கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கமானவர்... ஹெச் ராஜா சொன்ன அர்த்தம் இதுதான்.. அண்ணாமலை
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விட தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பயங்கமானவர் என்று ஹெச் ராஜா சொல்லியதன் அர்த்தம் இது தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
காந்தியடிகளின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறு காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு பாஜக சார்பில் அண்ணமாலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், அதே வளாகத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் 46வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

காமராஜர் நினைவிடம்
பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசுகையில், தமிழக அரசின் அலட்சியத்தால் கிண்டி காமராஜர் நினைவிடம் பராமரிப்பில்லாமல் உள்ளது. மதுரை செல்வதற்காக முதல்வர் இந்த வழியாக இன்று காலை விமான நிலையம் சென்றபோதும் இறங்கி அஞ்சலி செலுத்தவில்லை. அரசு செய்யவில்லையென்றால், பாஜக காமராஜர் நினைவிடத்தை ஓராண்டுக்குள் புதுப்பித்து தரும். சென்னைக்கு பலமுறை வந்த சோனியா,ராகுல் கூட காமராஜர் நினைவிடத்திற்கு வந்ததில்லை.

கருணாநிதி
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விட தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பயங்கமானவர் என்று ராஜா சொல்லியதன் அர்த்தம் வேறு. கருணாநிதி தனிமனிதராக சிந்திக்கக்கூடியவர் ஆனால் ஸ்டாலினை வெளியில் இருந்து இயக்குகிறார்கள். அவரை பலம் வாய்ந்த சக்தியாக நான் பார்க்கவில்லை.
Recommended Video

நீட் தேர்வு
திமுக அரசு பெட்ரோல் விலையை ஜி எஸ் டிக்குள் கொண்டு வருவது பற்றி நடத்தும் ட்ராமாவை நிறுத்திக்கொள்ள வேண்டும். சமுக வலைதளங்களில் நான் பாஜகவில் சேர்வதற்கு முன்னாள் நீட் தேர்வை எதிர்த்து போலவும் தற்போது ஆதரிப்பது போலவும் வீடியோ பரவுகிறது. திமுக சமூக ஊடகங்களில் வேலை செய்யும் நண்பர்கள் மீண்டும் பள்ளி கல்லூரிக்கு சென்று படித்துவிட்டு வந்து வேலை பார்க்க வேண்டும்" இவ்வாறு அண்ணாமலை பேட்டியின்போது கூறினார்.

ட்விட்டர் ஸ்பேஸ்
டிவிட்டர் ஸ்பேசில் ஹெச் ராஜா அண்மையில் பேசுகையில், "கருணாநிதியை விட ஆபத்தானவர் மு.க.ஸ்டாலின்" என்று கூறியுள்ளார். திமுக அரசின் திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வரும் ஹெச் ராஜாவின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகியது. இது சர்ச்சையாகிய நிலையில் அதுபற்றி இன்றைய செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விட தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பயங்கமானவர் என்று ஹெச் ராஜா சொல்லியதன் அர்த்தம் வேறு. கருணாநிதி தனிமனிதராக சிந்திக்கக்கூடியவர் ஆனால் ஸ்டாலினை வெளியில் இருந்து இயக்குகிறார்கள் எனறு அண்ணாமலை கூறினார்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications