ஓபிஎஸ் போனில் கிடைக்கவில்லை.. நயினார் பேச்சுக்காக எடப்பாடியிடம் வருத்தம் தெரிவித்தேன்: அண்ணாமலை
சென்னை : நேற்று நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசிவிட்டதாகவும், நயினார் நாகேந்திரன் பேசிய போது தவறுதலாக வார்த்தை வந்து விட்டதாகவும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன் எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜக தொடர்ந்து தமிழகத்திற்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருவதாகவும் அதிமுகவில் சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேசக்கூடிய ஒருவர் கூட இல்லை என கூறினார்.

நயினார் நாகேந்திரன் சர்ச்சை
அதிமுகவில் ஆண்மை உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என நாயனார் நாகேந்திரன் பேசியது கட்டும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதிமுக தொண்டர்கள் நயினார் நாகேந்திரனுக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு பாஜகவில் இணைந்து அதிமுக ஆதரவின் மூலம் சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன், தற்போது ஜெயித்த பின் அதிமுகவினருக்கு ஆண்மை இருக்கின்றதா என கேட்பது எவ்வகையான மன நிலை என்று கேள்வி எழுப்பினர்.

கடும் கண்டனம்
அதிமுகவுடன் கூட்டணி இருந்து வெற்றி பெற்று எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனித்துப் போட்டியிட்டு தனது ஆண்மையை நிரூபிப்பாரா எனவும் தொண்டர்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் #நைனார்_மன்னிப்புகேள் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. மேலும் பாஜக அதிமுக கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டுமெனவும் தொண்டர்கள் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.

அண்ணாமலை பேச்சு
நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அதிமுக மூத்த தலைவர்கள் இதுவரை பதில் கூறாத நிலையில் நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசிவிட்ட தாகவும் நயினார் நாகேந்திரன் பேசியபோது ஒரு வார்த்தை தவறாக வந்துவிட்டதாகவும் இதை பெரிது படுத்த வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் ஓபிஎஸ்சிடம் பேச முடியவில்லை எனவும், எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து பேசியுள்ளதாகவும், தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியதாக தெரிவித்தார்.
Recommended Video

பெரிதுபடுத்த வேண்டாம்
தொடர்ந்து பேசிய அண்ணாமலை பாஜக இக்கட்டான நேரங்களில் இருந்த போது அதிமுக உதவியது எனவும் இயற்கையாகவே அதிமுக பாஜக இடையே ஒரு நல்ல உறவு இருக்கிறது என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தின்போது நயினார் நாகேந்திரன் பேசியது வேறு எனவும் தவறுதலாக ஒரு வார்த்தை இடம் பெற்றதால் அதன் அர்த்தம் மாறி விட்டதாகவும் இதுகுறித்து அதிமுக தலைவரிடம் விளக்கம் அளித்துள்ளதாக கூறிய அவர் இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்க வேண்டாம் எனவும் தனது பேச்சு குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications