Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னங்க.. காது குத்துறீங்களா.. திமுக எம்எல்ஏவின் ரூ.11 கோடி மொய்விருந்தை காரசாரமாக சாடிய அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி திமுக எம்எல்ஏ அசோக் குமார் நடத்திய மொய்விருந்தில் ரூ.11 கோடி வசூலான நிலையில் அதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். விஞ்ஞான ஊழல் மூலம் வருமான வரித்துறைக்கு காது குத்துறீங்களா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அசோக் குமார். இவர் சில நாட்களுக்கு முன்பு பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காதணி விழா மொய் விருந்து என்ற பெயரில் மொய் விருந்து நடத்தினார்.

ஏராளமான கிடாய்கள் வெட்டப்பட்டு உணவு சமைக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த மொய் விருந்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 15 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தான் ரூ.11 கோடி வரை வசூலானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 தனிநபர் விருந்தில் அதிகம்

தனிநபர் விருந்தில் அதிகம்

இது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது. பெரும்பாலும் கூட்டாக பலர் இணைந்து நடத்தும் மொய்விருந்தில் தான் வசூல் தொகை கோடியை தாண்டும் என்பதால் இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் தனி நபர் நடத்திய மொய் விருந்தில் வசூலான தொகையில் இதுவே அதிகபட்சம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இது தற்போது விவாதபொருளாக மாறியுள்ளது.

 அண்ணாமலை விமர்சனம்

அண்ணாமலை விமர்சனம்

இந்நிலையில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி திமுக எம்எல்ஏ நடத்திய மொய் விருந்தில் பதினோரு கோடி ரூபாய்க்கும் மேலே, மகசூல் அமோகம், இத்தனை பெரிய அறுவடையை நிகழ்த்திக் காட்டிய தனியார் இதுவரை யாரும் இல்லை. வாழ்வதற்கு வழியில்லாமல், பண முடையில் சிக்கித் தவிப்பவர்கள், வட்டிக்கு பணம் வாங்காமல் வாழ்விலே மீண்டு வர கடைசி வாய்ப்பு என்பது மொய் விருந்து நடத்துவது. அதைத் தன் சுய இலாபத்திற்காக, 100 ஆடுகள் மட்டன் குழம்பாக, குடல் கிரேவி, சிகன் ரோஸ்ட் என தடபுடலாக 8,000 பேருக்கும் மேலே விருந்து தூள் கிளப்ப, அசைவச் சாப்பாடும், சைவச்சாப்பாடும் பரிமாறியிருக்கிறார் திமுக எம்.எல்.ஏ. அசோக் குமார்.

 சத்தியமா, சாத்தியமா

சத்தியமா, சாத்தியமா

ஆனால், இந்த விருந்தின் சுவையான பகுதியே,... மொய்க்கான ஏற்பாடுகளே....சுமார் 40 மொய்வாங்கும் கவுண்டர்கள், கட்டுக்கட்டாக வரும் பணத்தை, கவனமாக எண்ணிப் பார்க்க, பணம் எண்ணும் இயந்திரம், அதை உடனடியாக வங்கிக் கணக்கில் சேர்க்க, வங்கி அதிகாரிகள், என்று குட்டி ரிசர்வ் வங்கி போல மொய் வசூல் மையம் நடத்தப்பட்டுள்ளது....வியப்பளிக்கிறதா...! இல்லையா?. மொய் விருந்துக்கு வந்தவர்கள் அனைவரும் ரூ.1,000 -ல் தொடங்கி ரூ.5 லட்சம் வரை அவரவர் வசதிக்கேற்ப மொய் செய்துள்ளனர். இது சத்தியமா...சாத்தியமா.... அங்கே தன் நிக்கிது திமுகவின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமை.

 ஒரே கல்லில் அஞ்சாறு மாங்காய்

ஒரே கல்லில் அஞ்சாறு மாங்காய்

இரண்டு இலட்சத்திற்கு மேல் காசோலைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். வீட்டில் அதிக கரன்சிக்களை வைப்பது குற்றம். வங்கியில் ரூ.50,000 க்கும் மேல் செலுத்த வருமானவரித்துறை கேள்வி கேட்கும். குவிந்திருக்கும் கருப்புப் பணம் வெள்ளையாக வேண்டும்..... என்று சாமானிய மக்களுக்கு சொல்லுது சட்டம்.... ஆனா... அசோக் குமார் அடிச்சது, ஒரே கல்லில் அஞ்சாறு மாங்காய்.

கைதேர்ந்த திமுகவினர்

கைதேர்ந்த திமுகவினர்

சாப்பிட்ட ஊருக்காரனும் ஹாப்பியில், சாப்பிடா முடியாத கருப்புப் பணமும் ஜோப்பியில், இந்த விஞ்ஞானபூர்வ வித்தைகள் காட்டும் வித்தகத்தில், தலைமயையே விஞ்சும், கைதேர்ந்த திறமைசாலிகள் திமுகவினர். இப்படித்தான் சமீபத்தில் திக தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு எடைக்கு எடை, மக்கள் வழங்கும் கரன்சிக்கள் துலாபாரத்தில் வைக்கப்பட்டது. கரன்சிக்கு எதிர் முனையில் தலைவர் அமர்ந்த தராசை ஒருவர் முட்டிக்காலால் முட்டுக் கொடுத்தது...., சமூக ஊடகத்தில் வெளியானது. அதே படக்காட்சியை மறுபடி பாருங்கள்.

 விடியல் ஆட்சி எப்போது?

விடியல் ஆட்சி எப்போது?

வலது ஓரத்தில் ஒரு வெள்ளைநிற பிளாஸ்டிக் பையிலிருந்து ஒரு நபர் மேடைக்கு வரும் மக்களிடம், பணக் கட்டுக்களைத் தருவார். தனக்கும் அந்த ரூபாய்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற முகபாவத்தில், பரிதாபமாகப் பலர் வந்து, பல இலட்சங்களை தராசில் கிடத்திச் செல்லும் நகைச்சுவைக் காட்சியும் நடைபெற்றது. என் காசைத்தானே தருகிறார்கள் என்ற தோரணையில், பணத்தை அடுக்குபவர்களின் முகம் கூட நோக்காது, நன்றிப் பரிமாற்றம் கூட இல்லாமல் தராசில் அந்தத் தலைவர் அமர்ந்திருக்க .... அங்கே தராசால், கருப்புகள்.... வெளுக்கப்பட்டது மக்களையும், அரசையும் முட்டாளாக நினைக்கும் இவர்களின் கூட்டுக் கொள்ளைகள், இப்போதுதான் வெளிச்சப்படுகிறது. மக்களுக்குப் புரியத் தொடங்கிவிட்டது. உண்மையான ஊழலற்ற தமிழகத்திற்கான விடியல் ஆட்சி, எப்போது வரும் என ஏக்கத்துடன், விருந்துகளையும், துலாபாரத்தையும், மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+