சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி எப்படி பேசுவார்.. திருமாவளவன் தார்மீக உரிமையை இழந்து விட்டார்.. பாஜக நாராயணன் கடும் தாக்கு

Google Oneindia Tamil News

சென்னை: தனது காலில் அணிந்த ஷூ நனைந்து விடக் கூடாது என்று, பிறர் உடலுழைப்பை உபயோகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அரசியலில் தூய்மை என்று சொல்லும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

மழை நீரில் கால் படாமல் இருப்பதற்காக, இரும்பு சேர் மீது திருமாவளவன் நிற்பதும் அவரது தொண்டர்கள் அந்த சேரை இழுத்து கொண்டே செல்வதுமான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

 கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்! கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேளச்சேரியில் வசித்து வருகிறார்.

நாடாளுமன்ற கூட்டம்

நாடாளுமன்ற கூட்டம்

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அவர் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது முழங்கால் அளவுக்கு தரை தளம் பகுதியில் தண்ணீர் தேங்கி இருப்பதை பார்த்து திகைத்தார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் அங்கே சில இரும்பு நாற்காலிகள் ஒன்றாக கோர்த்து வைக்கப்பட்டிருந்ததை பயன்படுத்தி திருமாவை மேலே ஏறி நிற்கக் கூறினர்.

இரும்பு நாற்காலி

இரும்பு நாற்காலி

அந்த இரும்பு நாற்காலியை தொண்டர்கள் தள்ளிக் கொண்டே வந்து, கார் நிற்கும் இடம் வரை அழைத்து வந்தனர். அந்த நாற்காலியில் திருமாவளவன் நின்றுகொண்டே வந்தார். இதையடுத்து திருமாவளவன் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பாஜக சார்பில் திருமாவளவனை சீண்டி வருகிறார்கள். வினோஜ் செல்வம் இந்த சம்பவத்தை விமர்சனம் செய்த நிலையில், நாராயணன் திருப்பதியும், விமர்சித்துள்ளார்.

நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி

இதுகுறித்து அவர் கூறுகையில், தன் வீட்டிலிருந்து வெளியே வந்து தன் காலணி தண்ணீரில் நனைந்து விடாத வண்ணம் பலருடைய உடலுழைப்பை உபயோகித்து சேர்களில் நடந்து வந்து திருமாவளவன் அவர்கள் காரில் ஏறி அமர்ந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு உதாரணம் திருமாவளவன் என்பதை நிரூபித்துள்ளார்.

 தார்மீக உரிமை இல்லை

தார்மீக உரிமை இல்லை

இனி, அரசியலில் எளிமை, தூய்மை என்ற கருத்துகளை சொல்லும் தார்மீக உரிமையை இழந்து விட்டார் திருமாவளவன். அதே போல், ஒடுக்கப்பட்டவர்களுக்காக இருப்பதாக சொல்லிக்கொண்டு, தொண்டர்களின் உடலுழைப்பை உறிஞ்சிய அவரின் செயலை கண்டிக்காத அரசியல்வாதிகளும் இனி தங்களை தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை இழந்து விட்டார்கள். பல ஊடகங்கள் இது குறித்து மௌனம் காப்பது அவற்றின் நடுநிலைத் தன்மையை தோலுரித்து காட்டி விட்டது. சமூக அநீதியின் முத்திரை. மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். காலம் பதில் சொல்லும். இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

English summary
BJP spokesman Narayanan Tirupati has criticized the Viduthalai Chiruthaigal Katchi leader Thirumavalavan for standing on a chair without getting his feet wet in water and says he lost the moral right to say that his politics is pure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X