Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலையை வெட்டுவோம்.. பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டிக்கு போன இ-மெயில்.. குடும்பத்துக்கும் கொலை மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளராக இருக்கும் அமர்பிரசாத் ரெட்டி இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசி வருகிறார். இதனால் அவரது தலையை வெட்டுவோம். அவரது குடும்பத்தினரை கொல்வோம். அவர் எதிர்பாராத வீட்டில் 2 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை வீட்டில் வைப்போம் என்று இ-மெயிலில் மிரட்டல் விடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி. இவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். இந்நிலையில் தான் அமர் பிரசாத் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்துக்கு இ-மெயிலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Amar Prasad Reddy

‛இப்ராஹிம் அன்வர்' என்ற பெயரில் அமர் பிரசாத் ரெட்டிக்கு இ-மெயிலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

‛‛தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இந்துத்துவ ஆர்வலர்களால் குறிவைக்கப்படுகிறார்கள். நேற்று முன்தினம் ராணிப்பேட்டையில் பாஜகவின் வேலூர் இப்ராஹிம் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். பாஜகவுக்கு வாக்களிக்காததால் மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்லாமியர்கள் என்றும் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள்.

இந்து வெறியர் அமர்பிரசாத் ரெட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்தார். பாஜக எங்கள் முக்கிய இலக்காக இருக்கும். அதேவேளையில் எங்கள் சமூகத்திற்கு எதிராக யாரையும் பேச அனுமதிக்க மாட்டோம். அமர்பிரசாரத்தின் தலை பொதுவெளியில் துண்டிக்கப்படும்.

எங்கள் இஸ்லாமிய சமூகத்தின் வலிமையை காட்ட அரவது முழு குடும்பத்தையும் கொல்வோம். எதிர்பாராத நேரத்தில் அவரது வீட்டில் 2 கிலோ ஆர்டிக்ஸ் வெடிப்பொருளை வைப்போம். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேச அனுமதி அளித்த காவல்துறைக்கு இது ஒரு சவால். உங்களால் முடிந்தால் அமர் பிரசாரத் ரெட்டியை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துகள்'' என கூறப்பட்டுள்ளது.

இந்த இ-மெயிலை அமர்பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு போலீஸை ‛டேக்' செய்துள்ள அமர்பிரசாத் ரெட்டி, ‛‛எனக்கும், எனது குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கு கோரிக்கை வைக்கிறேன்.

இத்தகைய மிரட்டல் வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஐஎஸ்ஐ, பிஎஃப்ஐ பெயரில் மிரட்டல் வந்துள்ளது.ஏற்கனவே இதுபற்றி புகார் அளித்துள்ளேன். எங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்'' என்று கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+