Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிஜ “பூமர் அங்கிள்” அஜீமா? விக்ரமனா? பிக்பாஸ் வீட்டில் மட்டுமில்ல.. வெளியிலும் அக்கப்“போர்”

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து சென்றுவிட்ட நிலையில், அதில் பங்கேற்று உள்ள போட்டியாளர்களில் விக்ரமன், அஜீம் ஆகியோருக்கும் இடையேயான மோதல்கள் தொடர்ந்து விவாதப்பொருளாகி வரும் நிலையில், இருதரப்பு ஆதரவாளர்கள் ஒருவர் மீது ஒருவர் பூமர் அங்கிள் என்ற விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதில் பூமர் அங்கிள் என்பதை அலசுவோம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமன் தொடர்ந்து கருத்துக்களை கூறி வருவதை காரணமாக வைத்து அஜீமின் ரசிகர்கள் அவரை பூமர் அங்கிள் விக்ரமன் என கடந்த சில வாரங்களாக ஹேஷ்டேக்குகள டிரெண்ட் செய்தனர்.

அஜீம் ரசிகர்கள் இவ்வாறு கூறினாலும், பிக்பாஸ் வீட்டில் அஜீமையே போட்டியாளர்கள் பூமர் என்று புரிந்து வைத்து உள்ளனர். கடந்த வாரம் பூமர் அங்கிள் அஜீம் என்று அவரது நண்பர் மணிகண்டனே சுவற்றில் எழுதியது குறிப்பிடத்தக்கது.

விக்ரமன் பூமர் அங்கிளா?

விக்ரமன் பூமர் அங்கிளா?

இதில் முதலில் விக்ரமன் மீது அஜீம் ரசிகர்கள் பூமர் என விமர்சனங்களை வைத்தனர். ஆனால், மேலே பூமருக்கான எந்த செயல்களிலும் விக்ரமன் ஈடுபடவில்லை என்பதையே பார்க்க முடிகிறது. ஏனெனில் பிக்பாஸ் போட்டியாளர்களில் யாராவது ஒருவர் பிற்போக்கு கருத்துக்களை தெரிவித்தாலோ, பிறரை உருவ கேலி செய்தாலோ, குறிப்பிட்ட தரப்பினர், சமூகத்தினர் மீது மேம்போக்காக பூமர்போல் விமர்சித்தாலோ முதலில் அதை தட்டிக்கேட்பது விக்ரமன் தான்.

பூமர் கருத்துக்களை எதிர்த்த விக்ரமன்

பூமர் கருத்துக்களை எதிர்த்த விக்ரமன்

ஒரு முறை மீன்காரிபோல் கத்தாதே என போட்டியாளர் ஷிவின் சொன்னதை கண்டித்தது தொடங்கி, அந்நியன் படத்தில் பிற்போக்கான கருத்துக்கள் இருந்ததால் அந்த கதாப்பத்திரத்தில் தன்னுடைய கொள்கைக்கு உடன்பாடு இல்லை என கூறியது வரை பல பூமர் கருத்துக்களை எதிர்த்தவர் விக்ரமன். ஆனால், பூமர் அங்கிள் என்றால் என்னவென்ற புரிதல் இன்றி கருத்து சொல்பவர் எல்லாம் பூமர் அங்கிள் என்ற தவறான கண்ணோட்டத்தில் விமர்சித்தார்கள் அஜீம் ரசிகர்கள்.

அஜீம் பூமர் அங்கிளா?

அஜீம் பூமர் அங்கிளா?

அதே சமயம், அஜீமோ பிக்பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக நாளிலேயே பூமர் கருத்தை சொல்லி கமல்ஹாசனால் ஆட்சேபிக்கப்பட்டார். மேடையில் ஏறியவுடன் "எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே" என்று கமல்ஹாசன் முன்னிலையில் இனப்பெருமை என்னும் பூமர் கருத்தை அஜீம் பேசினார். இதே கருத்தை கமல்ஹாசன் கண்டித்த பிறகும் வீட்டிற்குள் மீண்டும் அசீம் பேசியபோது அதை எதிர்த்தவர் விக்ரமன்.

ஆணாதிக்க பேச்சு

ஆணாதிக்க பேச்சு

இதேபோல், ஆயிஷாவை ஒருமையில் மரியாதை குறைவாக பேசியது, கையை உயர்த்தி பேசாதே என்று ஆணாதிக்கத்துடன் பேசியது, விக்ரமன் அரசியல்வாதி என்பதால் அவரை கட்டப்பஞ்சாயத்து என்று விமர்சனம் செய்தது, நேற்றைய நிகழ்வில் கமல்ஹாசன் முன்னையில் விக்ரமனின் சமூகம் என பேசியது, திருநங்கையான ஷிவினை அவரது பாலினம் சார்ந்து விமர்சித்தது என அவர் பேசிய அனைத்துமே பூமர் அங்கிளுக்கான இலக்கணங்கள்.

தொழில், வயதை வைத்து விமர்சனம்

தொழில், வயதை வைத்து விமர்சனம்

பிறருக்கு மரியாதை கொடுக்காமல் தனக்கு மட்டும் பிறர் மரியாதை கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது, தன்னுடைய தவறை சுட்டிக்காட்டுபவர்கள் வயதுக்கு குறைவானவர்களாக இருந்தால் அதை வைத்து விமர்சிப்பது, ராப் பாடகரான எடிகேவின் தொழிலை விமர்சித்தது, நகைச்சுவை கலைஞரான அமுதவானின் நடவடிக்கைகள்போல் கேலி செய்து நடித்துகாட்டி இழிவுபடுத்தியது, தற்பெருமை பேசுவது என பல பூமர் செயல்களை அஜீம் செய்துள்ளார்.

 பிக்பாஸ் போட்டியாளர்கள் சொன்ன பூமர்

பிக்பாஸ் போட்டியாளர்கள் சொன்ன பூமர்

அதேபோல், விவாகரத்து செய்த தன்னுடைய மனைவியின் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆடை கட்டுப்பாடு பற்றி அநாகரீகமாக பேசியவர் அஜீம். வெளியில் விக்ரமனை அஜீம் ரசிகர்கள் பூமர் என்று அழைத்தாலும் பிக்பாஸ் வீட்டில் அஜீமையே போட்டியாளர்கள் பூமர் என்று புரிந்துகொண்டு உள்ளனர்.

யார் பூமர் அங்கிள்?

யார் பூமர் அங்கிள்?

கடந்த வாரம் பூமர் அங்கிள் அஜீம் என்று அவரது நண்பரான மணிகண்டனே பேசினார். பூமர் அங்கிள் என்றால் அஜீம்போல் பழமைவாதம் பேசுவது என அங்கேயே சொன்னார் தனலெட்சுமி. 1945 முதல் 1965 களில் பிறந்தவர்கள் பூமர் அங்கிள் என்று அழைக்கப்படுகிறார்கள். அந்த காலக்கட்டத்தில் பிறந்தவர்களில் பலர் பிற்போக்குவாத கருத்துக்களை கொண்டவர்கள் என கருதப்படுகிறார்கள். அதே குணத்தை கொண்ட இளைஞர்களும் பூமர் அங்கிள் என்று அழைக்கப்படும் நிலையில் அஜீம்தான் பூமர் அங்கிள் என்ற முடிவுக்கு நம்மால் வர முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+