இல்லை என்று சொல்லலாம். தினசரி நியூஸ் பேப்பர், வார இதழ்கள், பிஸ்னஸ் இதழ்கள், ஐ பாட், சின்ன டிவி, அமேசான் எக்கோ, லேப்டாப், சாம்சங் டேப், வாட்டர் பாட்டில், AWS Deep, கூகுள் நெஸ்ட் என்று எல்லா வசதிகளும் இவரின் சின்ன ஆட்டோவிற்குள் அடங்கி இருக்கிறது. கேட்கவே மலைப்பாக இருக்கிறதா.. ஆம் இவரின் ஆட்டோவில் பயணிக்கும் மக்களுக்கும் இதே மலைப்புதான் ஏற்படும்.

என்னவெல்லாம் இருக்கிறது

என்னவெல்லாம் இருக்கிறது

அது மட்டுமின்றி ஆட்டோவிற்கு உள்ளேயே இலவச வைஃபை வசதியையும் வழங்கி வருகிறார். ஓஎம்ஆர் பகுதியில் ஆட்டோ ஓட்டும் இவர் அங்கு ஐடி கஸ்டர்மகளை திருப்திப்படுத்த வேண்டும் என்று இவ்வளவு வசதிகளை வழங்கி வருகிறார். பொதுவாக ஓஎம்ஆர் பகுதியில் டிராஃபிக் அதிகம் இருக்கும்.. அங்கு டிராஃபிக்கில் நிற்கும் போது மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் பயணிகள் சந்தோசமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு எப்போதும் bore அடிக்க கூடாது. கஸ்டமர்கள்தான் எப்போதும் என்னுடடைய கிங்.. அதனால் அவர்களுக்கு இந்த சேவைகளை வழங்குகிறேன் என்று அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

பிரபலம் ஆனார்

பிரபலம் ஆனார்

அண்ணாதுரை இவ்வளவு சேவைகளையும் இலவசமாக வழங்குகிறார். கூடுதலாக ஆட்டோ கட்டணத்தில் ஒரு ரூபாய் கூட இவர் வாங்கவில்லை. கஸ்டமர்களுக்கு சிறந்த அனுபவம் வழங்க வேண்டும் என்பதே நோக்கம்.. ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து மேட்ச் பார்த்துக்கொண்டே.. ஸ்னாக்ஸ் சாப்பிட்டபடி பயணிக்க முடியும் என்றால் எப்படி இருக்கும்.. அந்த சேவையைதான் இவர் வழங்குகிறார். இதற்காகவே இவருக்கு பல ஆயிரம் கஸ்டமர்கள் இருக்கிறார்கள். இவரின் இந்த பிஸ்னஸ் மாடல் பல பெரிய நிறுவனங்களை கவர்ந்து உள்ளது. ஆம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களாக வோடபோன், ஹூண்டாய், டொயோட்டா, ராயல் என்பீல்ட் போன்ற நிறுவனங்கள் கூட இவரை தங்கள் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து பேச வைத்து உள்ளன.

 அழைப்பு விடுத்தனர்

அழைப்பு விடுத்தனர்

இந்த பிஸ்னஸ் மாடலை அவர் எப்படி செயல்படுத்தினார். கஸ்டமர்களுக்கு எப்படி இவ்வளவு சிறப்பான சேவை வழங்குகிறார் என்று இவரை அழைத்து பேச வைக்கிறார்கள். அதிலும் இவரின் பிஸ்னஸ் மாடல், கஸ்டமர்களுக்கு இவர் வழங்கும் அசாத்திய சேவைகள் பல ஐஐடி, ஐஐஎம்களை கூட கவர்ந்து உள்ளது. இதனால் நேரடியாக பல ஐஐடி, ஐஐஎம்களில் இவர் சென்று சிறப்பு உரை நிகழ்த்தி இருக்கிறார். ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் பேச கூடிய திறன் கொண்டவர் அண்ணாதுரை.

ஸ்னாக்ஸ் கொடுக்கிறார்

ஸ்னாக்ஸ் கொடுக்கிறார்

அதிலும் பணமதிப்பு நீக்கம் கொண்டு வரப்படும் முன்பே இவர் ஆன்லைன் பேமெண்ட்டுக்கு மாறிவிட்டார். ஐடி ஊழியர்கள் பலர் கையில் சில்லறை இல்லாமல் வருவார்கள் என்பதால் அவர்களிடம் கார்ட் ஸ்வைப் மூலம் கட்டணம் பெறும் முறையையும் இவர் முன்பே கொண்டு வந்துவிட்டார். பல ஐடி ஊழியர்கள் காலை உணவு சாப்பிடாமல் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று ஒரு பாக்சில் சாக்லேட்ஸ், ஸ்னாக்சும் வைத்து இருக்கிறார் அண்ணாதுரை.

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

இந்த நிலையில்தான் அண்ணாதுரையை பற்றி www.thebetterindia.com ஊடகம் வெளியிட்ட வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா அவரை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அண்ணாதுரையிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இவருடன் எம்பிஏ மாணவர்கள் ஒருநாள் செலவு செய்தால் அது மிகப்பெரிய Customer Experience Management பாடமாக அவர்களுக்கு அமையும். இவர் வெறும் ஆட்டோ டிரைவர் கிடையாது.. அவர் மேனேஜ்மேண்ட் பிரிவில் ஒரு பேராசிரியர் என்று ஆனந்த் மஹிந்திரா பாராட்டி இருக்கிறார். ஏற்கனவே இணையம் முழுக்க பிரபலமான அண்ணாதுரை தற்போது ஆனந்த் மஹிந்திரா ட்விட் மூலம் இன்னும் பிரபலம் அடைந்துள்ளார். இவரை பற்றி பலர் இணையத்தில் தேட தொடங்கி உள்ளனர்.

Credits; www.thebetterindia.com

English summary
Chennai Auto Annadurai becomes a talk once again after Ananda Mahindra Post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X