தளபதி முகத்தை பார்க்க முடியலை.. சட்டசபையில் ஒரு ஸ்க்ரீன் வைங்க.. தவெக எம்எல்ஏ கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தவெக, திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. திமுக மீது தவெகவும், தவெக மீது திமுகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். தவெக எம்எல்ஏக்கள் நூதன கோரிக்கை வைத்து வருகிறார்கள். விஜய்யின் முகத்தை சரியாக பார்க்க முடியாததால் சட்டமன்றத்தில் ஒரு ஸ்க்ரீன் அமைக்க வேண்டுமென தவெக எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார்.

மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கல்லணை சட்டமன்றத்தில் பேசுகையில், "மாற்றம் என்ன என்று எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். தர்மத்தாயின் தவப்புதழ்வன். தாய்குலத்தின் தங்க மகன். ஏழை எளியோரின் துயர் துடைக்க வந்த எங்கள் வீட்டு பிள்ளை. ஒட்டு மொத்த தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை. அவர்களுக்கு நான் பதில் சொல்கிறேன். கடந்த 50 ஆண்டுகளாக எதிரெதிர் அரசியலில் பங்காளியாக இருந்தவர்கள், இன்றைக்கு பங்காளியாக மாற்றி அருகருகே அமர வைத்தாரே எங்கள் அழகிய தமிழ்மகன் அதுதான் மாற்றம்.

Thalapathy

இதுதான் மாற்றம்

இனி ஒரு போதும் சாதியாலும் மதத்தாலும் வெல்லவே முடியாது என்கிற நிலையை உருவாக்கியுள்ளாரே எங்கள் சரித்திர நாயகன். அதுதான் மாற்றம். அதிகாரம் சிலரின் உரிமை என்பதை மாற்றி ஆட்சியிலும் மாற்றம் அதிகாரத்திலும் மாற்றம் என சூளுரைத்து கனவோடு காத்திருந்த காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் தோழர்களை அமைச்சரவையில் அமரவைத்தாரே அதுதான் மாற்றம். அந்த புரட்சியை ஏற்படுத்திய நவீன அரசியல் தலைவர் அவர்.

மக்கள் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலே பேச தயங்கிய நிலையில், ஓலை குடிசையில் வாழும் ஏழை தாய், கோட்டையில் இருப்பது என் மகன் தான் என்கிறாரே அதுதான் மாற்றம். ஐபிஎல் பார்த்த இளைஞர்களையும், சீரியல் பார்த்த சிங்க பெண்களையும் இன்றைக்கு சீரியசாக சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்க வைத்து அரசியலில் பங்கெடுக்க வைத்தாரே அதுதான் மாற்றம்.

முகத்தை பார்க்க முடியவில்லை.

ஊழல் செய்தவர்களிடம் உம்முனும் கரப்ஷன் செய்தவர்களிடம் கம்முனும் இருந்தோம். இப்ப தளபதி ஆட்சியில் ஜம்முனு இருக்கோம் என்று மக்கள் சொல்கிறார்களே அது தான் மாற்றம். குறுநில மன்னர்களின் கூடாரமாக இருந்த சட்டமன்றத்தில் என்னை போன்ற சாமானியவர்களின் குரலை ஒலிக்க செய்தாரே அதுதான் மாற்றம். பெண்ணுரிமையை பேச்சில் தான் வைத்திருந்தனர். அதை அவையிலும், அமைச்சரவையிலும் அதிகம் பங்களிக்க வைத்தாரே பெரியாரின் பேரன் அதுதான் மாற்றம்.

கவர்ச்சிக்காக அல்லாமல் மக்களின் வளர்ச்சிக்காக திட்டம் கொடுக்கிறாரே அதுதான் மாற்றம். இதில் ஒரு சிலருக்கு ஏமாற்றமாக இருக்கும். இது அடுத்த தலைமுறைக்கான மாற்றம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என சொன்ன அண்ணாவின் வழிவந்தவர் எங்கள் அண்ணா. முன்பு தேடி தேடி பார்த்தவர் இப்போது எங்கள் அருகில் அமர்ந்துள்ளார். ஆனால் அவர் பேசுவதை சரியாக பார்க்க முடியவில்லை.

எதிர்க்கட்சியினர் சாமி அமைச்சர் என்று சொன்னபோது அவர் குலுங்கி குலுங்கி சிரித்தார் என்பதை செய்தியில் தான் பார்த்தோம். அவரின் அழகிய முகத்தை பார்ப்பதற்கு சட்டசபையில் ஒரு ஸ்க்ரீன் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டுமென தனிப்பட்ட கோரிக்கை வைக்கிறேன்" என்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+