ப்ளேட்டை திருப்பிய எடப்பாடி.. "அண்ணே ரெடியா, அவர் போன் வந்துடும்".. அமித்ஷாவா? சொல்றது யார் பாருங்க

எடப்பாடி பழனிசாமி பாஜகவை பகைத்து கொண்டு அரசியல் செய்ய முடியாது என்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் சொன்ன மெகா கூட்டணியில், பாஜக இடம்பெறாது என்று எடப்பாடி பழனிசாமி இதுவரை சொல்லாதபோது, பாஜகவை பகைத்துக் கொண்டு, அவரால் அரசியல் செய்ய முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்கிறார்கள்.

கடந்த வாரம், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, "சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை தாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி.

மோடி, அமித்ஷா கட்சி வேறு, எங்கள் கட்சி பாஜக தேசியக் கட்சி. அதிமுக, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழகத்தை சிறப்பாக ஆண்ட கட்சி அதிமுக. இரண்டு கட்சிகளும் வேறு வேறு" என்று கூறயிருந்தார்.

ஸ்ட்ரேடர்ஜி

ஸ்ட்ரேடர்ஜி

எடப்பாடியின் இந்த பேச்சு அரசியல் அரங்கில் அதிர்வலைகளை இன்னமும் ஏற்படுத்தி வருகிறது.. அமித்ஷாவையே எதிர்த்து பேசிவிட்டாரே, அப்படியானால் பாஜகவை பகைத்து கொள்ள எடப்பாடி தயாராகிவிட்டாரா? அல்லது எடப்பாடியை எதிர்க்க பாஜகவும் துணிந்துவிட்டதா? என்ற கேள்விகள் வட்டமடித்து வருகின்றன. இந்நிலையில், அரசியல் விமர்சகர் லட்சுமணன், ஒரு பிரபல சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.. அத்துடன், பாஜகவின் வியூகங்கள் குறித்தும் அதில் பகிர்ந்துள்ளார்.. அந்த சுருக்கம்தான் இது:

 அப்பாயிண்ட்மென்ட்

அப்பாயிண்ட்மென்ட்

அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி அப்பாயிண்ட்மென்ட் கேட்ட விஷயம் எல்லாருக்குமே தெரியும்.. கட்சியின் மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.. அதற்கு முன்தினம், பிரதமரை வரவேற்கவும் எடப்பாடி தரப்பு சென்றது.. வழியனுப்பவும் எடப்பாடி தரப்பு சென்றது.. பிரதமரை வழியனுப்பி வைக்க இரவு நேரம் ஆகிவிட்டது.. அதற்கு பிறகு அவசர அவசரமாக சென்னை திரும்பினார் எடப்பாடி.. காரணம், மறுநாளே அமித்ஷாவை வரவேற்க வேண்டியிருந்தது.. அதுமட்டுமல்ல, மூத்த நிர்வாகிகள் 5 பேருக்கும் எடப்பாடியே போன் செய்தார்.. "அண்ணே நீங்க எல்லாரும் சென்னை வந்துடுங்க.". என்று வரவழைத்தார்..

 அப்பாயிண்ட்மென்ட்

அப்பாயிண்ட்மென்ட்

அந்த 5 நிர்வாகிகளும் சென்னை கிளம்பி வந்தாங்க.. "தயாராக இருங்க, 1 மணிக்கு போன் வந்துடும்" என்றார் எடப்பாடி.. இதற்கெல்லாம் நானே சாட்சி.. அதற்கு மேல் சொல்வது நாகரீகமில்லை.. ராஜ்பவனிலோ அல்லது வேறு இடத்திலோ நிச்சயம் அமித்ஷாவை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று கடைசிவரை நம்பி கொண்டிருந்தார் எடப்பாடி.. ஆனால், என்ன காரணமோ அதை அமித்ஷா தவிர்த்துவிட்டார்.. ஓபிஎஸ் நேரம் கேட்டும் அவருக்கும் தரப்படவில்லை.. 2 பேருக்குமே அப்பாயிண்ட்மென்ட் தரவில்லை என்பதே நிஜம்..

 மாறுது பிளேட்

மாறுது பிளேட்

இப்படி ஒரு நிஜம் இருக்கும்போது, அமித்ஷா வரும்போதெல்லாம் சந்திக்க வேண்டுமா? என்று கேட்டு பிளேட்டை எடப்பாடி மாற்றி போடுகிறார் என்றால், இதற்கு தமிழ்நாடு பாஜகதான் பதில் சொல்ல வேண்டும்.. ஏனென்றால், கிட்டத்தட்ட பாஜகவை அவமானப்படுத்துவதுபோல் அமைந்துள்ளது எடப்பாடியின் பேச்சு.. "அமித்ஷாவை சந்திக்க, எடப்பாடி, ஓபிஎஸ் அப்பாயிண்மென்ட் கேட்டும், அமித்ஷாவுக்கு நேரமின்மை காரணமாக, சந்திக்க முடியவில்லை" என்ற ஒரு மேம்போக்கான காரணத்தை அண்ணாமலையாவது சொல்லி இருக்க வேண்டும்..

 பச்சை பொய்

பச்சை பொய்

அப்படி சொல்லி இருந்தால், பாஜகவின் மானத்தை தமிழகத்தில் அண்ணாமலை பாதுகாத்தார் என்று சொல்லலாம்.. அண்ணாமலையும் இந்த விஷயத்தில் மவுனம் காத்து, பாஜகவை அவமானப்படுத்திவிட்டார்.. அதிமுக தொண்டர்களிடம், எடப்பாடியும் உண்மையை மறைத்துவிட்டார்.. அதற்காக, பாஜகவுக்கு எதிராக எடப்பாடி வாள் சுழட்ட ஆரம்பித்துவிட்டார் என்றெல்லாம் சிலர் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.. பாஜகவை கழட்டிவிட தயாராகிவிட்டார் என்பதை எதை வைத்து முடிவு செய்கிறார்கள்? அமித்ஷா விஷயத்தில் எடப்பாடி சொன்னதை மட்டுமே வைத்து சொல்லக்கூடாது.. காரணம், அது பொய்..

 டென்ஷன்

டென்ஷன்

மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி நாமக்கல்லில் சொன்னாரே, அதில் பாஜகவுக்கு இடமில்லை என்று சொன்னாரா? ஏன் சொல்லவில்லை? ஏனென்றால், இன்றுவரை கூட்டணி தொடர்கிறது என்றே அர்த்தம்.. கூட்டணி முறிந்ததாக யாருமே அறிவிக்கவில்லையே.. கூட்டணிக்கும் இன்னும் ஒரு வருடம் உள்ளது.. ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று, அதிமுக தொண்டர்கள்தான் பதைபதைக்கிறார்கள்.. அந்த டென்ஷன் எடப்பாடியிடம்கூட இல்லையே.. அவர் ஒன்றும் பதறலையே.. அவர் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தார், இப்போது பணபலத்துடன், கட்சி பலத்துடன், மந்திரி பதவிக்கு இணையான எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியுடன், காரில் தேசிய கொடி பறக்க, பறந்துட்டுதான் இருக்கிறார்..

 ஆப்ஷன் 1

ஆப்ஷன் 1

எடப்பாடிக்கு கவலை இல்லை, தொண்டர்களுக்குதான் கட்சி பற்றின கவலை இருக்கிறது.. பாஜகவுக்கும் இந்த கவலை இல்லை.. ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்று பாஜக நிச்சயம் விரும்பும்.. ஆனால், தேர்தல் சமயத்தில்தான் விரும்பும்.. அதற்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது.. இந்த ஒரு வருடத்தில் பாஜக தன் அரசியல் விளையாட்டை விளையாடவே செய்யும்.. 2 ஆப்ஷன்கள் பாஜகவுக்கு இருக்கிறது.. அதிமுகவை பலவீனத்திலேயே வைத்திருந்து, தங்களின் கட்சியை வளர்ப்பது என்பது ஒருவகை.. ஒருவேளை கட்சி வளராமல் அப்படியே உள்ளதென்றால், கூட்டணி தேவை இருக்கிறதென்றால், அடுத்த வரும் ஜனவரி பிப்ரவரியில்தான்அதை பற்றி யோசிப்பார்கள்..

 ஆப்ஷன் 2

ஆப்ஷன் 2

2021-ல் அமித்ஷா சொன்ன, ஒருங்கிணைந்த அதிமுக என்ற கருத்தையே இந்த முறையும் வலியுறுத்துவார்.. கடந்த முறை எடப்பாடி அமித்ஷாவை மறுத்து பேசினார்.. காரணம் அப்போது கையில் முதல்வர் பதவி இருந்தது.. ஆட்சி இருந்தது.. இன்று இரண்டுமே இல்லை.. இன்றும்கூட, எடப்பாடி மீது வழக்கு போடும் இடத்தில் பாஜக உள்ளது.. பாஜகவிடம் பணிந்து போக வேண்டிய இடத்தில் எடப்பாடி உள்ளார். எவ்வளவு தூரம் பாஜகவை எதிர்க்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், பாஜகவை பகைத்து கொள்ள அவசரம் காட்ட மாட்டார் எடப்பாடி என்றே நினைக்கிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+