சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கிட் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தில் முடித்து வைப்பு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: புனே ஆராய்ச்சி நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களை மட்டுமே கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

கொரோனா பரிசோதனைக்கு தரமற்ற ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவிகளுக்கு தடை விதித்து, புனே ஆராய்ச்சி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படும் தரமான பரிசோதனை கருவிகளை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

case for Rapid test kits tested by the Pune Research Institute: HC closed

இந்த வழக்கில் மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்ணய அமைப்பு தாக்கல் செய்த பதில் மனுவில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளும், கருவிகளும் புனேவில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே விற்பனைக்கான உரிமம் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2-வது நாளாக 2,000 ஆயிரத்தை தாண்டியது- 2,141 பேருக்கு கொரோனா- மேலும் 49 பேர் மரணம்தமிழகத்தில் 2-வது நாளாக 2,000 ஆயிரத்தை தாண்டியது- 2,141 பேருக்கு கொரோனா- மேலும் 49 பேர் மரணம்

அதேபோல, கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கிட்டை இறக்குமதி செய்ய சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் தவறான முடிவுகளை காட்டுவதாக வந்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 29 ம் தேதி விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு, பரிசோதனை கருவிகளை திரும்ப அனுப்ப உத்தரவிடப்பட்டதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, வழக்கை முடித்து உத்தரவிட்டது.

English summary
The Madras High Court had Finished a case of seeking the order the corona virus test of only the Rapid test kits tested by the Pune Research Institute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X