"இது பழைய பாஜக இல்லை, "பாஜக 2.0".. சீனாவையே ஓடவிடும் கட்சி.. திமுக எல்லாம் கால் தூசி".. வினோஜ் நச்
சென்னையில் திமுகவை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பாஜகவின் கொடி பறப்பதால் திமுக அச்சமடைவதாக கூறிய அவர், தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டதாகவும் இது பழைய பாஜக இல்லை பாஜக 2.0 எனவும் அவர் கூறினார்.
சென்னை நங்கநல்லூர் பகுதியில், ஒரு தனியார் சுவற்றில் விளம்பரம் எழுதுவது தொடர்பாக பாஜக மற்றும் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.. பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் அந்த சுவற்றில் விளம்பரம் செய்திருந்தனர்.
பிறந்தநாள் முடிந்ததும் சுவர் விளம்பரத்தை திமுகவினர் அழித்துவிட்டு, அதில் தங்கள் கட்சியின் விளம்பரம் எழுதினர்... இதை பார்த்த பாஜகவினர் அந்த விளம்பரத்தை அழிக்க முயன்றனர்... விஷயம் அறிந்து திமுகவினர் சுவர் பகுதியில் குவிந்துவிட்டனர்.

மோதல்
இதனால் இரு தரப்பினரும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலும் நடந்தது.. இது சம்பந்தமாக 2 பாஜக மகளிர் நிர்வாகிகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.. அவர்களுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.. மோதலில் ஈடுபட்ட திமுக வட்டசெயலாளர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.

கண்டனம்
இந்நிலையில், திமுகவின் இந்த சம்பவத்தை கண்டித்தும், மோதலில் ஈடுபட்ட எல்லா திமுகவினரையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜகவின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட சார்பில் கலெக்டர் ஆபீஸ் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுகவுக்கு எதிரான முழக்கங்களை முன்வைத்தனர்.

வினோஜ்
இதில் பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் பங்கேற்றார். அப்போது பேசிய வினோஜ் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.. "டீக்கடை மற்றும் பிரியாணி கடைகளுக்கு திமுகவினால் பாதுகாப்பு இல்லை.. அதேபோல் போலீசாருக்கும் திமுகவால் பாதுகாப்பு இல்லை.. தமிழகத்தின் ஏராளமான பகுதியில் பாஜகவின் கொடி பறக்கிறது... இதை பார்த்துதான் திமுக பயப்படுகிறது.. தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது.. இது பழைய பாஜக இல்லை.. பாஜக 2.0..!

கால்தூசி
திமுகவில் இருந்து வெளியேறுபவர்கள் வழக்கமாக அதிமுகவில் இணைவது வழக்கம்.. ஆனால் இப்போது திமுகவின் எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.. இதுதான் பாஜகவின் வளர்சிக்கு உதாரணம்.. உலகமே பார்த்து பயப்படும் சீனாவை ஓடவிடும் கட்சி பாஜக.. எங்களுக்கு திமுக எல்லாம் கால்தூசி. திமுகவில் ஏராளமான இளைஞர்கள் இணைந்து வருவதாக சொல்கிறார்கள்.. எல்லாம் பொய்.. விட்டால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட திமுகவில் சேர்ந்து விட்டதாக திமுகவினர் பொய் சொல்லுவார்கள்" என்றார்.

சர்சசை பேச்சு
சமீபத்தில், ராமநாதபுரத்தில் ஒரு கூட்டத்தில், "ஹிந்தி படித்தால் தமிழ் அழியாது.. திமுகதான் தான் அழியும்.. கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்தை ஆதரிக்கும் திமுகவை விரட்டி அடிக்க வேண்டும்" என்று ஏற்கனவே வினோஜ் திமுகவை தாக்கி பேசியிருந்ததும், அது சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையானதும் குறிப்பிடத்தக்கது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்?












Click it and Unblock the Notifications