குஜராத் வெற்றியைக் கூட கொண்டாட முடியவில்லை! கட்சியை விட்டே தூக்கிருவேன்! கமலாலயத்தில் சூடான அண்ணாமலை!
சென்னை : சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பிற அணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜகவில் நடைபெறும் நிகழ்வுகளை குறிப்பிட்டு அண்ணாமலை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலை ஐபிஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று தனது சொந்த ஊரான கரூர் திரும்பினார். இயற்கை விவசாயம் செய்து வந்ததாகக் கூறிய அவர், பின்னர் பாஜகவின் தன்னை இணைத்துக் கொண்டார்.
அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த நிலையில் எடுத்த எடுப்பிலேயே பாஜக தமிழக துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் எல்.முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
கைகோர்த்த விஜயபாஸ்கர், ஓபிஎஸ்.. ஜல்லிக்கட்டு வழக்கில் பரபர வாதம்! சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!

அண்ணாமலை
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு தமிழகம் முழுவதும் பல புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட்டதோடு தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பூத் கமிட்டி அமைப்பது, ஆலோசனைக் கூட்டம் என தீவிர அரசியல் செய்து வருகிறார். அதே நேரத்தில் பாஜகவில் அண்ணாமலை வருகைக்குப் பிறகு கோஷ்டி மோதல் வலுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சீனியர்கள் அதிருப்தி
கட்சியில் இருந்த சீனியர் தலைவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் இதனால் அவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலை வருகைக்கு முன்னதாகவே கட்சியில் இருந்த பல சீனியர்கள் ஓரம் கட்டப்பட்டதோடு சினிமா பிரபலங்களும் புறக்கணிப்பு செய்யப்பட்டனர். மேலும் கே.டி.ராகவன் போன்ற சில முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியதால் அவர்களது பதவியும் பறிக்கப்பட்டது. அந்த வகையில் பாஜகவில் மிகத் தீவிரமாக அரசியல் செய்து வந்த கட்சியின் கலை கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பிலிருந்து காயத்ரி நகரம் நீக்கப்பட்டார்.

உட்கட்சி விவகாரம்
பின்னர் மீண்டும் வெளிநாடு அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக வியமிக்கப்பட்டார். இந்நிலையில் பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், இதே விவகாரத்தில் பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்தடுத்து சர்ச்சைகள்
இந்நிலையில் சூர்யா சிவாவும் கட்சியில் இருந்து விலகிய நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகியான கேசவ விநாயகம் தொடர்பான சர்ச்சைகளும் தொடர்ந்து வலுத்து வருகிறது. இந்நிலையில் தான் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பிற அணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜகவில் நடைபெறும் நிகழ்வுகளை குறிப்பிட்டு அண்ணாமலை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எச்சரிக்கை
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பிற அணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜகவில் நடைபெறும் நிகழ்வுகளை குறிப்பிட்டு அண்ணாமலை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குஜராத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் அதனை கொண்டாடும் மனநிலை தான் இல்லை என தனது ஆதங்கத்தை நிர்வாகிகளிடம் வெளிப்படுத்தியுள்ளாராம் அண்ணாமலை.

கடுமையான நடவடிக்கை
மேலும் கட்சிக்கு எதிராக விரோதமாக செயல்பட்டால் பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத் தலைவர்களை எச்சரித்துள்ளார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது அதற்கான வேலைகளில் மட்டுமே கட்சி நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி நிர்வாகிகள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், இது தொடர்பாக டெல்லி மேலிடத்தின் கவனத்திற்கு சென்றதாகவும் இதன் காரணமாகவே அண்ணாமலை நிர்வாகிகள் கூட்டத்தில் பொறிந்து தள்ளி இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.