கல்யாணமாகி 13 நாள் ஆச்சு! நெருங்கிய கணவன்..‘நோ’ சொன்ன ரேகா! கறி வாங்க போன தாய்க்கு காத்திருந்த ஷாக்!
சென்னை : சென்னையில் திருமணமான 14 வது நாளில் 35 வயதில் திருமணம் ஆன பெண் ஒருவர் தனது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருமணம் ஆகியும் கணவரை ஏமாற்ற விருப்பம் இல்லாததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கின்றனர் போலீசார்.
திருமண பந்தம் என்பது அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் வாய்த்து விடாது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த இரு உறவுகளை மட்டுமல்லாது இரு சமூகத்தையே இணைக்கும் ஒரு அற்புத நிகழ்வு தான் திருமணம்.
பெண் பார்த்து நிச்சயதார்த்தம் நடத்தி திருமணம் செய்து இரு வீட்டார் ஒன்றாக இணையும் போது அங்கே புதிய உறவு ஒன்று முளைக்கிறது. வெகு சிலருக்கே ஆண்டாண்டு காலம் திருமண உறவு நீடிக்கும் மிகச் சிலருக்கு அர்ப்ப நொடிகளில் முடிந்து போன சம்பவமும் உண்டு.

சென்னையில் அதிர்ச்சி
அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் நடந்திருக்கிறது 40 வயதாகியும் திருமணமாகாத ஆணுக்கும் 35 வயதாகியும் மணமகன் கிடைக்காத பெண்ணுக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் உடல் பருமனான தன்னால் கணவனை மகிழ்ச்சி படுத்த முடியவில்லை என்று உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார் புதுப்பெண் ஒருவர். அந்த சம்பவம் என்ன பெண் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

35 வயதில் திருமணம்
சென்னை அருகே தண்டையார்பேட்டை தமிழர் நகரைச் சேர்ந்த பிரகாஷ் - கௌரி தம்பதியினரின் 35 வயதான மகள் ரேகா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்திருக்கிறார். 35 வயதாகியும் அவருக்கு திருமணம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. குண்டாக இருப்பதால் தனக்கு திருமணமாகவில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை அவரை வாட்டி வதைத்திருக்கிறது. இந்த நிலையில் தான் சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான ராஜசேகர் என்பவர் ரேகாவை பெண் பார்த்துள்ளார்.

மருத்துவமனை பணி
பார்த்தவுடன் பிடித்துப் போக ரேகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இருவீட்டு பெரியவர்களும் இணைந்து நிச்சயதார்த்தம் நடத்தி தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி வடபழனி முருகன் கோவிலில் மிக எளிமையாக திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு ரேகா கணவர் வீட்டிலேயே தங்கி இருக்கிறார். ஐந்து நாட்களுக்குப் பிறகு தனது தாய் வீட்டுக்குச் சென்ற அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு வழக்கம் போல் பணிக்குச் சென்றிருக்கிறார் .இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனைவியை ராஜசேகரன் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக மாமனார் பிரகாஷிடம் தொலைபேசியில் கூறியுள்ளார்.

தற்கொலை
இதை அடுத்து மருமகனுக்கு கறி விருந்து வைப்பதற்காக ரேகாவின் பெற்றோர் மார்க்கெட்டுக்கு சென்று இருக்கின்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரேகா வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வீட்டிற்கு திரும்பிய பிரகாஷும் கௌரியும் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய ஆர் கே நகர் காவல் துறையினர் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

14 நாட்களில் என்ன காரணம்?
போலீசார் நடத்திய விசாரணையில் கணவர் தன்னை அழைத்துச் செல்வதற்காக வருகிறார் என்பது தெரிந்ததால் தான் ரேகா தற்கொலை செய்து கொண்டது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் திருமணம் ஆன 14 நாட்களிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்தும் அவரது கணவரான ராஜசேகரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் ராஜசேகர் கூறிய தகவல்கள் அதிர்ச்சியும் பரிதாபத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.

உடல் பிரச்சினை
திருமணமான அன்று இரவு நல்ல நேரம் பார்த்து ராஜசேகரனுக்கும் ரேகாவுக்கும் முதலிரவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் தான் குண்டாக இருப்பதால் தனக்கு சில உடல் பிரச்சினைகள் இருப்பதாகவும் தற்போதைக்கு தாம்பத்திய வாழ்க்கையில் தன்னால் ஈடுபட முடியாது என ரேகா கூறி இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு திருமணம் நடைபெற்றாலும் தனது மனைவியின் உடல்நிலையில் அக்கறை கொண்ட ராஜசேகரன் அதையெல்லாம் ஒரு பிரச்சினையாக கருதவில்லை நீ முதலில் உன் உடம்பை பார்த்துக் கொள் என்று கூறி இருக்கிறார்.

மன உளைச்சல்
5 நாட்கள் கடந்த நிலையில் தனது தாய் வீட்டுக்கு சென்று இருக்கிறார் ரேகா. அப்போது இதுகுறித்து தனது தந்தையிடம் பேசி இருக்கிறார் ராஜசேகரன். பரவாயில்லை மருமகளின் உடல் நலம் தான் முக்கியம் நீ போய் அவரை அழைத்து வா எதுவாக இருந்தாலும் நாமே மருத்துவமனையில் சிகிச்சை பெற வைக்கலாம் என கூறி இருக்கிறார். இதை அடுத்து மனைவியை அழைத்து வர சென்றிருக்கிறார் ராஜசேகரன். 14 நாட்களாகியும் கணவனுக்கு தன்னால் ஏற்பட்ட மன உளைச்சலால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்த ரேகா தற்கொலை செய்து கொண்டதாக கூறி இருக்கிறார் ராஜசேகரன். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications