சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதிகாசம் என்ற குப்பை -திருமாவளவன்.. கலவரத்தை தூண்டும் திருமா - எல்.முருகன்..நீடிக்கும் வார்த்தை போர்

Google Oneindia Tamil News

சென்னை : ராமாயண மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்கள் மூளையில் திணித்து உள்ளனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசிய நிலையில், திருமாவளவன் கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்துடன் பேசுகிறார் என பாஜகவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கூட்டாட்சி கோட்பாடும் நாடாளுமன்ற ஜனநாயகமும் என்ற தலைப்பில் கருத்தரங்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம்..நிருபர்கள் எழுப்பிய கேள்வி.. ஆவேசமடைந்த எல்.முருகன்..பரபர பேட்டிதிமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம்..நிருபர்கள் எழுப்பிய கேள்வி.. ஆவேசமடைந்த எல்.முருகன்..பரபர பேட்டி

திருமாவளவன் பேச்சு

திருமாவளவன் பேச்சு

நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பகுத்தறிவு கருத்துகள் மூலமாக மக்கள் சிந்திக்க கூடாது என்பதற்காகவே ராமாயணம் மகாபாரதம் போன்ற புராண இதிகாச குப்பைகளை மக்கள் மூளையில் திணித்துள்ளனர் எனவும், இந்த சனாதன இந்தியாவில் சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் நீதி கிடையாது எனவும், தனித்தனி தீவுகளாக இருந்த சமூகங்களை மாற்றி அமைத்ததில் இரண்டு இதிகாசங்களுக்கும் பெரும் பங்கு உண்டு என பேசினார்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஐப் பொறுத்தவரை மத மாற்றத்தைத் தடுத்து காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என இரண்டு காரணங்களுக்காக தலித் மற்றும் பழங்குடி மக்களுடன் நெருங்கிப் பழகி வருகின்றனர் எனவும், இந்தியர்களை மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் இரு அமைப்பினரும் பிரிக்கிறார்கள் என பேசிய திருமாவளவன், தலித்துகளை சேர்த்துக்கொண்டு சிறுபான்மை வெறுப்பு அரசியலைக் விதைப்பதாகவும், வன்முறை யுகிதிளை கையாளுகிறார்கள் என்றார். பாஜகவுக்கும் அரசுக்கும் முதல் எதிரியே இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் எனவும், அதனை தூக்கியெரிவதே அவர்களது மறைமுக நோக்கம் எனவும் திருமாவளவன் பேசினார்.

எல்.முருகன் கண்டனம்

எல்.முருகன் கண்டனம்

திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரான எல்.முருகன் கடுமையாக எதிர்வினை ஆற்றி உள்ளார். புராணங்கள் இதிகாசங்கள் குப்பைகள் என திருமாவளவன் கூறியுள்ளது கலவரத்தை ஏற்படுத்தும் உள்நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சமத்துவம் சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை ராமாயணம் மகாபாரதம் இதிகாசத்தில் சிதைப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய முருகன், ராமாயணமும் மகாபாரதமும் இந்திய தேசத்தின் இதிகாசங்கள் எனவும் நம்முடைய முன்னோர்கள் அதனை நல்நெறி இதிகாசங்கள் என போற்றியுள்ளனர் என்றார்.

சுயநலம் இல்லையா?

சுயநலம் இல்லையா?

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து ஒருவர் பாஜகவில் இருந்தால் அவர் சுயநலவாதி என திருமாவளவன் கூறியதைச் சுட்டிக்காட்டிய முருகன், திருமாவளவன் எந்த சுயநலமும் இல்லாமல் இருக்கிறாரா என்று ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும், அவருடைய நோக்கம் என்ன? சுய நலம் இல்லாமல் இருக்கிறாரா என்பதை மக்கள் சொல்ல வேண்டும் என்றார். நம் மாநிலத்திற்கு அருகே உள்ள கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அதில் பட்டியலின அமைச்சர் எந்த இடத்தில் இருக்கிறார்? தமிழ்நாட்டில் பட்டியலின அமைச்சர் எங்கு இருக்கிறார்? எங்கே போனது சமூக நீதி என்ற முருகன், திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் அதுகுறித்து திமுகவிடம் கேட்கலாம் எனவும், பட்டியல் இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கடைசி இடத்தில் இருப்பது நியாயமா என்று ஏன் திருமாவளவன் கேட்காமல் இருக்கிறார் என கேள்வியெழுப்பியுள்ளார்.

English summary
While Vck leader Thirumavalavan has said that the epic rubbish of the Ramayana and Mahabharata myths have been inserted in the minds of the people, BJP central minister L Murugan has strongly criticized Thirumavalavan for speaking with the intention of inciting riots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X