சட்டம் ஒழுங்கு கெடும் உஷார்.. புயலாய் கிளம்பிய ஓபிஎஸ் டீம்.. டெல்லிக்கு பறந்த ‘பரபர’ கடிதம்!
சென்னை : எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு மத்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி இருப்பதால், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே அந்த கடிதத்தை திரும்ப பெற வேண்டும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதத்தை அனுப்ப வேண்டும் என ஓபிஎஸ் அணி, சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்துகளைக் கேட்டு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு மத்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதி இருந்தது. இதன் காரணமாக, மத்திய அரசு எடப்பாடி பழனிசாமியை அங்கிகரித்துள்ளதாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், இதனை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்தக் கடிதத்தை திரும்பப் பெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.

ஈபிஎஸ்ஸுக்கு பிளஸ்
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை தொடர்பாக மோதல் ஏற்பட்ட நிலையில், அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் வழக்குகளைத் தொடுத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு வழக்கு ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி சமர்ப்பித்த வரவு செலவு கணக்கை ஏற்று சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டது. இதனால், அவரை கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறி வருகின்றனர்.

இரண்டாவது அடி
அதற்கு முன்னதாக, ஜி20 மாநாடு பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய அரசு அனுப்பிய அழைப்புக் கடிதத்திலும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினார். தான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், தற்போது மத்திய சட்ட ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல்
மத்திய பாஜக அரசு, நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்டு வருகிறது. அதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே இதை பாஜக தனது தேர்ல் அறிக்கையில் கூறியுள்ளது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் பச்சைக்கொடி காட்டி உள்ளது. இது தொடர்பாக, மத்திய சட்ட ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. இதுகுறித்து மாநில அரசியல் கட்சிகளின் கருத்தையும் கோரியுள்ளது. மேலும், பொதுமக்கள் கருத்து தெரிவிக்கவும் சட்ட ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எடப்பாடியை அங்கீகரித்த டெல்லி
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அதிமுகவின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணைய தலைவரும், நீதிபதியுமான ரிதுராஜ் அவஸ்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு, கட்சியின் கருத்தை தெரிவிக்கும்படி, கடிதம் அனுப்பி உள்ளார். அதிமுகவுக்கு யார் தலைமை பொறுப்பு வகிப்பது என ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே மோதல்கள் நீடித்து வரும் நிலையில், மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என ஏற்று கடிதம் அனுப்பியுள்ளது, மத்திய பாஜக அரசு எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து உள்ளது என்பதையே காட்டுவதாக ஈபிஎஸ் தரப்பினர் உற்சாகமடைந்தனர்.

ஓபிஎஸ் தரப்பு பரபர கடிதம்
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கடிதத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என்று மத்திய சட்ட ஆணையம் குறிப்பிட்டதால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, அதனால் அந்த கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். இதே கருத்துகளைக் குறிப்பிட்டு தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூவிடமும் கடிதம் அளித்துள்ளார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.

டெல்லிக்கு கடிதம்
எடப்பாடி பழனிசாமி வகித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் தான் இருக்கிறார். முன்னதாக நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் கையெழுத்திட்டுத்தான் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. கட்சி விதிகளுக்கு எதிராக ஈபிஎஸ் செயல்பட்டு வருவதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது, இதுபோன்ற சூழலில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதி இருப்பது தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வழிவகுக்கும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உடனே திரும்பப் பெறவேண்டும்
எனவே, அதிமுகவை பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் கட்சி இயங்குகிறது. எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தை 7 நாட்களுக்குள் திரும்பப் பெற்று, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்ப வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்திற்கு கிடைக்கும் பதிலைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications