அதிமுக கூட்டணி தொடர்ந்தால் பாஜக தலைவராக அண்ணாமலை நீடிப்பாரா? 'கொளுத்திப் போட்ட' எஸ்.வி.சேகர்!
சென்னை: அண்ணா திமுக- பாஜக கூட்டணி, தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பது தொடர்பாக பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் இன்று இரவு போட்ட எக்ஸ் பதிவு சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக உறுதியும் செய்திருக்கிறார். அத்துடன் பாஜகவுடனான கூட்டணியை முறித்துவிட்டோம்; இஸ்லாமியர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் பிரசாரம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

பாஜக அடுத்தடுத்து ஆலோசனை: அதேநேரத்தில் பாஜக தரப்போ, இன்னமும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்; பாஜக கூட்டணியில் அதிமுக தொடரக் கூடிய சூழ்நிலை உருவாகும் என நம்பிக்கையோடு பேசுகிறது. சென்னையில் பாஜகவின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாளை மறுநாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
சென்னை திரும்பிய அண்ணாமலை: இதனிடையே அதிமுக கூட்டணி முறிவு குறித்து ஆலோசனை நடத்த டெல்லி சென்ற அண்ணாமலை இன்று இரவு சென்னை திரும்பினார். அண்ணாமலை டெல்லி திரும்பியதும் என்ன கருத்தை தெரிவிப்பார் என்பதை அரசியல் களம் ஆவலுடன் எதிர்பார்த்தது. ஆனால் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் அண்ணாமலை புறப்பட்டுச் சென்றது பெரும் ஏமாற்றமானது. முன்னதாக டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக படங்கள் வெளியிடப்பட்டன. அதேநேரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை அண்ணாமலை சந்தித்தாரா? இல்லையா? என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.

எஸ்வி சேகர் ட்விட்டர் பதிவு: இந்நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்வி சேகர் தமது எக்ஸ் பக்கத்தில் புதிரான ஒரு பதிவை பதிந்துள்ளார். அப்பதிவில், " அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்தால் அண்ணாமலை தலைவர் இல்லை. அண்ணாமலை தலைவராக தொடர்ந்தால் அதிமுக கூட்டணி கிடையாது. இதுவே நிதர்சனம். என் கணிப்பு என்பதுதான் எஸ்வி சேகர் பதிவிட்டிருப்பது. நடிகர் எஸ்வி சேகரின் இந்த ஆரூடங்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்











Click it and Unblock the Notifications