சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த மாதம், லோன், இஎம்ஐ, வண்டி தவணை எப்படி கட்டுவது? கலங்கி போய் நிற்கதியாக நிற்கும் மக்கள்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பிரச்சனையால் இந்தியாவே முடங்கி உள்ளது. பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இன்னும் 12 நாட்களுக்கு வேலை செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அடுத்த மாதம், வங்கி கடன், மாத தவணை, வண்டி டீவு எப்படி கட்டுவது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இங்கு இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டார். இன்னொருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லியில் இருந்து ரயில் மூலம் தமிழகம் வந்துள்ளார். இதனால் யார் யாருக்கு அவர் மூலம்கொரோனா பரவியது என்ற அச்சம் நிலவுகிறது.

கொரோனா பீதி ஒருபுறம் நிலையில் வணிக நிறுவனங்கள் அடைப்பு, கடைகள் அடைப்பு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். கொரோனா அச்சம் காரணமா பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளத்திற்கு வேலைக்கு சென்ற பலரும்,அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் பலரும் வருமானத்தை இழந்துள்ளனர்.

சுற்றுலா பாதிப்பு

சுற்றுலா பாதிப்பு

மார்ச் 31 ம்தேதி வரை கடைகள் அடைக்கப்படும் என்பதால் அதில் வேலை செய்யும் மக்கள் ஊதியத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதேபோல் சுற்றுலாத்தளங்களை கடைகளை நடத்தி வந்த மக்கள் சுற்றுலா தளங்களை மூட உத்தரவிட்டுள்ளதால் அன்றாட வருமானத்தை இழந்துள்ளனர்.

ஊட்டி கொடைக்கானல்

ஊட்டி கொடைக்கானல்

வருவாய் இழப்பால் மோசமாக பாதிக்கப்படும் பகுதிகள் என்றால் ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், போன்ற இடங்கள் தான். அங்கு மக்களின் அன்றாட வருமானமே சுற்றுலாவை நம்பித்தான். இப்போது சுற்றுலா மொத்தமாக முடக்கப்பட்டதால் அவர்கள் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதேபோல் சுற்றுலா வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனத்திற்கு இன்னாரு புறம் பார்த்தால் அங்கு மக்கள் மொத்தமாக சென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் விளைவு அதைவிட பன்மடங்கு மோசமாகும் என்பதால் அரசின் உத்தரவு சரியான ஒன்று தான்.

வேலையிழப்பு

வேலையிழப்பு

இது புறம் எனில், சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை, திருச்சி என அனைத்து ஊர்களிலும் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி வருகிறார்கள். வெளியில் செல்வதை தவிர்த்தால் தான் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என்பதால் அனைத்து வேலைகளும் முடங்கி உள்ளது. இதெல்லாம் கொரோனா பரவுவதை தடுக்கும் என்றாலும் மக்களின் வாழ்வாதாரத்தையும், அன்றாட வருமானத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. இது சிறுவணிகள் உள்பட அனைவரையும் பாதித்துள்ளது. பலகோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இஎம்ஐ எப்படி கட்டுவது

இஎம்ஐ எப்படி கட்டுவது

ஆனால் மக்கள் இப்போது ஒவ்வொரு மாத வருமானத்தை நம்பித்தான் கடன் வாங்கி உள்ளார்கள் இப்போது வருமானத்தை இழந்துள்ளதால் கடனை கட்ட முடியாமல் உள்ளார்கள்.அடுத்த மாதம் வாகனத்திற்கு இஎம்ஐ கட்ட வேண்டும். கடனுக்கு இஎம்ஐ கட்ட வேண்டும். மகளிர் லோனுக்கு பணம் கட்ட வேண்டும் என ஒவ்வொரு வருக்கும் கடமை உள்ளது. ஆனால் இதை எல்லாம் வரும் மாதத்தில் அவர்களால் செய்வதற்கு வாய்ப்பு மிக குறைவு. ஏன் கொரோனா அச்சம் குறைந்து இயல்பு நிலை திரும்பும் வரைக்குமே கடன் தொகைகளை கட்டுவது கடினமாகும். மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி போய், நிர்கதியாய் தவித்து வருகிறார்கள்.

ஒரு மாத விலக்கு வேண்டும்

ஒரு மாத விலக்கு வேண்டும்

எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு நாடுமுழுவதும் அடுத்த மாத வங்கி கடன் இஎம்ஐ, வாகன கடன் தவணை தொகை. மகளிர் லோன் தவணை உள்ளிட்ட கடன் தொகைகளுக்கு ஒரு மாத கால விலக்கு அளிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி செய்தால் மே மாதத்தில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் போது எப்போதும் போல் மாறிவிடும். எனவே அரசு இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

English summary
business out for coronavirus: How to pay a Lone, EMI, vechile lone emi at Next Month , Tamilnadu peoples are ecstatic
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X