தமிழக பாஜக புதிய தலைவர் யார்? பரபரப்புக்கு நடுவே நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி விசிட்.. அப்போ?
சென்னை: பாஜகவின் நயினார் நாகேந்திரன் இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அவரது டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கிடயே தமிழக பாஜக தலைவர் யார் என்பதை இன்று இரவுக்குள் கட்சி தலைமை அறிவிக்கும் என கூறப்படுகிறது.
தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. புதிய தலைவருக்கான போட்டியில் நான் ரேஸில் இல்லை என்பதை அண்ணாமலையே சொல்லிவிட்டார். இதனால், அண்ணமைலையை மாற்றிவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.

அடுத்த பாஜக தலைவர்
பாஜகவில் மாவட்ட தலைவர்கள், மண்டலத் தலைவர்கள் நியமனம் முடிந்துவிட்டது. மாநில தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் மட்டும் இன்னும் நியமிக்கப்படாமல் உள்ளது. மாநில நிர்வாகிகள் குறித்த பட்டியல் கட்சியின் தேசிய தலைமைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய தலைவர் யார் என்றும் நான் கைகாட்ட போவதில்லை என்று அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில், புதிய தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. புதிய தலைவர் பதவிக்கு வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரத்குமார், பொன் ராதாகிருஷ்ணன், ஏபி முருகானந்தம் உள்ளிட்டோர் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. பாஜக தலைவர் நியமனம் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்
இந்த நிலையில் தான் நயினார் நாகேந்திரன் திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் நயினார் நாகேந்திரனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே புதிய தலைவருக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன் முதலில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.
இதனால், கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு நயினார் நாகேந்திரன் தலைவராக இருந்தால் சுமூகமானதாக இருக்கும் என்று பாஜக தலைமை கருதுவதாக சொல்லப்படுகிறது. காரணம் நயினார் நாகேந்திரன் அதிமுகவில் நீண்ட காலம் இருந்தவர். அவருக்கு அதிமுக நிர்வாகிகளுடன் இயல்பாகவே நட்புறவு உள்ளது. இதனால், நயினார் நாகேந்திரன் முதன்மை சாய்ஸாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறும் நிலையில்தான், அவரது டெல்லி பயணம் மிகுந்த கவனம் பெற்று இருக்கிறது.
இன்று இரவுக்குள் முடிவு?
இதேபோல் இன்று இரவுக்குள் தமிழக பாஜக தலைவர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. பாஜக தலைவருக்கான போட்டியில் வானதி சீனிவாசன் பெயரும் அடிபடுகிறது. தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ வாக இருக்கும் வானதி சீனிவாசன், கடந்த முறை சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காதவர். அரசியல் நுணுக்கம் கொண்டவராக வானதி சீனிவாசன் கருதப்படுவதால் அவரது பெயரும் அடிபடுகிறது. எது எப்படியோ இந்த சஸ்பென்ஸ்க்கு இன்னும் ஒரு சில நாட்களில் முழுவதுமாக விடை கிடைத்துவிடும் என்றே தெரிகிறது.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications