சீமானை நான் கொண்டு வருகிறேன்.. பாஜக களமிறக்கிய பழைய தலை.. அதிமுக பாஜக கூட்டணியில் நாம் தமிழர்?
சென்னை: நாம் தமிழர் சீமானை பாஜக - அதிமுக கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். அரசியலில் "ஓரம்கட்டப்பட்ட" தலைவர் ஒருவர் மூலமாக சீமானிடம் பேசுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். சீமானை கூட்டணி கொண்டு வருகிறேன் பாருங்கள் என்று அந்த தலைவரும் டெல்லிக்கு உறுதி அளித்து உள்ளாராம்.
சமீபத்தில்தான் அதிமுகவை மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்யும் ரூட்டை எடுத்தார். நாம் தமிழர் சீமான். உயிரிழந்த நீட் தேர்வு மாணவர்களுக்கு அதிமுக செலுத்திய அஞ்சலி ஒரு நாடகம் அதிமுகவின் போராட்டம் என்று நாம் தமிழர் சீமான் தெரிவித்தார் . அதிமுகவின் கண்ணீர் அஞ்சலி போராட்டம் நாடகம். அதிமுகவின் கண்ணீர் அஞ்சலி போராட்டத்துக்கு நான் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன் தேர்தல் வரும்போது இது போன்ற நாடகங்களை பார்த்துதான் ஆக வேண்டும், என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் கூட்டணி ரெடி இல்லை
இந்த நிலையில்தான் எங்கே சீமான் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வராமல் டிமிக்கி கொடுக்க நினைக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் சீமானை இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறதாம். பாஜகவின் ஒரு லாபி இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறதாம்.
சீமான் கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் துணை முதல்வர் பதவியை எதிர்பார்ப்பார். அதோடு இத்தனை காலம் திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளை எதிர்த்த அரசியல் எல்லாம் வீணாக போகும். அதோடு மாற்று அரசியல் என்று பேச முடியாத நிலை ஏற்படும். அதிமுக - பாஜகவோடு கூட்டணி வைத்தால்..நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் பெரும்பாலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்லும் நிலை ஏற்படும். இத்தனை காலம் சீமான் கட்டி எழுப்பிய கோட்டை உடையும். இதனால் சீமான் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுக போராட்டத்தை சீமான் விமர்சனம் செய்யவும் இதுவே காரணம் என்று கூறப்படுகிறது.
களமிறக்கப்பட்ட முக்கிய தலை
நாம் தமிழர் சீமானை பாஜக - அதிமுக கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். அரசியலில் "ஓரம்கட்டப்பட்ட" தலைவர் ஒருவர் மூலமாக சீமானிடம் பேசுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். சீமானை கூட்டணிக்கு கொண்டு வருகிறேன் பாருங்கள் என்று அந்த தலைவரும் டெல்லிக்கு உறுதி அளித்து உள்ளாராம்.
நான் சீமானை கொண்டு வருகிறேன். என்னை மீண்டும் அரசியல் லைம்லைட்டிற்கு கொண்டு வருவது உங்கள் வேலை. என்னை மீண்டும் அரசியலில் "பழைய" இடத்திற்கு கொண்டு செல்வது உங்கள் வேலை என்று சீமான் கூறி உள்ளாராம்.
சீமானை வைத்து பிளான்
அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜக கிட்டத்தட்ட 100+ இடங்களை பெற திட்டமிட்டு உள்ளதாம். ஆம்.. அதாவது 100+ இடங்களை பெற்றுவிட்டு அதில் சிலவற்றை தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதாவது அதிமுக சில இடங்களை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால்.. பாஜகவும் கூடுதல் இடங்களை வாங்கி அதை டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications