‘ஆற்காடு வீராசாமி’.. வன்மையாகக் கண்டித்த கலாநிதி வீராசாமி! பேச்சுக்கு வருந்துவதாக அண்ணாமலை ட்விட்!
சென்னை : திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய தவறான தகவலை வேதனையுடன் வன்மையாக கண்டிப்பதாக கலாநிதி வீராசாமி கூறிய நிலையில் தனது பேச்சுக்காக வருந்துகின்றேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து கே. அண்ணாமலை பேசினார்.
அப்போது அவர், திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக தவறான தகவலை கூறினார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாஜக அண்ணாமலை
இதன் காரணமாக திமுகவினர் இடையே பரபரப்பான சூழல் நிலவிய நிலையில் இந்த விவகாரம் குறித்தும் ஆற்காடு வீராசாமி குறித்து பரவும் தவறான தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது மகனும் வடசென்னை தொகுதி எம்பியுமான கலாநிதி வீராசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை நேற்று வெளியிட்டார்

கலாநிதி வீராசாமி
அதில்,"தனது கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த ஆர்காட்டார் (என் தந்தை) குறித்து எப்போதும் எங்கள் தலைவர்களை பற்றி உளறும் பா. ஜ.க. தலைவர் அண்ணாமலை. இன்று தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார்." என கூறியிருந்தார். இந்நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பேச்சுக்கு வருத்தம்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"Dr. உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்! நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன்!" என பதிவிட்டுள்ளார்.

நலமாக உள்ளார்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும், திமுக முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி வயது மூப்பின் காரணமாக சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அவர் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்











Click it and Unblock the Notifications