சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டீல் ஓகே?".. பாஜகவின் ஆக்‌ஷன் ஆரம்பம்.. 3 பேருக்கும் ஒரே நேரத்தில் கொக்கி.. மொத்தமாக சிக்கிய அதிமுக

எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் தரப்புக்கு பாஜகவின் மறைமுக உத்தரவு வந்துள்ளதா

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தினால் கட்சி கரைந்து கொண்டிருப்பதாக, அதிமுக நிர்வாகிகள் புலம்பி வரும் நிலையில், முக்கிய மேலிட தகவல் ஒன்று வட்டமடித்து வருகிறது.

அரசியல் கட்சியின் உட்பிரச்சனைகளை, ஒரு நீதிமன்றம் தீர்த்து வைப்பது என்பது அந்த அளவுக்கு சுலபமில்லை.. அரசியல் கட்சி பிரச்சனைகளுக்கான தீர்வை, அரசியல் கட்சிக்குள்ளேதான் தேட முடியும் என்பதே உண்மை.

எனினும் சட்டரீதியான போராட்டங்களை ஓபிஎஸ் + எடப்பாடி இரு தரப்புமே எடுத்து வருவதால், அங்கு வரும் தீர்ப்பு மட்டுமே எடப்பாடி & ஓபிஎஸ் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியதாக உள்ளது.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி - ஊழியர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்- கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்! உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி - ஊழியர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்- கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்!

 10 சீட்டுக்கள்

10 சீட்டுக்கள்

அதேசமயம், அதிமுக பலவீனப்பட்டு இருப்பதை, தற்சமயம் பாஜக விரும்பவில்லை.. கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் + வலுவில்லாமலும் இருக்க வேண்டும் என்றே கணக்கு போடுகிறது.. மேலும், திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால், அது அதிமுகவால் மட்டுமே முடியும் என்பதை பாஜக ஆணித்தரமாக நம்புகிறது. எனவே, திமுகவை எதிர்க்க அதிமுகவின் பலம், மொத்தமாகவே பாஜகவுக்கு தேவைப்படுகிறது.. இதுபோக, தமிழகத்தில் 10 சீட்டுக்களையாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பிலும் ஈடுபட்டுள்ளது..

அமித்ஷா

அமித்ஷா

எனவே, ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, இவர்கள் 2 பேரும் பிரிந்து விட்டால் இலை முடங்கும் அபாயம் உள்ளது.. இலை தான் கட்சியின் மூலவேர் என்பதால், அதை முடக்கும் அளவுக்கு போய்விடக்கூடாது என்பதே பாஜகவின் எண்ணம்.. "தமிழகத்திலும் பாஜக ஆட்சி நடக்கும்" என்று ஹைதராபாத் மாநாட்டில், அரசியல் சாணக்கியரான அமித்ஷா சொல்லியிருந்ததன் பின்னால் ஆயிரம் கால்குலேஷன்கள் இருக்கிறதாம்.. சமீபகாலமாக, தமிழகத்தில் பாஜக நன்கு வளர்ந்துள்ளது என்றும், பாஜக மீதான நல்ல மாற்றம் தென்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடியும் கவனித்து, தமிழக பாஜக தலைவர்களிடம் பகிர்ந்து கொண்டாராம்.

 அட்வைஸ்கள்

அட்வைஸ்கள்

எனவேதான், காலம் கனிந்து வரும்சூழலில், அதிமுகவில் 2 பேரும் சண்டை போட்டு கொண்டு வருவதை மேலிடம் ரசிக்கவில்லை என்கிறார்கள்.. எடப்பாடி, ஓபிஎஸ் ஆகிய இருவருமே ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆரம்பம் முதலே அமித் ஷா வலியுறுத்தி வருகிறார்.. தன்னுடைய தமிழ்நாட்டுப் பயணத்தின்போதும்சரி, தன்னை சந்திக்க வரும் அதிமுக எம்பிக்களிடமும் சரி, இது ஒன்றை மட்டும்தான் விடாமல் அறிவுறுத்துகிறார்.. ஆனால், ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி பல தருணங்களில் அமித் ஷாவிடம், தமது ஆதரவு எம்பிக்கள் மூலமும், நேரடியாகவும் உணர்த்திவிட்டார்..

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

அதேபோல, அதிமுகவுக்குள் 95 சதவீதம் தனக்கு மட்டுமே மெஜாரிட்டி உள்ளது, ஓபிஎஸ் ஒரு பூஜ்ஜியம் என்றெல்லாம் அமித்ஷாவிடம் எடப்பாடி எடுத்துரைத்தும், அதை அவர் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.. இப்போது விஷயம் என்னவென்றால், அதிமுகவில் உள்ள பிரிந்து கிடக்கிறவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பாஜக மறைமுகமான அழுத்தத்தை தர ஆரம்பித்துவிட்டதாம்.. அனைவரும் என்று பாஜக சொல்வது, எடப்பாடி, ஓபிஎஸ் மட்டுமல்லாமல் சசிகலா, தினகரனையும் சேர்த்தேதான் சொல்கிறதாம்.. ஓபிஎஸ் இணைய தயாரானாலும், எடப்பாடி அதே பிடிவாதத்துடன் உள்ளார்.. நேற்றுகூட ஜெயக்குமார்,

 செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

சசிகலாவுடன் சமரசமே கிடையாது என்று சொல்லிவிட்டார்.. அதிமுக விசுவாசி ஒருவரும் சசிகலா பக்கம் போக மாட்டார்கள்.. உண்மையான தொண்டர்கள் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.. கட்சி எடுத்த முடிவில் அனைவரும் இப்போது வரை உறுதியாக இருக்கிறோம் என்று மீண்டும் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.. செல்லூர் ராஜுவோ, சசிகலா என்றாலே வழவழா கொழகொழவென பதிலையே தருவார்.. இதற்கும் அப்படிதான் கருத்து சொல்லி உள்ளார்.. "கழகத்துக்கு எது நல்லதோ, அதை இடைக்கால பொதுச்செயலாளர் நிச்சயமாக செய்வார். அவருக்கு எது சரி என்று தெரியும்.. அதனாலதான்அவரை தலைவராக கொண்டு வந்திருக்கிறோம் என்றார்.

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரனோ, அதிமுகவுடன் அமமுக ஏன் சேர வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்.. இணைய வேண்டிய அவசியமே இல்லை" என்று கூறியுள்ளார்.. ஏற்கனவே, பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரும் வழக்கே இன்னும் நிலுவையில், உள்ளபோது, ஓபிஎஸ் + எடப்பாடி இவர்களும் அடுத்தடுத்து கோர்ட்டையே நாடியுள்ளபோது, யார் உத்தரவை பின்பற்றுவது என தெரியாமல் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்கள், குழம்பி போயுள்ளனர்..

 கறார் பிடிவாதம்

கறார் பிடிவாதம்

இப்படிப்பட்ட நெருக்கடி நேரத்தில், அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று மேலிடத்தின் கறார் உத்தரவு எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆக போகிறது? இடைக்கால பொதுச்செயலாளர் என்னதான் செய்ய போகிறார்? அமித் ஷாவின் அழைப்பை கடந்த காலங்களில் ஏற்காமல் போனதால் ஆட்சியை பறிகொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அதே பிடிவாத போக்கை இப்போதும் அவர் தொடர்ந்தால் அதை அதிமுக கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் ரசிக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

English summary
Can BJP unite AIADMK leaders and What was the Major Instructions from Delhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X