மக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் - காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை
மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னை: மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் முதல்வரிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
Recommended Video
தமிழக காவல்துறையின் 30வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவி ஏற்றார் சைலேந்திர பாபு.சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய டிஜிபி சைலேந்திரபாபு பதவியேற்றுக்கொண்டார்.

புதிய டிஜிபி சைலேந்திரபாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார் திரிபாதி. திரிபாதியின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பி வைக்கப்பட்டது.
பதவியேற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக காவல்துறையின் தலைமைப் பொறுப்பேற்றுள்ளேன். இந்த அரிய வாய்ப்பை தந்த முதல்வருக்கு நன்றி என்று கூறினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும். முதல்வரிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மக்களிடம் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
-
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications