இப்படி பண்ணிட்டாங்களே! ரூட்டை மாற்றும் ’மேலிடம்’! மீண்டும் இபிஎஸ் பக்கம் வீசும் காற்று! ஓபிஎஸ் ஷாக்!
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜக தலைமையின் ஆதரவு தனக்குத் தான் இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெம்புடன் இருந்த நிலையில் டெல்லியில் இருந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக தலைமையிலான அரசு அழைப்பு விடுத்திருப்பது ஓபிஎஸ் அணியினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.
அதிமுகவில் இருந்து பிரிந்தாலும் மீண்டும் இணைந்த கைகளால் மாறினர் ஓபிஎஸ் இபிஎஸ் அணியினர். பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இந்த இணைப்பானது நடைபெற்றது.
தொடர்ந்து கட்சியிலும் ஆட்சியிலும் தனது செல்வாக்கை பலமாக நிலை நிறுத்திக் கொண்டாலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களின் பங்களிப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு வெகுவாக தேவைப்பட்டது.
பணிந்தது ஈரான் அரசு.. கலாச்சார காவல் பிரிவு கலைப்பு! ஹிஜாப் போராட்டத்தில் பெண்களுக்கு பெரிய வெற்றி

அதிமுக மோதல்
இதன் காரணமாக ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்நிலையை தவிர்க்க துணை முதலமைச்சர் பதவியையும் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியையும் ஓபிஎஸ் க்கு வழங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. தொடர்ந்து ஓபிஎஸ் புறக்கணிக்கப்படுவது வெளிப்படையாக தெரிந்தும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் துணை முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்வதிலேயே ஓபிஎஸ் காலம் தாழ்த்தி விட்டார் .இதனால் கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் அவரது ஆதரவு வட்டமானது வெகுவாக சரியத் தொடங்கியது. அதே நேரத்தில் தனது கோட்டையை பலப்படுத்தி கொண்ட எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் கைப்பற்றிக் கொண்டார்.

எடப்பாடி பழனிச்சாமி
ஒருபுறம் எடப்பாடி பழனிச்சாமியின் பலம் மறுபுறம் ஓபிஎஸ்-ன் பலவீன கட்சிக்குள் வெளிப்படையாக தெரிந்தது. ஆனால் இரு விவகாரங்களிலும் பாஜக தலைமையில் அழுத்தம் முக்கிய பங்கு வகித்தது. தொடர்ந்து தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் தற்போது வரை அதிமுகவுக்குள் பாஜக ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அந்த கட்சியினரை ஒப்புக் கொண்டுள்ளனர் கடந்த காலங்களில் மட்டும் அல்ல தற்போதைய அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திலும் பாஜக தலைமை இருதரப்புக்குமே அழுத்தம் கொடுத்து வருகிறது.

பாஜக அழுத்தம்
அந்த வகையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கருத்தில் கொண்டு ஓபிஎஸ் இபிஎஸ் இணைய வேண்டும் என விரும்பும் பாஜக தலைமை கூடுதலாக சசிகலா டிடிவி தினகரன் ஆகியோரை கட்சிக்குள் கொண்டு வரவும் விரும்புகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக் கொள்ளாத நிலையில் ஓ பன்னீர்செல்வம் சம்மதம் தெரிவித்துள்ளார். இதை அடுத்து தற்போது வரை தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும் நாடாளுமன்றத்தில் அவரது மகன் ஓபி ரவீந்திரநாத் குமார் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் மற்றும் உறுப்பினராக தொடர்கிறார்.

ஓபிஎஸ் அதிர்ச்சி
தேர்தல் ஆணையத்தில் விவகாரம் விசாரணைக்கு வந்தாலும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவே முடிவுகள் எடுக்கப்படும் என டெல்லி தலைமை உறுதி அளித்துள்ளது. தனக்கு ஆதரவாக பாஜக தலைமை இருப்பதால் ஓபிஎஸ் மற்றும் அவர் தரப்பு ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் தற்போது பாஜக தலைமை கொடுத்த திடீர் திருப்பத்தால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உற்சாகமடைந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளது. ஜி 20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இபிஎஸ்க்கு அழைப்பு
அதிமுக இரட்டை தலைமைய தொடர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வலியுறுத்தி வரும் நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக இபிஎஸ் அண்ட் கோ உற்சாகத்தில் ஆழ்ந்திருக்கும் அதே நேரத்தில் தேனி தரப்பு கடும் அப்சட் அடைந்திருக்கிறது. அதிமுகவில் பாஜக ஆதரவு தங்களுக்குத் தான் இருக்கிறது என கூறி வந்த நிலையில் டெல்லி மேலிடம் இப்படி திடீர் முடிவு எடுக்க என்ன காரணம் என தெரியாமல் புலம்பி வருகின்றனர்.

டெல்லியில் முறையீடு
ஒருவேளை நிர்வாகிகள் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் இருக்கிறது நீதிமன்ற தீர்ப்பும் எடப்பாடிக்கு ஆதரவாக வரலாம் என்பதன் காரணமாக பாஜக ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டை விளக்கிக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்த எனவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதை அடுத்து டெல்லி தரப்பில் முறையீடு செய்ய ஓபிஎஸ் மற்றும் அவர் தரப்பு ஆதரவாளர்கள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. வரும் காலங்களில் ஒற்றை தலைமை விவகாரம் இன்னும் சூடு பிடிக்கும் எனவும் கூறப்படுகிறது.