யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது.. ஆபரேஷன் தாமரைக்கு தயாராகும் அமித்ஷா.. பாஜக கணக்கு என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளை அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில், டெல்லி பாஜகவின் கணக்கு வேறு மாதிரியாக இருப்பது தெரிய வந்துள்ளது. டெல்லி பாஜக தலைமை தமிழ்நாட்டில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று நம்புவதாகவும், என்டிஏ கூட்டணி 100 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்தலுக்கு பின் திமுக தலைவர்கள் ஓய்வு எடுக்க சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்தனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சி கட்டாயம் அமையும் என்று குடும்பத்தினருடன் நம்பிக்கையாக கூறி வருகிறார். மறுபக்கம் தவெக தலைவர் விஜய் கோயில் கோயிலாக சுற்றத் தொடங்கியுள்ளார்.

tamilnadu assembly election 2026 vijay bjp

இந்த 3 கட்சிகளுமே ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் அமைச்சரவை வரைக்கும் லிஸ்ட்டை தயார் செய்துவிட்டனர். அதேபோல் சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சைலண்ட்டாக கட்சித் தலைவர்களையும் சந்தித்துள்ளனர். ஆனால் டெல்லி பாஜக தலைமை தமிழ்நாட்டிற்கு என்ன கணக்கு வைத்திருக்கிறது என்பதே கேள்வியாக இருக்கிறது.

இதுதொடர்பாக விசாரித்த போது, தவெக பிரிக்கப் போகும் வாக்குகள் காரணமாக தமிழ்நாட்டில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று டெல்லி பாஜக தலைமை நம்பி இருக்கிறது. தொங்கு சட்டசபை தான் அமையும் என்று அமித்ஷாவும் நம்பியுள்ளாராம். என்டிஏ கூட்டணி கட்டாயம் 100 தொகுதிகள் கைப்பற்றும் என்ற நம்பிக்கையுடனும் உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால், தவெக பக்கம் உருவாகும் எம்எல்ஏ-க்களே முதல் குறி என்று கூறுகிறார்கள். அதற்கேற்ப தமிழ்நாட்டிற்கு ஆளுநர் நியமனம் செய்யப்படவில்லை. கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் கூடுதல் பொறுப்புகளை கவனித்து வருகிறார். ஆனால் என்டிஏ கூட்டணி வெற்றிக்கு அருகில் வந்தால் மட்டுமே, இந்த திட்டத்தை செயல்படுத்த பாஜக தலைமை திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

2006 சட்டசபைத் தேர்தலில் மட்டுமே திமுகவுக்கு தனித்து பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போதும் கூட திமுக கூட்டணி கட்சிகளாக அதிக இடங்களை வென்றிருந்தது. திமுக தனி பெரும்பான்மை பெறாததற்கு விஜயகாந்த்தின் அரசியல் வருகை காரணமாக அமைந்தது. தற்போது விஜய் அரசியல் வருகை மீண்டும் அப்படியொரு சூழலை உருவாக்குமா என்பதை மே 4ஆம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+