சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரி.. பாஜக பெரும் போராட்டம்.. திமுகவை விளாசும் அண்ணாமலை

Google Oneindia Tamil News

சென்னை : பொய் வாக்குறுதி அளித்துதான் ஆட்சியைப் பிடித்தோம் என திமுக ஒத்துக்கொண்டால் போராட்டத்தை கைவிடுவதாக தமிழக மாநில பாஜக தலைவரான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    நீங்கள் ஏன் Petrol-விலையை குறைக்க வில்லை? - Annamalai கேள்வி | Oneindia Tamil

    சபரிமலை ஐயப்பன் பிரசாதம் 6 நாட்களில் ரூ.5 கோடிக்கு விற்பனை.. இருவழிப்பாதையில் பக்தர்கள் அனுமதி சபரிமலை ஐயப்பன் பிரசாதம் 6 நாட்களில் ரூ.5 கோடிக்கு விற்பனை.. இருவழிப்பாதையில் பக்தர்கள் அனுமதி

    தமிழ்நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலை மீதான மாநில வரியை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக இளைஞரணி மற்றும் மகளிரணியினர் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    நவம்பர் 4ல் விலை குறைப்பு

    நவம்பர் 4ல் விலை குறைப்பு

    கடந்த நவம்பர் 4ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு உத்தரவு பிறபித்தது. இதை அடுத்து மறுநாள் இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை ஒரு மாதமாக தொடர்ந்து கொண்டே வந்த நிலையில் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 120 ரூபாயை எட்டியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல் மீதான விலை உயர்வை காரணம் காட்டி அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றமும் கண்டன.

    அனைத்து தரப்பினரும் கோரிக்கை

    அனைத்து தரப்பினரும் கோரிக்கை

    இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்த நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. அதே சமயம் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. இந்த அறிவிப்பை அடுத்து பாஜக ஆளும் மாநிலங்களில் பெரும்பாலும் விலை குறைக்கப்பட்டது.

    தமிழ்நாடு மக்கள் ஏமாற்றம்

    தமிழ்நாடு மக்கள் ஏமாற்றம்


    இதுநாள் வரை தமிழ்நாட்டில் விலை குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஏற்கனவே 3 ரூபாய் குறைக்கப்பட்டதால் மேலும் குறைக்கப்படவில்லை. இதற்கிடையே மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் பாஜக இளைஞரணி மற்றும் மகளிரணியினர் இணைந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாநிலத் தலைவர் தலைமை

    மாநிலத் தலைவர் தலைமை

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை ஏற்றார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொன் ராதா கிருஷ்ணன், கராத்தே தியாகராஜன் மற்றும் கரு நாகராஜன், பாஜக இளைஞரணித் தலைவர் வினோஜ் செல்வம் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

    வாட் வருமானம் எங்கே போகிறது?

    வாட் வருமானம் எங்கே போகிறது?

    ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்காவிடில் அதில் இருந்து வாட் வரியாக பெறப்படும் 30 ரூபாய் எதற்கு பயன்படுத்தப்படுகிறது என கேள்வி எழுப்பினர். எனவேதான் திமுக அரசுக்கு டாஸ்மாக் மீது அக்கறை இருக்கிறதே தவிர, மக்கள் மீதல்ல என குற்றம்சாட்டினார்.

    திமுக ஏமாற்றிவிட்டது

    திமுக ஏமாற்றிவிட்டது

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின் செய்திளார்களை சந்தித்து பேட்டி அளித்த அண்ணாமலை, இந்த போராட்டம் நடத்தியதற்கான காரணம் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி திமுக அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்கவில்லை என தெரிவித்தார். எனவே மற்ற மாநிலங்களைப்போல தமிழ்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமா அரசு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக அண்ணாமலை தெரிவித்தார். வாக்குறுதி தந்துவிட்டு தற்போது நிறைவேற்றாவிட்டால் திமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

    திமுக வாக்குறுதி பொய்

    திமுக வாக்குறுதி பொய்

    மேலும் பொய் சொல்லித் தான் ஆட்சிக்கு வந்தீர்கள் என்று சொல்லுங்கள் நாங்கள் உடனடியாக போராட்டத்தினை வாபஸ் பெறுகிறோம் என்றும் இந்த போராட்டம் அடுத்த 10 நாட்களுக்கு நீடிக்காது என்றும் தெரிவித்தார், பெண்கள் இந்தியாவுக்கு தனியாக சுற்றுலா செல்லவேண்டாம் என அமெரிக்கா கூறியதற்கு கருத்துத் தெரிவித்த அண்ணாமலை அப்படி பேசுவதற்கு அந்நாட்டிக்கு தகுதியே இல்லை என்று தெரிவித்தார்.

    பெண்களுக்கு தொல்லை அங்கேதான்

    பெண்களுக்கு தொல்லை அங்கேதான்

    மேலும் நியூயார்க் நகரில்தான் பெண்களுக்கு எதிரான அநீதிகள் அதிகம் அரங்கேறுவதாகவும், கண்ணாடி கூண்டில் இருந்து கொண்டு இந்தியாமீது அமெரிக்கா கல் எறியவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்.

    English summary
    Tamil Nadu state BJP leader Annamalai has said that he will give up the struggle if the DMK agrees that it came to power by making false promises.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X