சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துரைமுருகன் 'குரலில்' பொன்.ராதாகிருஷ்ணன்.. "திமுகவுடன் பாஜக கூட்டணி.." தமிழக அரசியலில் ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் போது கூட்டணிகளில் மாற்றம் வரலாம் என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணிக்கான முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட அதே நாளில் பொன்.ராதாகிருஷ்ணனிடமிருந்து இப்படி ஒரு குண்டைு தூக்கி வீசப்பட்டு உள்ளது.

கூட்டணி மாறலாம், என்று மேம்போக்காக சொன்னால் மட்டும் பரவாயில்லை. கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு சொல்லி அதிரடியை ஆரம்பித்துள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

திமுகவுடன் கூட்டணி

திமுகவுடன் கூட்டணி

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது பொன்ராதாகிருஷ்ணன் பேசுகையில், அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கலாம். ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், முதல்வர் வேட்பாளரை தேர்தல் நேரத்தில்தான் அறிவிக்கும். மேலும், தேர்தலுக்கு முன்பாக கூட்டணிகளில் மாற்றம் ஏற்படலாம். நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம். திமுகவுடன் கூட்டணி வைக்கலாம். இந்த இரண்டு கட்சிகளும் இல்லாது வேறு கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். பாஜக தலைமையில் அணி அமையலாம். எல்லாவற்றுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு ஒரே போடாக போட்டார் பொன்.ராதாகிருஷ்ணன்.

பதறும் அதிமுக

பதறும் அதிமுக

இதனால் பதறியடித்து போனது அதிமுக. அந்த கட்சியின் வைகைச்செல்வன் அளித்த ஒரு பேட்டியின்போது, பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அந்தஸ்தில் உள்ளவர்களோ, அல்லது அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, அமித் ஷா போன்ற பெரிய தலைவர்களோ கூட்டணி பற்றி கூறினால் அதை முடிவாக எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி உள்ளூர் தலைவர்கள் கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று மறைமுகமாக பொன் ராதாகிருஷ்ணனுக்கு குட்டு வைப்பது போல பேசினார்.

துரைமுருகன் போட்ட குண்டு

துரைமுருகன் போட்ட குண்டு

இதில் மற்றொரு விஷயமும் கவனிக்கத் தக்கதாக இருக்கிறது. பாஜகவில் எப்படி ஒரு பொன்.ராதாகிருஷ்ணனோ, அதேபோல திமுகவில் துரைமுருகன் அவ்வப்போது கூட்டணி பற்றி இப்படித்தான் கருத்து கூறி வருகிறார். கூட்டணிக்குள் எந்த மாற்றமும் இருக்காது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறிய நிலையில், தேர்தல் நெருங்கும் போது கூட்டணியில் மாற்றம் வரலாம் என்கிறார் துரைமுருகன். புதிய கட்சிகள் சேரக் கூடும் என்றெல்லாம் குண்டு வீசி வருகிறார்.

தமிழக அரசியல் போகும் பாதை

தமிழக அரசியல் போகும் பாதை

திமுக கூட்டணியில் தற்போது இல்லாத பெரிய கட்சிகள் என்று பார்த்தால், பாமக, தேமுதிக மற்றும் பாஜக ஆகியவைதான். அப்படி இருக்கும்போது, துரைமுருகன், இவ்வாறு பேசுவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்போது பொன்.ராதாகிருஷ்ணன், துரைமுருகன் மாதிரியே கூட்டணியில் மாற்றம் வரும் என்று பேசியுள்ளார். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், 2021ம் ஆண்டில் தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்ற பேச்சு பரபரப்பாக எழுந்துள்ளது.

English summary
BJP leader Pon Radhakrishnan and DMK leader Durai Murugan having same type of opinion on political alliance. Both the leaders are repeatedly saying, the current political alliance in Tamil Nadu may have get changed while elections are nearing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X