விடிந்தால் பந்த்.. கன்னட அமைப்புக்கு அதிரடி உத்தரவு போட்ட பெங்களூர் போலீஸ் கமிஷனர்!
பெங்களூர்: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவரி நீர் மேலாண்மை ஆணையம் போட்ட உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் நாளை பந்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதில் பங்கேற்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று போலீஸ் ஆணையர் கன்னட அமைப்புகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
பந்தின் போது எந்த ஒரு தனி நபரையோ அல்லது கடைகளையோ போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது என பெங்களூர் காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் உத்தரவிட்டிருக்கிறார்.

பந்த் அறிவிக்கப்பட்டிருந்தாலும், நாளை பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கும் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது. பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் தடையின்றி செயல்படும் என்றும், பொதுமக்கள் பயம் இல்லாமல் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் காவல்துறை கூறியிருக்கிறது.
பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள், சாலை மறியலில் ஈடுபடுபவர்கள் அல்லது பொதுமக்களை அச்சுறுத்ததுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பெங்களூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. பதற்றமான பகுதிகளில் கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காவிரி நீர்
நேற்று டெல்லியில் நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்திற்கு ஆக.13 முதல் அடுத்த 15 நாட்களுக்கு தலா ஒரு டிஎம்சி அளவுக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இதற்கு எதிராகத்தான் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
