விஜய் முதல்வராவது முக்கியமல்ல.. திமுக ஆட்சியில் இருக்க கூடாது.. தவெகவை அழைத்த ராம ஸ்ரீனிவாசன்!
சென்னை: தாம் முதலமைச்சராக வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் நினைக்காமல், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதை லட்சியமாக கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். விஜய் இதுவரை முதலமைச்சராக வேண்டும் எண்ணத்துடன் இருப்பதாக கூறிய அவர், விஜய் தங்களுடன் கூட்டணிக்கு வர வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகியதில் இருந்தே, அந்த கூட்டணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற விவாதம் நடந்து வருகிறது. இதனிடையே தமாகா, அமமுக மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாங்களும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

விஜய்-க்கு அழைப்பு
ஆனால் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை இணைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். நயினார் நாகேந்திரன் தொடங்கி தமிழிசை வரை பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் விஜய்-க்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதேபோல் அதிமுகவில் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ உள்ளிட்டோரும் விஜய் வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
4 முனைப் போட்டி
அதற்கேற்றபடி தவெக தரப்பிலும் அதிமுக குறித்து இதுவரை ஒருமுறை கூட விமர்சிக்கவில்லை. இதனால் விஜயும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் சட்டமன்றத் தேர்தலில் 4 முனை போட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டு வருகிறது.
ராம ஸ்ரீனிவாசன் பேட்டி
இந்த நிலையில் பாஜகவின் மாநில பொதுச்செயலாளரான ராம ஸ்ரீனிவாசன் மீண்டும் விஜய்-க்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து ராம ஸ்ரீனிவாசனிடம் தவெக கூட்டணிக்கு வருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராம ஸ்ரீனிவாசன், தவெக எங்களின் கூட்டணிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறோம். வந்தால் நல்லது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றால், வலிமையான கூட்டணி அவசியம்.
விஜயின் நோக்கம்
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான் லட்சியம். எனக்கு முதலமைச்சர் பதவி கிடைப்பது முக்கியம் அல்ல.. முக ஸ்டாலினும், உதயநிதியும் முதலமைச்சராக இருக்க கூடாது என்று விஜய் நினைத்தால், அவர் எங்களுடன் வரலாம். ஆனால் விஜய் எப்படி நினைக்கிறார் என்று தெரியவில்லை. இதுவரை தாம் முதலமைச்சராக வேண்டும் என்றுதான் நினைத்து கொண்டிருக்கிறார்.
பாஜக நோக்கம்
அப்படி நினைத்து கொண்டு இங்கு வர முடியாது. நாம் கலந்து பேசி கொள்ளலாம். ஆனால் திமுக ஆட்சியில் இருக்க கூடாது என்று நினைத்து வர வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி அப்படிதான் இணைந்துள்ளது. எங்களின் நோக்கம் திமுக ஆட்சியில் இருக்க கூடாது என்பதுதான். யார் வரக் கூடாது என்பதும் முக்கியம் தான். அதற்காகவே கூட்டணி.
சீமான், விஜய், கமல்
எங்கள் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதிமுக தலைமையின் கீழ் ஆட்சி என்பதை ஏற்க வேண்டும். திமுகவை அகற்றுவதில் 200 சதவிகிதம் தீவிரமாக இருக்க வேண்டும். சீமான், விஜய் என்று அனைவரும் வரலாம். இவ்வளவு ஏன், கமல்ஹாசன் கூட வரலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அமித்ஷாவிடம் தவெக கூட்டணிக்கு வருமா என்று கேட்கப்பட்ட போது, தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications