2024ல் தமிழகத்தில் 25 பாஜக எம்.பி.க்கள்! பாஜக அண்ணாமலை உறுதி.. திமுக ஜெயித்தால் என்ன ஆகும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு : வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக எம்பிக்கள் வெற்றி பெற்றால் ஆண்டுக்கு 24 விமான டிக்கெட் தவிர வேறு ஏதும் கிடைக்காது என கூவத்தூரில் நடந்த கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட பாஜக சார்பில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு மாவட்ட தலைவர் வேத சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

Recommended Video

    2024ல் தமிழகத்தில் 25 பாஜக எம்.பி.க்கள்! பாஜக அண்ணாமலை உறுதி.. திமுக ஜெயித்தால் என்ன ஆகும் தெரியுமா?

    சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொதுசெயலாளர் கருநாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    2024ல் பாஜக

    2024ல் பாஜக

    நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது," வரும் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜகவுக்கு தான் மக்கள் வாக்களிக்க உள்ளனர். நிச்சயமாக தமிழகத்தில் 25 எம்பிகள் பெறுவது உறுதி.

    திமுக ஜெயித்தால்?

    திமுக ஜெயித்தால்?

    25 எம்பிகள் வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு 5 கேபினெட் அமைச்சர்கள் போராடி பெற்று தருவது என்னுடைய பொறுப்பு என்றார். ஆனால் தமிழகத்தில் திமுக எம்.பிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு ஆண்டுக்கு 24 விமான டிக்கெட், பி.எஸ்.என்.எல்லில் இலவச தொலைபேசி, 2 பி.ஏக்களுக்கு இலவச சம்பள மட்டுமே கிடைக்கும்.

    தொகுதிக்கு 50 ஆயிரம் கோடி

    தொகுதிக்கு 50 ஆயிரம் கோடி

    இப்போது எம்பிகளுக்கும் இது தான் கிடைத்து கொண்டிருக்கிறது. இதை தவிர வேறு கிடைக்காது. எனவே வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால் ஒவ்வொரு தொகுதிக்கும் 50 ஆயிரம் கோடி நலத் திட்டங்கள் கொண்டு வரப்படும்.

    வேலை நடக்காது

    வேலை நடக்காது

    இளைஞர்கள் ஆரோக்கியமாக கொண்டு திட்டம். தற்போது எம்பிக்களால் ஏதும் செய்யமுடியவில்லை. தமிழக எம்பிகள் பேசினாலும் வேலை நடக்காது. எனவே வரக்கூடிய தேர்தலில் பாஜகவை ஆதரிக்க மக்கள் தயாராகிவிட்டனர்" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+