சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அவர்" சொன்னதை திமுக இப்படி சுத்தமா மறந்து போச்சே.. சொல்கிறார் பாஜக எல்.முருகன்

திமுக தலைவரை இடித்துரைத்து எல்.முருகன் அறிக்கை விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சமீப காலமாகவே எல்.முருகன் முதல்வர் முக ஸ்டாலினை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.. கருணாநிதி பிறந்த நாளான இன்று, கருணாநிதியை வைத்தே ஸ்டாலினை இடித்துரைத்து கூறியுள்ளது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடியை பறக்க விடுவோம் என்று, எல்.முருகன் மார்த்ட்டி சொன்ன நிலையில், இன்று திமுக கோட்டையில் கம்பீரமாக உட்கார்ந்துள்ளது.. 20-க்கு 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் சொன்ன பாஜக, இந்த முறை 4 எம்எல்ஏக்களுடன் கோட்டைக்குள்ளே சென்றுள்ளது..!

6 நாய்கள் விஷம் வைத்து சாகடிப்பு.. இளம்பெண் அதிகாரி மீது புகார்.. காரணம் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க! 6 நாய்கள் விஷம் வைத்து சாகடிப்பு.. இளம்பெண் அதிகாரி மீது புகார்.. காரணம் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!

இந்நிலையில், விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடரும் நடக்க போவதால், அவையில் கிளப்ப போகும் பிரச்சனைகள், விவகாரங்கள் தொடர்பான ஆலோசனையிலும் இப்போதே ஆரம்பித்துவிட்டது.

 செயல்பாடு

செயல்பாடு

அதேசமயம், திமுகவின் செயல்பாடுகளை தமிழக பாஜக விமர்சித்துக் கொண்டே இருக்கிறது.. நேற்றுகூட அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தொற்று குறித்து மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின்தான்.. அதனால்தான் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தவே தயக்கம் காட்டினர்...இப்போ இவரே தடுப்பூசியை செலுத்தி கொள்ளுங்கள் என்கிறார்" என்றார்.

 2வது அலை

2வது அலை

இதைதவிர, பிரத்தியேகமாகவே ஒரு அறிக்கை விடுத்துள்ளார் எல்.முருகன்.. அந்த அறிக்கையில், "தடுப்பூசி குறித்து ஸ்டாலினும், அவரது கூட்டணி கட்சிகளும் செய்த விமர்சனங்களால்தான் முதல் அலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் போய்விட்டது.. 2வது அலை தொடர்ந்தது... ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டாரா என்று ஸ்டாலின் தான் நெஞ்சை தொட்டு சொல்ல வேண்டும்... மக்களின் உயிர் காப்பதில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறை, மாநில அரசுகளுக்கும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

 அமைச்சர்கள்

அமைச்சர்கள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருக்காது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவிக்கிறார்.. அதேசமயம், மத்திய அரசின் திட்டமிடல் இல்லாத செயல்பாடே கொரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்கு காரணம் என்று நிதியமைச்சர் பொய் பிரச்சாரமும் செய்கிறார்.. மாநிலங்கள் இல்லாமல் மத்திய அரசு இல்லை என்கிறார்... ஆனால், மத்திய அரசு என்பது வேண்டியவர், வேண்டாதவர் என அரசியல் செய்வதாக சிறுபிள்ளை தனமாகவும் பேசுகிறார்.

 நிதியமைச்சர்

நிதியமைச்சர்

மத்திய அரசோடு இணக்கமான போக்கை கடைபிடித்தால் தான் மாநிலத்துக்கு பெரும் நன்மைகளை கொண்டு வர முடியும் என்று பகிரங்கமாக கூறியவர் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி. எப்போதெல்லாம் திமுக ஆளுங்கட்சியாக இருந்ததோ அப்போதெல்லாம் இதை சொல்வது அவரின் வழக்கம். இந்நிலையில் கருணாநிதியையும், அவரது போதனைகளையும் இப்போதுள்ள திமுகவோ, அதன் நிதி அமைச்சரோ சுத்தமாக மறந்துவிட்டனர்.

நலன்

நலன்


எனவே திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சொன்னதுபோல, மத்திய அரசோடு இணக்கமான போக்கை கடைபிடித்து மாநிலத்திற்கான நன்மைகளை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வர வேண்டும்.. அவரது அமைச்சர்களுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு இருப்பின் மட்டுமே நலன் காக்க முடியும் என்று அறிவுறுத்த வேண்டும்.. இந்த இக்கட்டான சூழலில் மக்களை காக்க தேவையான செயல்பாடுகள் தான் முக்கியம் என்பதையும் உணர்த்த வேண்டும்.. எல்லாவற்றிற்கும் மேலாக, இது அரசியல் செய்வதற்கான நேரமில்லை என்பதையும் எடுத்து செல்ல வேண்டும்" என்றார்.

English summary
BJP L Murugan says about MK Stalin and Karunanidhis Policy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X