Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் பேசிய விஷயம்.. கெட்டியாக பிடித்துக்கொண்ட அண்ணாமலை.. ‘எப்படி நம்புவாங்க?’- தொடர் விளாசல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசை எட்டு வழிச்சாலை நிலைப்பாடு தொடர்பாக வெளுத்து வாங்கி வருகிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, இப்போது வேறு மாதிரி பேசுவதா என விமர்சித்துள்ளார்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு எடுத்து பின்னர் ஆளும் கட்சியாக இருக்கும் போது அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை திமுக எடுத்து வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அமைச்சர் எ.வ.வேலு பேசிய விஷயம்தான் இதற்கெல்லாம் காரணமாக அமைந்துவிட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அமைச்சர் எ.வ.வேலு பேசியதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு திமுகவின் இரட்டை வேடம் என விமர்சித்து வருகிறார் அண்ணாமலை.

 வந்தாரை விரட்டும் தமிழ்நாடு?

வந்தாரை விரட்டும் தமிழ்நாடு?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று நமது மாநிலம் போற்றப்பட்ட காலங்கள் போய் வந்தாரை விரட்டும் தமிழ்நாடு என்று ஆனதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெரும் பங்குள்ளது. அரசியல் உள்நோக்கங்கள் பல கொண்ட போராட்டங்களை ஊக்குவித்து தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு வரக் காரணமாக இருந்த திமுக இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து போராடுபவர்களை வசைபாடுவதைத் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

8 வழிச் சாலை திட்டம்

8 வழிச் சாலை திட்டம்

ஒரு தவறான முன்னுதாரணமாகத் திகழும் திமுக இன்று மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்யாமல் மக்களின் ஒரே குறையாக மாறியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பெருநகரங்களை இணைக்கத் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கப்பட்டது. அதே போன்று ஒரு திட்டம் தான் சென்னை சேலம் நகரை இணைக்கும் 8 வழிச் சாலை திட்டம். 2000ஆம் ஆண்டு தமிழகத்தில் சாலை விரிவாக்கம் நடந்த போது அதை மக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து அந்த திட்டத்தை வரவேற்றார்கள் .

அது மட்டுமே நோக்கம் அல்ல

அது மட்டுமே நோக்கம் அல்ல


அதே மக்கள் இன்று தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால் அதற்கு திமுக சமுதாயத்தில் வளர்த்துவிட்ட விஷச்செடிகளே காரணம். நமது பயண நேரத்தை குறைப்பது மட்டுமே இந்த 8 வழிச்சாலையின் நோக்கம் அல்ல. தமிழகத்தின் 5 தொழில் நகரங்களை இணைக்கும் டிபென்ஸ் காரிடார் திட்டத்தின் முக்கியப்புள்ளி சேலம் நகரம். ஆனால் சென்னை சேலம் இடையே உள்ள சாலை டிபென்ஸ் காரிடாருக்கான அளவில் இல்லாமல் குறுகிய சாலையாக இருப்பதாலே அதை விரிவாக்க திட்டமிட்டார்கள்.

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்

ஆனால் அன்றைய எதிர்க்கட்சியான திமுக, தமிழக நலனுக்கு மட்டும் அல்லாமல் தேசிய நலனுக்கு எதிராக செயல்பட்டனர். இவர்களின் பக்கவாத்தியமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாத பொல்லாத பொய்களைச் சொல்லி மக்களை திசை திருப்பினார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 8 வழிச்சாலை திட்டம் விவசாயிகளுக்கு பாதகமான திட்டம் என்றார். இன்று அமைச்சர் எ.வ.வேலு பச்சை துண்டு போட்டவன் எல்லாம் விவசாயி இல்ல என்று போராடுபவர்களையும் விவசாய பெருங்குடி மக்களையும் கொச்சைப் படுத்திவிட்டார்.

 கட்சிக்காரரே படிப்பதில்லை

கட்சிக்காரரே படிப்பதில்லை

எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒருவித நிலைப்பாடு. ஆளும் கட்சியாக இருக்கும் போது அதற்கு நேரெதிரான நிலைப்பாடுகளை எடுத்து மக்களைக் குழப்பத்தில் தள்ளியுள்ளது திமுக. இப்போது 8 வழிச் சாலை சரியான திட்டம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் உணர்ந்துள்ளதால் இதுவரை மக்களிடம் அவிழ்த்துவிட்ட பொய்களுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அமைச்சர் எவ வேலு முதல்வர் முக ஸ்டாலின் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை சொல்வதன் மூலமாக திமுக தலைவரின் அறிக்கையை அவரது கட்சிக்காரரே படிப்பதில்லை என்பது நிரூபணமாகிறது.

பரந்தூர் விமான நிலையம்

பரந்தூர் விமான நிலையம்

ஜனவரி 2016 ஆம் ஆண்டு முக ஸ்டாலின் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் சென்னையில் ஒரு புதிய பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் பரந்தூர் அல்லது மாமண்டூரில் புதிய விமான நிலையம் கட்டுவதற்குத் தேர்வாகியுள்ள இடங்கள் என்று மாநில அரசு குறிப்பிட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின், மாமண்டூரை நீக்கி விட்டு திருப்போரூர், பரந்தூர், படலம் மற்றும் பண்ணுர் ஆகிய நான்கு இடங்களை புதிய விமான நிலையத்துக்கு தேர்வு செய்து அனுப்பினார்கள்.

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

பிறகு மாநில அரசின் பரிந்துரையின் படி பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு தேர்வு செய்யப்பட்டது. திமுக ஆட்சியின் கடந்த ஓர் ஆண்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மாற்று குடியிருப்புகள் கொடுப்பதற்கு முன்பு வீடுகள் இடிக்கப்பட்டதை பரந்தூர் வாசிகள் பார்த்திருப்பார்கள். அதனால் தான் இன்று திமுக அரசு நிலத்தை வழங்குகிறோம் இழப்பீடு கொடுக்கப்படும் என கூறும் வாக்குறுதிகள் எவற்றையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த திமுக அரசு பரந்தூர் மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றும் என்று அந்த மக்கள் எப்படி நம்புவார்கள்?

இன்று வரை நிறைவேற்றப்படாமல்

இன்று வரை நிறைவேற்றப்படாமல்

அவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக திமுக அரசு வழங்க வேண்டும். அவர்களுக்குச் சரியான குடியிருப்பு பகுதிகளை அமைத்துக் கொடுத்துவிட்டு அவர்களிடம் புது விமான நிலையத்துக்கு நிலங்கள் வழங்க ஒப்புதல் கேளுங்கள் . 2006ஆம் ஆண்டு திமுக கொடுத்த 2 ஏக்கர் நிலம் வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. திமுகவின் அந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதியை பரந்தூர் மக்களுக்காவது நிறைவேற்றலாமே?

உண்மையான வளர்ச்சிக்காக

உண்மையான வளர்ச்சிக்காக

தமிழகத்தில் குறைந்து வரும் முதலீடுகளைக் கண்ட பிறகாவது இனியும் அரசியல் லாபத்திற்காக மக்களைத் திசை திருப்பாமல் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்காக திமுக பாடுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. மேலும், திருவாரூர் மாவட்டத்தில் ONGC நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருவதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுளோம் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+