அன்று அப்படி பேசியவர்கள் எல்லாம் இன்று ‘தமிழ்நாடு’ என்கிறார்கள்.. திமுகவை விமர்சித்த பாஜக வினோஜ்!
சென்னை : "அடைந்தால் திராவிட நாடு இல்லை என்றால் சுடுகாடு" என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது தமிழ்நாடு பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என திமுகவை விமர்சித்துள்ளார் பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் என்று பேசியதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும் என வலுவாக குரல்கள் ஒலித்து வருகின்றன.
திராவிடத்தை முன்னிறுத்திப் பேசி வந்த திமுகவினர் தற்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு எதிராக 'தமிழ்நாடு' என்ற வார்த்தையை ஒலித்து வருவது குறித்து வினோஜ் பி. செல்வம் இவ்வாறு விமர்சித்துப் பேசியுள்ளார்.

மோடி பொங்கல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி குமரநாயக்கன்பேட்டையில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் பங்கேற்று ஒரே இடத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த விழாவின்போது திமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பலர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சுடுகாடு என்றவர்கள் தமிழ்நாடு என்கிறார்கள்
இந்த விழாவில் பேசிய பாஜக தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம், "அடைந்தால் திராவிட நாடு இல்லை என்றால் சுடுகாடு என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது தமிழ்நாடு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம், தமிழ்நாடு எல்லாமே ஒன்றுதான். பாரம்பரியம் பண்பாட்டை காக்கும் கட்சியாக பாஜக விளங்குகிறது" எனத் தெரிவித்தார்.

ஆளுநர் கருத்தும் திமுக எதிர்ப்பும்
தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. ஆளுநர் ரவியின் கருத்துக்கு எதிராக #தமிழ்நாடு என்கிற ஹேஷ்டேக்கில் கருத்துகளைப் பலரும் பதிவிட்டனர். இதனால் ட்விட்டரில் தமிழ்நாடு ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.

பின்னணி
இந்த நிலையில் தான் வினோஜ் பி செல்வம், "அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்று சொன்னவர்கள் இப்போது தமிழ்நாடு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். 1937ல் பெரியார் தலைமையிலான நீதிக் கட்சி 'தமிழ்நாடு தமிழருக்கே' என்னும் முழக்கத்தைக் கையில் எடுத்தது. அப்போதைய சென்னை மாகாணத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகளும் உள்ளடங்கி இருந்ததால் அந்த முழக்கம்'திராவிட நாடு திராவிடருக்கே' என்று மாற்றமடைந்தது. அப்போது எழுந்த முழக்கம் தான் 'அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு' என்பது.

கைவிட்ட அண்ணா
பின்னர், 1962 வாக்கில் இந்திய - சீனப் போரைக் கருத்தில்கொண்டு நாட்டின் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்று திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். 'வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்து எனும்போது நாம் பிரிவினை பேசுவது அயலானுக்கு இடம் கொடுத்துவிடும். நாம் அப்படி நடந்துகொண்டால் வருங்காலத்துத் தலைமுறை நம்மைச் சபிக்கும். கோரிக்கைதான் கைவிடப்பட்டது, ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன என்று தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார் அண்ணா.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications