வடக்கில் பார்த்துக்கலாம்! ஆஹா.. அதிமுகவிற்கு இப்படி ஒரு சிக்கலா? பிளான் போடுவதே பாஜகதான்.. அப்படியா?
அதிமுகவை அழித்தால் பாஜக அந்த இடத்தை பிடிக்க முடியும் என்று அக்கட்சி நினைக்கிறது. பாஜக வளர்ந்துவிட்டதால் என்றால் அது அதிமுகவின் தேய்பிறை, என்று மூத்த பத்திரிகையாளர் ஐயன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுகவின் எதிர் வாக்குகள் அதிமுகவிற்கு போகாமல் பாஜகவிற்கு வர வேண்டும், இதுதான் பாஜகவின் திட்டம், என்று மூத்த பத்திரிகையாளர் ஐயன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் ஒரு வழியாக அதிமுக தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆதரவு வேட்பாளர் கே. எஸ் தென்னரசு சார்பாக பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுகவின் 111 நிர்வாகிகள் களத்தில் இறங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் பாஜகவும் அதிமுக வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்ய உள்ளது. இந்த நிலையில்தான் எதிர்காலத்தில் அதிமுகவை பாஜக அபகரிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஐயன் கார்த்திகேயன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி
அவர் தனது பேட்டியில், அதிமுக அழிவதைதான் பாஜக விரும்பும். அதற்கான வேலைகளைத்தான் பாஜக செய்து கொண்டு இருக்கும். படிப்படியாக அதற்கான வேலைகளை பாஜக செய்யும். திமுக எதிர் வாக்குகள் அதிமுகவிற்கு போகாமல் பாஜகவிற்கு வர வேண்டும். இதுதான் பாஜகவின் திட்டம். அப்போ பாஜக யாரை அழிக்க வேண்டும்? அதிமுகவைத்தானே? பாஜக எப்போதுமே தங்களை எதிர்க்கும் கட்சியை அழிக்காது. தங்களுக்கு போட்டியாக தங்களுடன் இருக்கும் கட்சியை எதிர்க்கும். அதனால் திமுகவை பாஜக அழிக்க பார்க்காது. மாறாக உடன் இருக்கும் அதிமுகவை அழிக்க பார்க்கும்.

திமுக
திமுகவை வெறுக்கும் ஒருவர் நாம் தமிழருக்கோ, அதிமுகவிற்கோ வாக்களிப்பார். இப்படி இருக்க அதிமுகவை அழித்தால் பாஜக அந்த இடத்தை பிடிக்க முடியும் என்று அக்கட்சி நினைக்கிறது. பாஜக வளர்ந்துவிட்டதால் என்றால் அது அதிமுகவின் தேய்பிறை. அவர்களின் தேய்பிறையின் எழுச்சிதான் பாஜகவின் வெற்றி. 2024 எம்பி தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம், பிளான். தேசிய அளவில் கவுண்ட் கம்மியாகும் போது பாஜக இங்கே அதிக இடங்களை வெல்ல பார்க்கிறது. வடமாநிலத்தில் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கை பாஜகவிற்கு இருக்கும்.

வடக்கு
வடக்கில் மோடியை வீழ்த்தும் சூழ்நிலை இருக்காது. வடக்கில் பார்த்துக்கொள்ளலாம் என்று பாஜக நினைக்கும். ஆனால் இடையில் தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று பாஜக திட்டமிடுகிறது. அவர்கள் எதிர்கால திட்டம்தான் தமிழ்நாடு. அதிமுகவை அகற்றிவிட்டு தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக காலூன்றி, பின்னர் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் பெரிதாக காலூன்ற முடியும் என்று பாஜக நினைக்கிறது. அதிமுக இதை தடுக்க வேண்டும் என்றால் பாஜகவை ஒதுக்க வேண்டும். பாஜகவை தள்ளி வைக்க வேண்டும். ஆனால் இதை அதிமுக செய்யுமா? பாஜக எங்களுக்கு வேண்டாம்.. நீ தள்ளி நில்லு என்று அதிமுக சொல்லுமா?

எடப்பாடி
எடப்பாடி அதை செய்யவில்லை. அதை செய்வதற்கான தகுதி அவருக்கு இருக்குமா என்பதும் சந்தேகம்தான். மக்கள் கொண்டாடும் தலைவர் அதிமுகவில் இருக்க வேண்டும். அது இல்லாத வரை அதிமுகவில் உள்ளவர்கள் பாஜகவை எதிர்க்கும் வாய்ப்புகள் இல்லை. கையில் ஆட்சி இருக்கும் போதே எடப்படியால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்படி இருக்கும் போது 2024ல் அதிமுக பாஜகவை கழற்றிவிடுமா என்பது சந்தேகம்தான், என்று ஐயன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications