ஐ எனக்கு கல்யாணம் ஆயிருச்சே.. சந்தோசத்தில் துள்ளி குதித்த மணமகள்! மேடையினு கூட பாக்கலையே! முத்த மழை!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஹைய்யா.. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்பது போல மணமகன் தாலி கட்டியதை மிகவும் உற்சாகத்தோடு கைதட்டி கொண்டாடிய மணமகள் ஒருவர் தாலி கட்டியவுடன் மணமகனுக்கு மேடையிலேயே முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வாராய் என் தோழி வாராயோ என பழைய காலத்து திருமணங்கள் எல்லாம் தற்போது கிடையாது. ஒரு காலத்தில் திருமணம் நடைபெறும் போதெல்லாம் குனிந்த தலை நிமிராமல் வளம் வந்த பெண்கள் தற்போது சிங்கப்பெண்களாய் சமூகத்தில் வாழ்ந்து காட்டுகின்றனர்.

அறிவியல் விளையாட்டு அரசியல் என அனைத்து கலங்களிலும் ஆண்களுக்கு நிகராக ஏன் ஆண்களை விட ஒரு படி அதிகமாகவே சாதித்துக் காட்டுகின்றனர்.

திருமணம்

திருமணம்

மணமகன் மட்டும் நெஞ்சை நிமிர்த்தி நடந்து வர மணமகள்கள் தலையை பார்த்து நடந்து வரும் சம்பிரதாயங்கள் எல்லாம் அந்த காலம்தான் தற்போது மணமகன் மேடையில் அமர்ந்திருக்க கூலிங் கிளாஸ் குரூப் டான்ஸ் என கலகலப்பாக நடந்து வந்து மேடையில் மணமகனை மணமகள்கள் திருமணம் செய்து கொள்ளும் காலம் வந்து விட்டது.

நடனம்

நடனம்

குறிப்பாக திருமண நாளில் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் நடன குழுவினுடன் மேடையில் மணமகன் மற்றும் மணமகள் ஆடும் வீடியோக்களும் அவற்றை பெரியவர்களும் சிறியவர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது தற்போது அந்த வகையான ஒரு திருமணம்தான் இணையத்தை கலக்கி வருகிறது.

 திருமண வீடியோ

திருமண வீடியோ

வேத மந்திரங்கள் முழங்க உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் திருமணத்தின் போது அர்ச்சகர் மணமகனின் கையில் திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க அதைக் கட்ட தயாராகிறார் மணமகன். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது போல எனக்கு கல்யாணம் ஆகிடப்போகிறது என்ற சந்தோசத்தில் துள்ளி குதிக்கும் மணமகள் கைதட்டி மணமகன் தனக்கு தாலி கட்டுவதை ரசிக்கிறார்.

மேடையில் முத்தம்

மேடையில் முத்தம்

ஒவ்வொரு முடிச்சை அவர் போட உற்சாக மிகுதி அடைந்த மணமகள் தாலி கட்டியவுடன் தனது கணவருக்கு மேடையில் உறவினர்கள் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் முத்தம் கொடுத்து தனது அன்பையும் பாசத்தையும் பரிமாறிக் கொள்கிறார். தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் அனைவராலும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை என்றாலும் பார்க்க நல்லா தானே இருக்கிறது என பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் கல்யாணம் ஆகாத 90ஸ் கிட்ஸ் இதை பார்த்து என்னப்பா இதெல்லாம் என விளாசி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+