தீவிரவாதம் என்பது மதத்தை சார்ந்தது அல்ல! கோவை ஜமாத் அமைப்புகளுக்கு அண்ணாமலை பாராட்டு!
சென்னை: கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களும், தொடர்புடையவர்களும் இஸ்லாமியர்களாக இருப்பதால் எல்லா இஸ்லாமியர்களையும் அதில் தொடர்புடையவர்களாக பாஜக கருதவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஜமேசா முபீன் விவகாரத்தை கோவை ஜமாத் அமைப்புகள் கண்டித்துள்ளதால் அவர்களை பாஜக பாராட்ட கடமைப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.
மேலும், தீவிரவாதம் என்பது மதத்தை சார்ந்தது அல்ல என்றும் அவர் கூறினார்.

அண்ணாமலை பாராட்டு
கோவை கார் வெடிப்பு வழக்கில் 13 பேர் தொடர்புடையாக கருதப்படும் நிலையில் 5 பேரை மட்டும் கைது செய்தது ஏன் என்றும் மற்றவர்களின் விவரங்களை வெளியிடுவதில் என்ன தயக்கம் எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே கோவை ஜமாத்தினருக்கு பாஜக பாராட்டு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகவும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு இழிவு ஏற்படுத்தும் நிகழ்வை ஆதரிக்க மாட்டோம் என அவர்கள் வெளிப்படையாக அறிவித்திருப்பது முக்கியமானது எனவும் கூறினார்.

தீவிரவாத தாக்குதல்
கோவை கார் வெடிப்பு நிகழ்வு நடந்து 48 மணி நேரம் கடந்தும் காவல்துறையினர் ஏன் தீவிரவாதத் தாக்குதல் என்று அதனை இன்னும் குறிப்பிட வில்லை என்றும் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறீர்கள் எனவும் காவல்துறையினருக்கு அண்ணாமலை வினவினார். மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்துவது பாஜகவின் கடமை என்றும் கோவையில் நடந்தது தீவிரவாதத் தாக்குதல் தான் எனவும் அவர் தெரிவித்தார்.

மதம் சார்ந்தது அல்ல
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களும், தொடர்புடையவர்களும் இஸ்லாமியர்களாக இருப்பதால் எல்லா இஸ்லாமியர்களையும் அதில் தொடர்புடையவர்களாக பாஜக கருதவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், தீவிரவாதம் என்பது மதத்தை சார்ந்தது அல்ல என்றும் அவர் கூறினார்.

குழந்தைத் தனம்
கோவை காவல்துறை அதிகாரிகள் குழந்தைத் தனமாக பேட்டியளிக்கிறார்கள் என்றும் அவர்கள் அளித்த அறிக்கை தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் விந்தையாகவும், வேடிக்கையாகவும் உள்ளதாக தெரிவித்தார். தமிழக பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக கூறினார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications