எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
சென்னை: ஒரே வாக்குச்சாவடியில் வாக்களித்த பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ந்தனர்.
18வது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தமிழ்நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தமிழிசை சௌந்தரராஜன் வழக்கம்போல் இந்த முறையும், சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
சென்னை சாலிகிராமத்தில் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களித்த பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ந்தனர்.
தேமுதிக, இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிடுகிறது. தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன், முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் எதிர் எதிர் அணியில் உள்ள நிலையில் தமிழிசை சௌந்தரராஜன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர், ஓட்டு போட வந்தபோது நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட நிலையில், கைகுலுக்கி மகிழ்ந்து பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனும், விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications