உலகமே அழிய போகுதா? வானம், பூமியில் ஒரே நேரத்தில் வெடிக்குமாமே? பாபா வங்கா கணித்த இரட்டை நெருப்புகள்
சென்னை: பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா என்பவர், தன்னுடைய 12 வயதில் கண்களில் மின்னல் தாக்கி பார்வையை பறிகொடுத்தவர்.. அப்போதிலிருந்து, பாபா வங்காவிற்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய காட்சிகள் மனதில் வருவதாக கூறி, அவைகளை கணிப்புகளாக எழுதி வைத்துள்ளார்... இவர் இறந்தபோதிலும், உலகைப் பற்றி கணித்து எழுதி வைத்திருந்ததெல்லாம் அப்படியே நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இவரது பெரும்பாலான கணிப்புகளும் கிட்டத்தட்ட அப்படியே நடந்துள்ளன.. அந்தவகையில், தற்போது பாபா வங்கா கணிப்பு இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
ஒவ்வொரு வருட துவக்கத்தின்போதும் பாபா வங்கா கணிப்புகள் மீடியாவில் வலம் வரும்.. அந்தவகையில், நடப்பு 2025ம் ஆண்டுக்கான கணிப்பையும் பாபா வங்கா எழுதி வைத்திருக்கிறார்..

அதில், ஆசியாவில் பேரழிவை ஏற்படுத்தும் பூகம்பம் மற்றும் சுனாமி வரப்போவதாகவும் கணித்து கூறியிருந்தார்.. அதன்படியே, பசிபிக் பகுதியில் உள்ள ரிங் ஆஃப் பையர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பூகம்பம், கடல் வெப்பநிலை உயர்வு போன்றவை நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் கிலியில் உள்ளனர்.
சரியும் உலக பொருளாதாரம்
அதேபோல, உலகளவில் பொருளாதாரம் மிக மோசமாக சரிவடையும்.. நிதிச் சந்தைகள் சரியும், இதனால் வேலையின்மையும், வறுமையும் பெருகும் என்ற பாபா வங்கா கணித்து கூறியிருந்ததும், நிகழ்காலத்தில் நடந்தபடியே உள்ளது..
அதேபோல, மனிதர்கள் ஏலியன்களை தொடர்பு கொள்வார்கள், புதிய வினோதமான நோய் பாதிப்பு ஏற்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். கொரோனா போல இதுவரை இன்னும் பெரிய நோய் பாதிப்பு வரவில்லை என்றாலும், சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் நோய்க்கிருமிகளின் பிறழ்வு காரணமாக எப்போது வேண்டுமானாலும் இது நடக்கலாம் என்கிறார்கள்.
உறுப்பு மாற்றங்கள்
அதேபோல, உறுப்பு மாற்றங்கள் எளிதாகும் என்று பாபா வங்கா கூறியிருந்த நிலையில், அமெரிக்கா, ஜப்பானில் நடந்து வரும் ஆய்வுகளும் அதை நிரூபித்தபடியே உள்ளன..
அதேபோல, ஐரோப்பாவின் மக்கள் தொகை இந்த வருடம் சரியும் என்று கணித்தது போலவே, இத்தாலி, ஜெர்மனி, ஹங்கேரி போன்ற நாடுகளில் மக்கள் தொகை சரிந்து வருகிறது.. இது நிதிசிக்கலை உண்டுபண்ணி வருகிறது.
வரும் 2033-க்குள் கடல்நீர் மட்டம் உயரும் என்று பாபா வங்கா கூறியிருந்த நிலையில், பனிப்பாறைகள் உருகுவதும், புவி வெப்பம் அதிகரிப்பதும் அதையே நிரூபித்து வருகின்றன.
ஒன்றுபட்ட கை இரண்டாகும்
இப்படிப்பட்ட சூழலில், "ஒன்றுபட்ட கை இரண்டாக உடைக்கப்படும், ஒவ்வொன்றும் அதன் சொந்த வழியில் செல்லும்." என்றும் பாபா வங்கா கணித்துள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
அப்படியானால் இந்த கணிப்பு, நேட்டோ (NATO) அல்லது யூரோப்பிய ஒன்றியம் (EU) போன்ற கூட்டமைப்புகளில் உருவாகும் அரசியல் பதற்றங்களை குறிக்கிறதா? என்று சிலர் சந்தேகங்களை எழுப்புகிறார்கள்.. மேலும் சிலர், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் பதட்டங்களைக் குறிக்கலாம் என்கிறார்கள்.
ஆகஸ்ட் மாதம்
அதேபோல, இரட்டை நெருப்பு பற்றியும் பாபா வங்கா கணித்து கூறியிருப்பது, தற்போது பலரையும் குழப்பத்திலும், கலக்கத்திலும் ஆழ்த்தி வருகிறது.
அதாவது, Made in Vilnius செய்தி நிறுவனத்தின்படி, ஆகஸ்ட் மாதத்தில், வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் ஒரே நேரத்தில் இரட்டை நெருப்புகள் எழும் என்று பாபா வங்கா கணித்துள்ளாராம்.. இதனை தெளிவான வார்த்தையுடன் சொல்லப்படாவிட்டாலும், அதுபற்றின ஊகங்களும், விவாதங்களும் வலுவாக கிளம்பியிருக்கின்றன.
இரட்டை நெருப்புகள் எழும்
இரட்டை நெருப்புகள் எழும் என்றால் அதன் உண்மையான பொருள் புரியவில்லை.. காட்டுத்தீ அல்லது எரிமலை வெடிப்புகளாக இருக்கலாம் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள்.. சிறுகோள் அல்லது விண்கல் பூமியை தாக்கக்கூடும் என்று மேலும் சிலர் சொல்கிறார்கள்..
மனிதக்குலத்துக்கு புலப்படாத, அறிந்து கொள்ள முடியாத சம்பவத்தை அறிந்து கொள்ளும் நிலைமைக்கு அதன் அருகில் செல்லக்கூடும் என்று மேலும் சிலர் யூகிக்கிறார்கள்..
"ஒருமுறை திறக்கப்பட்டதை மீண்டும் மூட முடியாது" என்று பாபா வங்கா கூறியிருப்பதால், உயிரி தொழில்நுட்ப முன்னேற்றம் அல்லது செயற்கை நுண்ணறிவு பற்றியதாக இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது..
இந்த வருடம், சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிற அப்படையிலான இனவெறி ஆகியவை முடிவுக்கு வரும் என்று பாபா வங்கா பாசிட்டிவ் கணிப்பினை வெளியிட்டிருந்தாலும்கூட, நடப்பு ஆகஸ்ட் மாதம் என்னாக போகிறதோ? என்ற பீதிதான் பலரையும் சூழ்ந்துள்ளது..!!
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications