13 + 7 + 20 சீட்.. புஸ்ஸூனு போச்சே.. எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலி.. தில்லு பாஜக.. சிக்குதா சில்வண்டு
சென்னை: பாஜக எம்பி தேர்தலுக்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.. அந்தவகையில், அதிமுக கூட்டணியில் பாஜகவும் இடம்பெற உள்ள நிலையில், புது தகவல் ஒன்று கசிந்து கொண்டிருக்கிறது.
எம்பி தேர்தலுக்கு தேசிய கட்சிகள் தயாராகி கொண்டிருக்கின்றன.. இதில் பாஜக சற்று வேகம் எடுத்து வருகிறது.. அதிலும் தென்மாநிலங்களில் எப்படியாவது அதிக இடங்களை பிடித்துவிட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது.
அந்தவகையில் தமிழகத்திலும் இதற்கான வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.. இதற்காக அதிமுகவுடனான கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளது..

அண்ணாமலை கறார்: கடந்த முறை, எம்பி தேர்தலின்போது, அதிமுக தலைமையிலான கூட்டணியில், வெறும் 5 இடங்களில் மட்டுமே பாஜக போட்டியிட்டது... ஆனால் இந்த முறை அப்படியில்லையாம்.. நிறைய இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்... 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து சொல்லி வரும்நிலையில், எத்தனை சீட்டுகளை அதிமுக ஒதுக்கப்போகிறது என்று தெரியவில்லை.
இப்போது கூட்டணி முடிவாகி உள்ளநிலையில், புது தகவல் ஒன்று கசிந்துள்ளது.. அதன்படி, மொத்தமுள்ள 40 தொகுதிகளில் சரிபாதியாக 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டுமாம்.. மீதமுள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டுமாம்.. இப்படி ஒரு டீலிங்கை அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தி வருகிறதாம். அதுமட்டுமல்ல, ஒதுக்கப்படும் அந்த 20 தொகுதிகளை, தங்களுக்குள் பிரித்துக் கொள்வதாகவும் தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்களாம்.

20 - 20 சாத்தியமா: அந்த 20 தொகுதிகளில், 13 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. அந்த 13 தொகுதிகளையும் பாஜக அடையாளம் கண்டுள்ளதுடன், அந்த 13 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களும் மேலிடத்துக்கு லிஸ்ட் போட்டு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாம்.. 13 தொகுதிகள் போக மீதமுள்ள 7 தொகுதிகளை தங்களது கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது..
அந்த 7 தொகுதிகள் யார் யாருக்கு தெரியுமா? ஓபிஎஸ் அணி + அமமுக டிடிவி தினகரன், தமாகா ஜிகே வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர் போன்றோருக்குதான் அந்த தொகுதிகளை வழங்க பாஜக கணக்கு போட்டு வருகிறதாம். ஆனால், பாஜகவின் இந்த வியூகங்களுக்கு அதிமுக எப்படி ரியாக்ட் செய்ய போகிறது என்று தெரியவில்லை..
காரணம், தங்களுக்கு சாதகமாக உள்ள தொகுதிகள் என்னென்ன என்று சில மாதங்களுக்கு முன்பே பாஜக ஆய்வுப்பணியில் ஈடுபட்டது.. அதன்படி, 10 முக்கிய தொகுதிகளில் பாஜகவுக்கான சாதக சூழல் நிலவுவதையும் அறிந்து, அங்கே களப்பணியையும் துவங்கிவிட்டது.. இவையெல்லாம் டெல்லிக்கு 2 மாதங்களுக்கு முன்பேயே லிஸ்ட்டாக அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.. பாஜகவுக்கு சாதகமான தொகுதிகள் எல்லாமே, அதிமுக, திமுகவுக்கும் சாதகமான தொகுதிகள்தானாம்.

சம்மதமா? : கடந்த முறை உள்ளாட்சி தேர்தலின்போதே, கோவை, மதுரை, சென்னையை தங்களுக்கு விட்டுக்கொடுக்கும்படி பாஜக கேட்டுக் கொண்டும், அதிமுக விட்டுத்தரவில்லை.. அதனாலேயே பாஜக, தனித்து களம் கண்டது.. இப்போது, பாஜக சீட் எண்ணிக்கையை மட்டுமே உயர்த்தி கேட்டுள்ளதாக தெரிகிறது.. ஆனால், தொகுதிகள் என்னென்ன என்று தெரியவில்லை.. அப்படியே சாதகமான தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கினாலும், பாதிக்கு பாதி என்ற ரேஞ்சுக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிப்பாரா? என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது..!
ரியாக்ஷன் என்ன: யாரை வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்கி கொண்டிருக்கிறாரோ, அவர்களை பாஜக தன்பக்கம் இழுப்பதுடன், ஓபிஎஸ், தினகரன் உள்ளிட்டோருக்கு சீட்டையும் ஒதுக்க போவதாக தெரிகிறது.. ஒருவேளை இந்த தகவலும் உண்மையானால், எடப்பாடி பழனிசாமி இதற்கு எப்படி ரியாக்ட் செய்ய போகிறார் என்பதும், அதைவிட அதிக ஆர்வத்தை கிளப்பி விட்டுள்ளது..
இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. நேற்றைய தினம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில் வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருந்தார் என்றாலும், முன்புபோல காட்டமாக விமர்சிக்கவில்லை.. ஒருவேளை, விரைவில் ஒரே கூட்டணிக்குள் வரலாம் என்பதால், இப்படியான மென்மைப்போக்கை கையில் எடுத்திருக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications