மொத்தமாக ஒதுக்கிய மோடி.. தமிழ்நாடு கூட்டணி கட்சிகள்.. யாருக்கும் அமைச்சரவையில் இடமில்லை.. என்னாச்சு?
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக, பாமக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.
மத்திய அமைச்சரவை இன்றி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். இதில் 15 பேர் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்க உள்ளனர்.

இடமில்லை
தமிழ்நாட்டை சேர்ந்த கூட்டணி கட்சிகள் எதற்கும் மத்திய அமைச்சரவையில் பாஜக இடம் கொடுக்கவில்லை. பீகாரில் பாஜகவின் கூட்டணியான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 4 அமைச்சரவை பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் உத்தர பிரதேசத்தில் 7, குஜராத்தில் 5, மகாராஷ்டிராவில் 5, கர்நாடகாவில் 4 என்று பல்வேறு மாநிலங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளன.

அமைச்சரவை
ஆனால் தமிழ்நாட்டில் இருந்து ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக தலைவர் எல் முருகன் மட்டுமே அமைச்சர் ஆகிறார். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக, பாமக உள்ளிட்ட இரண்டு முக்கிய கட்சிக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பாஜக 4 இடங்களில் வெல்ல அதிமுக முக்கிய காரணமாக இருந்தது.

அதிமுக
தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்கு அதிமுகவின் கூட்டணி மிக முக்கியமான காரணமாக இருந்தது. ராஜ்யசபாவில் அதிமுக மூத்த எம்பி தம்பிதுரையும், லோக்சபாவில் எம்பி ரவீந்திரநாத்தும் அமைச்சரவை பதவிக்கு தீவிரமாக முயன்று வந்தனர். ஆனால் இவர்கள் எவ்வளவு முயன்றும் அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக நிறைய ரகசிய சந்திப்புகள் நடந்து இருக்கின்றன.

தூது சென்றது
ஆனால் தமிழ்நாட்டில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட பல அதிமுக தலைவர்கள் தூது விட்டும் கூட பிரதமர் மோடி அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் கொடுக்கவில்லை. அதேபோல் பாமகவும் ஒற்றை எம்பி அன்புமணியை அமைச்சராக்க முயன்று தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாடு கூட்டணி கட்சிகள் குறித்து இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பிரதமர் மோடி பெரிதாக விவாதம் நடத்தவில்லை என்று தெரிகிறது.

சிபாரிசு
மற்ற கூட்டணி கட்சிகள் போல அமைச்சரவை பதவியை பெறும் அளவிற்கு அதிமுக, பாமக பெரிதாக மூவ் எதையும் செய்ய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. அமைச்சரவையில் இடம்பெற அதிமுக, பாமகவிற்கு பாஜக மூத்த தலைவர்கள், தமிழ்நாடு பாஜக தலைவர்கள் பெரிதாக சிபாரிசு எதுவும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதிருப்தி இல்லை
அமைச்சரவை பதவி கட்டாயம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, பெரிதாக அதிருப்தி இருக்காது. சமாளித்துக் கொள்ளலாம் என்று பாஜக தேசிய மேலிடம் கருதியதால் தமிழ்நாடு கூட்டணி கட்சிகள் எதற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்கிறார்கள். பாஜக மேலிடத்தின் இந்த முடிவால் அதிமுக, பாமக தரப்பு கடும் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications