சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரெடியான நயன்தாரா.. முக்கிய முடிவு அறிவிப்பு?.. குறுக்கே வந்த "முக்கிய புள்ளி.." பறந்த அட்வைஸ்.. பரபர

நயன்தாராவிடம் உரிய விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருந்தால், உரிய சட்ட விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா? என்ற சர்ச்சைகள் கிளம்பி உள்ள நிலையில், இதுகுறித்து நயன்தாரா முக்கிய முடிவு ஒன்றை எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு வாடகை தாய் முறையின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், சட்டப்படி இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டது சரியா? என்ற கேள்விகள் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன.

காரணம், இந்தியாவில் வாடகைத்தாய் தடை சட்டம் இதற்காகவே பிரத்யேகமாக உள்ளது... எனினும், இதில் சில விதி விலக்குகளும் உள்ளன.. இரண்டு வகையான வாடகை தாய் முறைகள் உள்ளன. முதல் முறை பாரம்பரிய வகை என்பார்கள், அதாவது Surrogacy in the traditional sense.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாடகை தாய் சர்ச்சை.. ஒரு வாரத்தில் அறிக்கை.. அடுத்து விசாரணை? அமைச்சர் பதில்நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாடகை தாய் சர்ச்சை.. ஒரு வாரத்தில் அறிக்கை.. அடுத்து விசாரணை? அமைச்சர் பதில்

 2 சிஸ்டம்

2 சிஸ்டம்

இந்த வகை மூலம் கணவனின் விந்தணு எடுக்கப்பட்டு வாடகை தாய் செயற்கையான முறையில் கருவூட்டப்படுகிறார்... ஆனால், இதற்கு நம் நாட்டில் அனுமதி இல்லை.. இரண்டாவதாக, கர்ப்பகால வாடகைத் தாய் முறை (Gestational surrogacy) என்பார்கள்.. இந்த முறையில் ஆணின் விந்தணு, அவரின் மனைவியின் கரு முட்டை சேர்ந்து கருவாக உருவாக்கப்படும். பிறகு, அந்த கரு வாடகை தாயின் வயிற்றில் செலுத்தப்படும்.. இதற்கு நம் நாட்டில் தடை கிடையாது.. ஆனால், சில விலக்குகளுடன் இதற்கு அனுமதி உண்டு.. இந்த முறைப்படிதான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றதாக கூறப்படுகிறது.

 பாயிண்ட் டூ பாயிண்ட்

பாயிண்ட் டூ பாயிண்ட்

தம்பதி இருவரில் யாராவது ஒருத்தருக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் பாதிப்பு இருந்தால் மட்டுமே வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள் முடியும்... இதற்கும் ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ள நிலையில், நயன்தாரா இப்படி குழந்தை பெற்றது சட்டப்படி சரியா என்பதுதான் கடந்த ஒரு வாரமாகவே எழுந்து வரும் கேள்வி.. இந்த தம்பதி சட்ட விதிகளை மீறிவிட்டதாக கூறி, இது தொடர்பான சட்டப்பூர்வமான விவாதங்களும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன..

 சினைமுட்டை

சினைமுட்டை

இதனிடையே, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் இதை பற்றி பேசினார்.. நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விசாரிப்பது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவெடுப்பார்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து என்ன செய்ய வேண்டும்என்று முடிவெடுப்பார்கள், 21-36 வயதுடையவர்களே சினைமுட்டை தானம் செய்யவேண்டும் என்ற விதி உள்ள நிலையில், இது தொடர்பாக உள்ள பல்வேறு விதிகளை அவர்கள் பின்பற்றினார்களா என்றும் விளக்கம் கேட்கப்படும் என்றும் சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

 ஜெயில் 10 வருஷம்

ஜெயில் 10 வருஷம்

எனினும், இந்த விவகாரம் இருவிதமான தாக்கத்தை சோஷியல் மீடியாவில் ஏற்படுத்தி வருகிறது.. சட்டத்தை மீறிய நயன்தாரா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? ஒருவேளை வாடகை தாய் சட்டத்தை மீறியிருந்தால் நடிகை நயன்தாரா, அவரது கணவர் விக்‌னேஷ் சிவன் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை டாக்டர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஒரு தரப்பினர்.. மற்றொரு தரப்பினரோ, இதெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட ஒருவரின் உரிமையும், விருப்பமும் சார்ந்த விஷயம்.. இதற்குள் எப்படி 3வது நபர் நுழைந்து விசாரிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 ரூட் கிளியரா?

ரூட் கிளியரா?

இப்படி அனல்பறக்க விவாதங்களும், சர்ச்சைகளும் வெடித்து கிளம்பி கொண்டிருந்தால், இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருந்தால் உரிய சட்ட விதிகளைப் பின்பற்றினாரா? என்பதுதான் சர்ச்சைகளுக்கு வழி வகுத்துள்ளதால், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தாங்கள் மேற்கொண்ட சட்ட நடைமுறைகள் அனைத்தும் சரியானது தான் என்றும், சட்டத்திற்கு புறம்பாக எதுவும் நடக்கவில்லை என்றும் நயன்-சிவன் தம்பதிகள் ஒரு விளக்க அறிக்கை வெளியிட தயாராகி வருகின்றனராம்.

 நயன் + முக்கிய புள்ளி

நயன் + முக்கிய புள்ளி

இந்த தம்பதிகளுக்கு உதவியாக ஒரு முக்கிய புள்ளி இருந்து வருவதாக ஒரு பேச்சு உள்ளது.. இந்த அரசியல் புள்ளி ஏற்கனவே சினிமாவில் கால் பதித்தவர் என்பதால் இந்த தம்பதிகளுக்கு குடும்ப அளவில் நெருக்கமானவராம். எனவே இந்த பிரச்சினையை எப்படி அணுக வேண்டும் என்ற ஆலோசனையை அந்த முக்கிய புள்ளியிடம், இந்த திரைத் தம்பதி கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அவரும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இதனிடையே, இந்த விவகாரத்தை அரசின் உத்தரவின் பேரில் மருத்துவ அதிகாரிகள் குழு விசாரித்து வருவதால், அவர்களின் விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பு, நீங்கள் அறிக்கை வாசித்தால் அதுவும் சர்ச்சையாகலாம் என்றும், அதனால் இந்த விஷயத்தில் அமைதியாக இருங்கள், விசாரணை அறிக்கை வெளிவந்த பிறகு நீங்கள் பேசலாம் என்றும் நயன் - சிவன் தம்பதிகளுக்கு அவர்களது நலன் விரும்பிகள் அட்வைஸ் செய்துள்ளனராம்.

English summary
Can Nayanthara be interrogated and What are the legal issues: surrogacy issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X