அண்ணாமலை யாத்திரையில்.. கூட்டமாக.. கொடியோடு நின்ற விஜய் மக்கள் இயக்கத்தினர்.. புஸ்ஸி ஆனந்த் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் நடைபெற்ற பாஜக பாதயாத்திரையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கலந்து கொண்டது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு பாஜக சார்பில் 'என் மண் என் மக்கள் யாத்திரை' கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.

Bussy Anand explain about Vijay Makkal Iyakkam member participating in Annamalai Yatra

இதுவரை 8 நாள் யாத்திரை முடிந்துவிட்டது. அண்ணாமலை தற்போது மதுரையில் நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். மதுரை நடைப்பயணத்திற்கு முன்பாக சிவகங்கையில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் இருக்கவே நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதற்குத்தான் பாஜகவில் இணைந்தேன் .

கட்சியின் தொண்டனாக தலைமை சொல்வதை கேட்பேன். அவர்கள் சொல்வதை கேட்டு அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவேன். டெல்லி போவதில், அங்கே பதவி பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். தமிழ்நாட்டில்தான் நான் அரசியல் செய்வேன், என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

மதுரை ஷாக் சம்பவம்: அதன்பின் மதுரையில் நடைபெற்ற பாஜக பாதயாத்திரையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் கொடிகளுடன், விஜய் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். விஜய் ரசிகர்கள் இடையே இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Bussy Anand explain about Vijay Makkal Iyakkam member participating in Annamalai Yatra

அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து இவர்கள் இப்படி பாதயாத்திரையில் கலந்து கொண்டது கடுமையான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்புத் தலைவர் சி.கே.பத்ரி சரவணன் முன்னிலையில் நிர்வாகிகள் பலரும் அண்ணாமலையின் பாதயாத்திரையில் பங்கேற்றனர்.

வீடியோக்கள்: இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. விஜய்யும் அண்ணாமலையும் அண்ணன் தம்பி தான். இருவரும் ஊழலை ஒழிக்க வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். அரசியல் ரீதியாக இருவரும் ஒரே மாதிரிதான்.

விஜய் மூத்தவர், அண்ணாமலை இளையவர். இருவரும் மக்களுக்கு நல்லது சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். இருவரும் மக்களுக்கு நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். அப்படி இருக்க அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். நல்ல விஷயத்தை யார் செய்தால் என்ன?

Bussy Anand explain about Vijay Makkal Iyakkam member participating in Annamalai Yatra

இருவரும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதுதான் சரி. அண்ணாமலை இதைத்தான் சொல்கிறார். விஜய்யை அரசியலுக்கு அழைக்கிறோம். அவரும் வந்துவிடுவார்., என்று கூறினார். அவரின் இந்த பேச்சு கடும் விவாதங்களை ஏற்படுத்தியது. இணையத்தில் இந்த வீடியோக்கள் டிரெண்டானது. இதில் கொடிகளுடன், விஜய் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். விஜய் ரசிகர்கள் இடையே இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்தான் மதுரையில் நடைபெற்ற பாஜக பாதயாத்திரையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கலந்து கொண்டது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில், தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+