சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரவு நேரத்தில்.. கவனமாக இருங்கள்.. பேருந்து ஓட்டுனர்களுக்கு பறந்த மெசேஜ்.. தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பின் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், பேருந்து ஓட்டுனர்களுக்கு முக்கியமான சில அறிவுரைகளை தமிழக அரசு வழங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பின் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், பேருந்து ஓட்டுனர்களுக்கு முக்கியமான சில அறிவுரைகளை தமிழக அரசு வழங்கி உள்ளது.

தமிழகத்தில் பெரிய அளவில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது. மாவட்டங்களுக்கு உள்ளே பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது.

அதேபோல் இ பாஸ் முறை மாவட்டங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே இதனால் அதிக அளவில் மக்கள் பயணம் செய்ய தொடங்கி உள்ளனர்.

 இங்கிலாந்து.. பிர்மின்ஹாம் பகுதியில் மக்கள் பலருக்கு கத்திகுத்து.. சரமாரி தாக்குதல்..போலீஸ் குவிப்பு இங்கிலாந்து.. பிர்மின்ஹாம் பகுதியில் மக்கள் பலருக்கு கத்திகுத்து.. சரமாரி தாக்குதல்..போலீஸ் குவிப்பு

மாவட்டங்களுக்கு இடையே

மாவட்டங்களுக்கு இடையே

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே விரைவு பேருந்து போக்குவரத்து வரும் 7ம் தேதி துவங்குகிறது. இதற்கான முன் பதிவு தொடங்கிவிட்டது. விரைவு பேருந்துகள், சொகுசு பேருந்துகள் இதனால் இயங்க உள்ளது. 520 பேருந்துகள் மட்டுமே முதல் கட்டமாக மாவட்டங்களுக்கு இடையே இயங்குகிறது.

அறிவுரை

அறிவுரை

தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பின் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் பேருந்து ஓட்டுனர்களுக்கு முக்கியமான சில அறிவுரைகளை தமிழக அரசு வழங்கி உள்ளது.அதன்படி சாலையில் விரைவு பேருந்துகளை ஓட்டும் போது மிகவும் கவனமாக ஓட்ட வேண்டும். கடந்த 5 மாதங்களாக பேருந்து போக்குவரத்து அமலில் இல்லை. ஐந்து மாதம் கழித்து பேருந்துகள் இயங்குகிறது.

மிக கவனம்

மிக கவனம்

இதனால் ஓட்டுனர்கள் கவனமாக இருக்க வேண்டும். சாலைகளில் தற்போது இரண்டு சக்கர வாகனங்கள் அதிகம் இயங்குகிறது. இருசக்கர வாகனங்கள் அதிகம் இயக்கப்படுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கவனமாக பணிபுரிய வேண்டும். அதிவேக வாகனங்களை மிக கவனமும் ஓட்ட வேண்டும். நகருக்கு உள்ளே செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். வேகத்தடைகளை கவனிக்க வேண்டும்.

பணி இல்லை

பணி இல்லை

ஐந்து மாதங்களாக யாரும் பணியாற்றவில்லை. இதனால் இரவு நேரத்தில் பேருந்து ஓட்டும் ஓட்டுனர்கள் கவனம் இருக்க வேண்டும். இரவு நேரத்தில் பேருந்துகளை ஓட்டுவது கடினமாக இருக்கலாம். இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டுவது கொஞ்சம் கடினமானது. இதனால் அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் மிகவும் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும். நடத்துனர்கள் ஓட்டுனர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், என்று தமிழக அரசு கூறியுள்ளது.

English summary
Bus transport started: Drivers should be care full says Tamilnadu govt to workers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X